News December 26, 2024

புதிய சாதனை படைத்த கான்ஸ்டாஸ்

image

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் (19 வயது 85 நாட்கள்) அரைசதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை கான்ஸ்டாஸ் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், 60 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். குறைந்த வயதில் அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் இயன் கிரெய்க் (17 வயது 240 நாட்கள்) முதலிடத்தில் உள்ளார்.

News December 26, 2024

ஒரு மணி நேரத்திற்கு மேல் பலாத்காரம்.. அந்த சார் யார்?

image

அண்ணா பல்கலை.,யில் மாணவி வன்கொடுமை வழக்கு FIRயில் மற்றொரு அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. 1/2 மணி நேரத்திற்கும் மேலாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அயோக்கியன் ஞானசேகரன், நான் சொல்லும் சாருடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் மிரட்டி உள்ளான். யார் அந்த சார்!, பல்கலை., பேராசியர்? அல்லது வேறு நபரா? என தெரியவில்லை. இதனால், முக்கிய பிரமுகருக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

News December 26, 2024

‘மார்கோ’ படம் 5 நாட்களில் ₹50 கோடி வசூல்!

image

மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘மார்கோ’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்சன் படமாக ஹனிஃப் அடினி இயக்கியுள்ள இப்படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்துள்ளார். டிச., 20இல் வெளியான இப்படம் 5 நாட்களில் ₹50 கோடி வசூலித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள படக்குழு, தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல்.

News December 26, 2024

அவன் திமுககாரர் இல்லை, பிரியாணி கடைக்காரன்

image

அண்ணா பல்கலை.,யில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி திமுக நிர்வாகி என அண்ணாமலை சர்ச்சையை கிளப்பினார். இது அரசியல் ரீதியாக பெரும் புயலை கிளப்பியது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கைது செய்யப்பட்டவருக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் யாரோ ஒரு பிரியாணி கடைக்காரன்” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

News December 26, 2024

அன்புமணிக்கு அண்ணாமலை ஆதரவு!

image

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி பேசியதில் எந்த தவறும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “கோரிக்கைகளை நிறைவேற்றினால், நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்ற பாமகவின் நிலைபாட்டில் எந்த தவறும் கிடையாது. அனைத்து சமுதாயத்துக்கும் நியாயம் வேண்டும். இடஒதுக்கீடு பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வேண்டும்” என்றார்.

News December 26, 2024

பொங்கல் வேட்டி, சேலைகள் ரெடி!

image

பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றன. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 26, 2024

டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

image

மெட்ரோ ரயில்களை டிரைவர் இல்லாமல் இயக்கும் நோக்கில் சோதனை ஓட்டத்தை CMRL நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கென BEML நிறுவனம் தயாரித்துள்ள 3 பெட்டிகள் கொண்ட ரயில், பூந்தமல்லி டெப்போவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மணிக்கு 40 km – 80 km வரை வேகத்தில் பயணிக்கும் இந்த ரயிலை 2ஆம் கட்ட திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் ஓடவைத்து, பிரேக்கிங் சிஸ்டத்தை சோதிக்க உள்ளனர்.

News December 26, 2024

முடங்கியது ஏர்டெல் சேவை… தவிக்கும் பயனாளர்கள்

image

நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஏர்டெல் சேவை, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முடங்கியுள்ளது. கால்ஸ், நெட் பயன்பாடு என அனைத்துமே முடங்கியிருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏறக்குறைய 46% பயனர்கள் மொத்த சேவை தடைப்பட்டும், 32% பேர் சிக்னல் இல்லை என்றும், 22% பேர் மொபைல் இணைப்புச் சிக்கல்களை அனுபவிப்பதாகவும் தெரிவித்தனர். உங்களுக்கு வேலை செய்கிறதா?

News December 26, 2024

#ShameOnYouStalin பதாகையுடன் அண்ணாமலை

image

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட BJPயினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை என TN அரசுக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பொய் செய்தி பரப்பப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். அத்துடன், #ShameOnYouStalin என்ற பதாகையுடன் இருக்கும் போட்டோவையும் X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News December 26, 2024

தமிழகம் முழுவதும் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

image

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை ADMK சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த DMK அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். முன்னதாக, இன்று ADMK சார்பில் அண்ணா பல்கலை. முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

error: Content is protected !!