India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ளார். அந்த அணியில், பும்ரா (கேப்டன்), ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், மெண்டிஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, கஸ் அட்கின்சன், ரபடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோலி மற்றும் ரோஹித் இந்த அணியில் இடம் பெறவில்லை. இந்த அணி குறித்து கமெண்ட் பண்ணுங்க
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைத்துள்ளதாக கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை எனக் கூறியுள்ளார். இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருமணம் குறித்த கேள்விகளுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். தனக்கு ரொமான்ஸ், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பிடிக்கும் என்றும், ஆனால் திருமணம் செய்து கொள்வது பற்றிய சிந்தனை வெகுதூரத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இப்படி கூறுவதாகவும், இருப்பினும் கணிக்க முடியாத அளவிற்கு, வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
அன்புமணியை பற்றி விமர்சிப்பதே தேவையற்ற செயலாக நினைப்பதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு கொள்கை, ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டணி என அரசியல் செய்யும் அன்புமணி, அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டில் உள்நோக்கம் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக, திமுக மீது அபாண்டங்களை அள்ளி வீசுவதாகவும் சாடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், தந்தை பெயர். செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் உள்ள FIR-ஐ வெளியிடலாமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்ணின் புகாரில் எழுதப்பட்ட FIR மிகவும் மோசமான முறையில் இருந்தது.
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது. FIR வெளியிட்டதற்காக திமுகவினர் வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழகமே அண்ணா பல்கலை. சம்பவத்தால் அதிர்ந்துள்ளது. தகவல் வெளியாகி ஒரு நாள் கடந்து விட்ட நிலையில், இன்னும் திரைத்துறையினர் மவுனமாகவே இருக்கிறார்கள். அனைத்திலும் நடிகர்களின் கருத்தை நாம் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், ஒரு நேரத்தில் சமூகத்தில் நடைபெறும் அவலங்கள் குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர். ஆனால், இப்போது ஏன் ஒன்றுமே கூறவில்லை என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.
சினிமா பிரபலங்கள் உடன் நடந்த சந்திப்பில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி, எனக்கு சிறு வயதில் இருந்தே அல்லு அர்ஜுனை தெரியும். தனிப்பட்ட கருத்துகளை பொருட்படுத்தாமல், சட்டப்படி செயல்பட வேண்டும் என்பதே என் கொள்கை. நடிகர்கள் தங்கள் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும். சினிமாத்துறை பொறுப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். சினிமா பிரச்னைகளை தீர்க்க அமைச்சரவை துணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
நூற்றாண்டு காணும் நல்லக்கண்ணுவை போற்றிப் புகழ்ந்து வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார். தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியல்வாதிகள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர் எனவும் அவரை விஜய் புகழ்ந்துள்ளார். மேலும், தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர் என்றும் அவரை குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். போலீஸ் FIR எப்படி வெளிவந்தது; காவல் துறையினரை தவிர, வேறு யார் வெளியிட முடியும் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய அவர், திமுகவுடன் நெருக்கமாக இருந்ததால்தான் ஞானசேகரன் தொடர்ந்து குற்றங்களை செய்ததாகவும் சாடியுள்ளார்.
அண்ணா பல்கலை.,யில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரன், மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த 21ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். ஞானசேகரனின் செல்போனை ஆய்வகத்துக்கு அனுப்பி சோதித்ததில், 5 ஆபாச Videoக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.