India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மிக சிறிய வயதில் தாயை இழந்த மன்மோகன் சிங், அப்பா வழி பாட்டியால் வளர்க்கப்பட்டார். அவரது இளவயது கல்வி உருது மொழியில் அமைந்தது. பிரதமரான பின்னரும் உருதுவில் எழுதியே ஹிந்தி பேச்சுகளை அமைத்துக் கொண்டார். சில நேரங்களில் அவரது தாய்மொழியான பஞ்சாபியிலும் எழுதுவார். நாடு பிரிவினைக்கு பிறகு, இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது அவர் குடும்பம். படிப்பில் எப்போதும் அவர் முதல் மாணவர்.
மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து பெருமைமிகு பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர். நாடாளுமன்றத்திலும், மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் நுண்ணறிவு மிக்கவையாக இருந்தது. நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என புகழாரம் சூட்டிய மோடி, தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு இந்திய சந்தையை உலக மயமாக்களுக்கு திறந்துவிட்டார் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ். அப்போது, அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங். உலக மயமாக்கல் மூலம் இந்திய பொருளாதார சந்தை பெரும் மாற்றத்தை கண்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங். அப்போது, இந்திய சந்தையில் அந்நிய முதலீட்டையும் ஊக்குவித்து நாட்டின் வளர்ச்சிக்கு அவர் வித்திட்டார்.
மன்மோகன் சிங்கிற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் சுய நினைவை இழந்த நிலையில், இரவு 8.06 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட போதிலும், அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணிக்கு மன்மோகன் உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2004 முதல் 2014 வரை இந்திய நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் காலமானார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அவருடைய அமைதியான சுபாவம் மிகுந்த விமர்சனங்களை பெற்றது. 2014ஆம் ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவடைந்தபோது “வரலாறு என்னிடம் கருணை காட்டும்” என்று அவர் கூறினார். அவர் சொன்னது போலவே, அடுத்த சில ஆண்டுகளில் அவருடைய சாதனைகளை அனைவரும் பாராட்டத் தொடங்கினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து அறிய குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் ஹாஸ்பிடல் விரைந்துள்ளனர். சற்றுநேரத்தில் அவரது உடல்நிலை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று 100ஆவது பிறந்தநாள் கொண்டாடிய மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுவை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். விடுதலை போராட்ட வீரர், ஈடு இணையற்ற மக்கள் தலைவரை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி என அவர், தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நல்லக்கண்ணு ஆற்றிய தொண்டுகளை நினைவுகூர்ந்து, அரசியல் தலைவர்கள் வணங்கி போற்றிவரும் நிலையில், SKவின் சந்திப்பு பேசுபொருளாகியுள்ளது.
உ.பி.யில் மாணவனை நரபலி கொடுத்ததாக, கடந்த SEPல் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் நிகழ்ந்துள்ளது. விடுமுறை விட வேண்டும் என்பதற்காக, பள்ளியில் படித்த 9 வயது சிறுவனை டவலை வைத்து கழுத்தை நெறித்து கொன்றதாக, மற்றொரு மாணவன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை சிசிடிவி மூலம் உறுதி செய்த போலீசார், அவரை கைது செய்து, சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் ஒரிஜினல் கதையான ‘பிரேக் டவுன்’ ரிமேக் உரிமை பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லையாம். அந்த ஹாலிவுட் பட நிறுவனம் ₹100 கோடி கேட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடத்திய பின், ₹30 கோடிக்கு சம்மதித்துள்ளார்களாம். அந்த பணத்தை லைகா நிறுவனம் கொடுத்தால்தான் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.