News December 28, 2024

திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது: ராமதாஸ்

image

பாமக இடம்பெறும் கூட்டணிதான் 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. ஒருநாள்கூட இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. அடுத்து நம்முடைய கூட்டணி ஆட்சிதான். கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முடிவோடு தேர்தல் பணி தொடங்க வேண்டும்” என்றார்.

News December 28, 2024

ஸ்பெயின் அருகே படகு விபத்து: பலி 69ஆக உயர்வு

image

ஸ்பெயின் அருகே நேரிட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு 80 பேருடன் படகு சென்றது. அந்தப் படகு நடுக்கடலில் கடந்த 19ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் மட்டுமே நீந்தி கரை சேர்ந்ததாகவும், எஞ்சியோர் இறந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரில் பலர் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.

News December 28, 2024

நிதிஷ் வாழ்க்கையில் அவரது அப்பாதான் ஹீரோ..!

image

நிதிஷ்குமார் ரெட்டியின் சதத்தை இன்று நாடே கொண்டாடி வரும் நிலையில், அவரது கடந்த கால பேட்டிகள் மீண்டும் கவனம் பெறுகின்றன. ‘‘சிறுவயதில் விளையாட்டாக கிரிக்கெட் ஆடத் தொடங்கினேன். ஆனால், அப்பா எனக்காக அவரது வேலை உள்பட பலவற்றை தியாகம் செய்தார். பணக் கஷ்டத்தால் அவர் அழுததை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அப்போது முதல் கிரிக்கெட்டை சீரியஸ் ஆக விளையாடத் தொடங்கினேன்’’ என நிதிஷ் பேசியுள்ளார்.

News December 28, 2024

பாமகவில் புயலை கிளப்பிய முகுந்தன் பரசுராமன் யார்?

image

முகுந்தன் பரசுராமன், பாமக நிறுவனர் ராமதாஸின் மகளான ஸ்ரீகாந்தியின் மகன் ஆவார். முகுந்தன் பரசுராமனுக்கு, சில மாதங்களுக்கு முன்பு ஊடக பேரவை மாநிலச் செயலாளராகப் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தனது சகோதரி மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி, பனையூரில் தனியாக ஆபீஸ், செல்போன் எண்ணை அறிவித்துவிட்டு பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

News December 28, 2024

குடும்பப் பிரச்னை வீதிக்கு வந்தது

image

டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாள்களாக குடும்பப் பிரச்னை நிலவுவதாகக் கூறப்படுகிறது. 2 பேரும் சரியாக பேசிக் கொள்வதில்லை என்றும், கட்சியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் பனிப்போர் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. பாமக சார்பில் அறிக்கை வெளியிடுவதிலும் 2 பேர் இடையே போட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுவே புதுச்சேரி கூட்டத்தில் மோதலாக வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

News December 28, 2024

பாமகவில் அதிகாரம் யாருக்கு?

image

வன்னியர் சமூகத்திற்காக பல போராட்டங்களை முன்னெடுத்து அதன் அடிப்படையில் பாமக என்ற கட்சியை கட்டமைத்தவர் ராமதாஸ். பல ஆண்டுகளாக ஜி.கே.மணி கட்சியின் தலைவராக செயல்பட்டபோதும், மொத்த அதிகாரமும் ராமதாசிடமே இருந்தது. கட்சியில், ஆட்சியில் பொறுப்புகள் இல்லாதபோதும் ராமதாஸ்தான் அதிகார மையமாக இருந்து வருகிறார். தற்போது அன்புமணி தலைவராக இருக்கும் நிலையில் தந்தை, மகன் இடையே அதிகாரப் போட்டி எழுந்துள்ளது.

News December 28, 2024

களத்தில் இறங்கி கருத்து கேட்ட ஆளுநர்

image

சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் ஆளுநர் RN.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் ஆய்வு செய்தார். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கங்களை பெற்ற அவர், மாணவர்களிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

News December 28, 2024

ஒவ்வொரு கிராமத்திலும் ஒலிக்கும் Way2Newsஇன் குரல்

image

9 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில்தான் உணர்ச்சிமிக்க பயணத்தை தொடங்கியது Way2News. இன்று லட்சக்கணக்கான மக்கள், சினிமா & அரசியல் பிரபலங்கள் Way2Newsஐ பயன்படுத்துகின்றனர். மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் எங்களது குரல் ஒலிப்பதையறிந்து பெருமை கொள்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய வெகுதூர பயணத்தில் நீங்களும் எங்களது கரம்பிடித்து நடப்பீர்கள் என நம்புகிறோம். இந்த மாபெரும் வெற்றியை தந்த உங்களுக்கு நன்றி.

News December 28, 2024

மாணவிக்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை

image

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவியின் FIR வெளியானதால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்க, TN அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மாண்பைப் பாதுகாக்கும் வகையில் FIR எழுதப்பட வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், மாணவியிடம் எந்த வகையான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும், அவர் தொடர்ந்து படிக்கத் தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

News December 28, 2024

‘Nigambodh Ghat’ பற்றி தெரியுமா?

image

மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டுள்ள நிகம்போத் காட் (Nigambodh Ghat) குறித்து இணையத்தில் தேடல் அதிகரித்துள்ளது. இது, தலைநகர் டெல்லி NCRஇல் உள்ள 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான தகன மேடை ஆகும். யமுனை ஆற்றின் கரையோரத்தில் உள்ள இங்கு சமய சடங்குகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பாரத நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முப்படை மரியாதையுடன் அங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!