India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<
பெண்களின் ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய தோஷம் உள்ள பெண்கள், சனிக்கிழமையில் விரதமிருந்து ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கு சென்று செப்பினால் செய்யப்பட்ட கருடனுக்கு மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, அர்ச்சனை செய்து, விளக்கேற்றி, ஸ்ரீகருட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் RN.ரவி இன்று ஆய்வு செய்யவுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களே வேந்தர்களாக செயல்படுகின்றனர். இந்நிலையில், சிசிடிவி ஏன் வேலை செய்யவில்லை? கேட் செக்யூரிட்டிகளை கடந்து குற்றவாளி உள்ளே நுழைந்தது எப்படி போன்றவற்றை ஆளுநர் இன்று ஆய்வு செய்கிறார்.
குளிர் காலத்தில் முகப்பருக்கள் வராமல் இருப்பதை தவிர்க்க சில டிப்ஸ் ◦ சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எண்ணெய் சருமமாக இருந்தால் அடிக்கடி முகத்தைக் கழுவவும் ◦ கற்றாழை ஜெல், முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர், சந்தனத்தைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம் ◦ வைட்டமின் சி, வைட்டமின் ஏ நிறைந்த பழங்களை எடுத்து கொள்ளலாம் ◦ தினமும் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் ◦ கிரீம்களை தவிர்க்கவும்
தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரியில் மழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்தின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் பேரணிக்கு தேமுதிக ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த பகுதியான கோயம்பேட்டில் பேரணி நடைபெற்றால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனால், ஏற்கெனவே தேமுதிக தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.
இந்தியா -ஆஸி., போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மெல்பேர்ன் சென்றுள்ளார். அங்கு டெஸ்ட் அணி கேப்டன் ரோஹித்தை சந்தித்து அவரின் டெஸ்ட் எதிர்காலம் குறித்து கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் WTC 2025 இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றால், சிட்னியில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டிதான் ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
மறைந்த மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அரைநாள் விடுமுறை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. 26ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில், ஜனவரி 1 வரை மத்திய அரசு துக்கம் அனுசரிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (28.12.2024) நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘விஜயகாந்த்’ மறைந்ததன் முதலாம் ஆண்டு நினைவு நாளின்று. திரைத்துறையில் வெற்றிநடை போட்டு பின்னாளில் அரசியல் களத்திலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகும் வரை உயர்ந்தவர் விஜயகாந்த். தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும் கேப்டன் குறித்த உங்களது பார்வையை பதிவு பண்ணுங்க.
விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது. நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.