News November 18, 2024

ராகிங் கொடுமையால் MBBS மாணவர் மயங்கி விழுந்து பலி!

image

குஜராத்தின் பதானில் உள்ள G.M.E.R.S மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததில் முதலாமாண்டு மாணவர் உயிரிழந்தார். கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் அனில் மெத்தானியா(18) என்ற மாணவரை சீனியர் மாணவர்கள் சிலர் 3 மணிநேரம் நிற்க வைத்து ராகிங் செய்துள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2024

பாஜகவில் இணைகிறாரா கைலாஷ் கெலாட்?

image

ஆம் ஆத்மியில் இருந்து ராஜினாமா செய்த டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி உள்துறை அமைச்சராக இருந்த அவர், ஆம் ஆத்மி கட்சியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகினார். இதனையடுத்து ‘வாஷிங் மெஷின் பாஜக’ என்ற கோஷத்தை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.

News November 18, 2024

ஜெயில் வேண்டாம்.. நடிகை கஸ்தூரி ஜாமீன் மனு

image

தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசிய நடிகை கஸ்தூரியை வரும் 29-ம் தேதி வரை காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரி, இன்று அவசர அவசரமாக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, தனது மாற்றுத்திறனாளி மகனை கவனிக்கும் சிங்கிள் மதர் தான் என்பதால், தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கஸ்தூரி நேற்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

News November 18, 2024

நடிகர் அர்ஜூன் வாழ்க்கையில் முக்கியமான 2 பெண்கள்!

image

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் அர்ஜூனுக்கு டாக்டர் எம்ஜிஆர் கல்வி நிறுவனம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அர்ஜூனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன் என் மீது நம்பிக்கை வைத்து வழி நடத்தியதில் எனது தாய், மனைவியின் பங்கு முக்கியமானது எனக் கூறினார்.

News November 18, 2024

என் முந்தைய காதல்கள் ரொம்பவே மோசம்!! நயன்தாரா

image

ஆவணப்படத்தில் தனது முந்தைய காதலை பற்றி நயன்தாரா பேசும் போது, முதல் காதல் நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது. எதிர் நபர் முழுதாக காதலிக்கிறார் என நம்பினேன். இதுவரை என் முந்தைய காதல்கள் பற்றி பேசியதில்லை. அக்கதைகள் எல்லாம் ரொம்பவே மோசம். இன்றுவரை என் ரிலேஷன்ஷிப்பில் சம்பந்தப்பட்ட ஆண்களிடம், நீங்கள் ஏன் இதை செய்தீர்கள், உண்மையில் என்ன நடந்தது? என்று யாரும் கேட்டதே இல்லை. இது நியாயமே இல்லை என்றார்.

News November 18, 2024

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி பதவியேற்பு!

image

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றியது. அதன் பின்னர், இலங்கையின் 3வது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் அரசியல் குடும்ப பின்னணி இல்லாத முதல் பெண் பிரதமர் ஹரிணி ஆவார்.

News November 18, 2024

கல்லூரிகளுக்கு தமிழக அரசு திடீர் எச்சரிக்கை!

image

பிஎச்டி மாணவர்கள், அவர்களின் கைடுகளால் மோசமாக நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநர் ஆர்.என். ரவியிடம் இதுதொடர்பாக சில மாணவர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், பிஎச்டி மாணவர்களை தனது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

News November 18, 2024

முதியோர் மாநிலமாக மாறும் அபாயம்: CM ஸ்டாலின்

image

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், வரிப் பகிர்வு விவகாரத்தில் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்று வந்த பயன்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக அவர் குற்றம்சாட்டினர். இந்த நிலை நீடித்தால், முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்பு, முதியோர் அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

News November 18, 2024

தமிழகத்தை தண்டிக்கும் செயல்: CM ஸ்டாலின் ஆவேசம்

image

தமிழகம் வந்துள்ள மத்திய நிதிக்குழு உறுப்பினர்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், “மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாய் 41% உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், கடந்த 4 ஆண்டுகளாக 33.16% வரி வருவாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது, தமிழகம் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் செயல். எனவே மாநிலங்களுக்கான வரி வருவாயை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்” எனக் கூறினார்.

News November 18, 2024

உலக டாப் பில்லியனர்கள் ஒரே ராசியில் பிறந்தவர்களா?

image

உலகின் பணக்காரர்களில் பலரும் ஒரே ராசியை சேர்ந்தவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? UK’வின் CashFloat நிறுவனம் 2022 ஆண்டின் உலக டாப் பில்லியனர்களின் தகவல்கள் அடிப்படையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், துலாம் ராசியில் (12%) தான் பெரும்பாலான பணக்காரர்கள் பிறந்திருக்கிறார்கள். இதில், கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவை போல் இல்லாமல் வெளிநாடுகளில் பிறப்பு, மதத்தை வைத்து ஜாதகம் முடிவு செய்யப்படுகிறது.