News December 29, 2024

மரண பயத்தை போக்கும் கைலாசநாதர்!

image

அப்பரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் என்ற புகழைக் கொண்டது காஞ்சி கைலாசநாதர் கோயில். கி.பி. 700இல் 2ஆம் நரசிம்ம வர்மனால் நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில் இது. மணற்கற்களால் ஆன இக்கோயிலின் கருவறையில் மூலவர் 16 பட்டை லிங்கமாக உள்ளார். ஈசனின் 58 கோயில்கள் ஒருங்கே காட்சித் தரும் புனர்ஜனனி தத்துவ திருத்தலமான இங்கு சென்று, வில்வ இலை மாலை சாற்றி வணங்கினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

News December 29, 2024

ராமதாஸ் எடுத்த முக்கிய முடிவு

image

பாமகவில், தேர்தல் கூட்டணி முடிவுகளை இனி ராமதாஸ் மட்டுமே எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. <<15002794>>ராமதாஸ் – அன்புமணி இடையேயான பனிப்போர்<<>>, நேற்று பொதுக்குழுவில் உச்சத்தை எட்டி வார்த்தை போர் நடந்தது. இதனால், தனி ஆபீஸ் முடிவு வரை அன்புமணி சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்ய மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வரும் நிலையில், அன்புமணி ஆதரவாளர்கள் பனையூர் ஆபீஸுக்கு படையெடுத்து வருகின்றனர்.

News December 29, 2024

டைடல் நியோ பூங்கா இன்று திறப்பு

image

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் நியோ பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார். தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு முதல்வர் கள ஆய்வு மேற்கொள்கிறார். அந்த வகையில், 63,000 சதுர அடி பரப்பளவில் ₹30 கோடியில் காட்டப்பட்டுள்ள டைட்டல் நியோ பூங்காவை திறந்து வைக்கிறார். அதேபோல, புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை நாளை தொடங்கி வைக்கிறார்.

News December 29, 2024

விமான விபத்துக்கு காரணம் என்ன?

image

தென் கொரியாவின் முவான் நகரில் ஏற்பட்ட விமான விபத்துக்கு landing gear செயலிழந்ததுதான் காரணம் என்று கருதப்படுகிறது. பேங்காக் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் முவான் நகரில் தரையிறங்க முயற்சித்தபோது சக்கரங்கள் (landing gear) வெளியே வரவில்லை. இதனால், சக்கரங்கள் இல்லாமல் தரையில் மோதிய விமானம், நிற்க முடியாமல் சுவற்றில் மோதியது. இதில், 181 பயணிகள் இருந்தனர்.

News December 29, 2024

தபால் துறையை மேம்படுத்த திட்டம்

image

தபால் துறையை லாபம் ஈட்டக்கூடியதாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அதிகமான வாடிக்கையாளர்களை பெறுவதுடன், அவர்களை தக்கவைப்பது மற்றும் செயல்படும் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அடுத்த 7 ஆண்டுகளில் தொழில்துறை போட்டிகளை சமாளிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

News December 29, 2024

பாகிஸ்தான் அணி கையில் இந்தியாவின் WTC கனவு

image

இந்தியாவின் WTC இறுதிப்போட்டி கனவு இப்போது பாகிஸ்தான் கைகளில் உள்ளது. PAK-SA முதல் டெஸ்ட் போட்டியில், SA வெற்றி பெற 148 ரன்களும், PAK வெற்றி பெற 7 விக்கெட்களும் தேவை. 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் SA 27/3 எடுத்துள்ளது. இன்னும் 121 ரன்கள் எடுத்தால் SA WTC இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால் SA தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

News December 29, 2024

பல நன்மைகளை கொடுக்கும் ‘8’ வடிவ வாக்கிங்

image

8 வடிவ நடைப்பயிற்சி சித்த மருத்து கட்டமைப்பிற்குள் வரும் வர்ம மருத்துவமாகும். 8 வடிவத்தில் பாதையை அமைத்து, கூழாங்கற்களை பதித்து வெறும் கால்களில் நடக்கும் போது, பல நன்மைகள் உண்டாக்குகிறது ✦ உடல் எடை குறையும் ✦ சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் ✦ உடல், மனச்சோர்வை நீங்கி உற்சாகம் கிடைக்கும் ✦ கால் முட்டி வலி, இடுப்பு வலி இருப்பவர்கள் இப்பயிற்சி அறிவுறுத்துப்படுகிறது. SHARE IT

News December 29, 2024

பொங்கல் பரிசுடன் ₹1000 வருமா?

image

பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்குவதற்கான ஆணை நேற்று வெளியானது. ஆனால், அதில் ₹1000 ரொக்கம் வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏன் பரிசுப் பணம் வழங்கப்படவில்லை என்ற தகவல் கூட அரசிடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை தனி அறிவிப்பாக கூட அது வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

News December 29, 2024

விராட்டுடன் புகைப்படம் எடுத்த நிதிஷ் Family

image

இந்திய அணி வீரர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆஸி., அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி சதம் அடித்த பின் அவரது ஐடியல் விராட் உடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். ரசிகராக இருந்து அந்த ஃபேவரைட் வீரரின் கைகளில் அறிமுக தொப்பியை பெற்று பேட்டிங்கில் அபாரமாக ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

News December 29, 2024

“பஞ்சு சாட்டை நாடகம் வெட்கக்கேடானது”

image

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக ஐடி விங் கூட்டத்தில் கனிமொழி எம்.பி கலந்துரையாடினார். அப்போது அவர், “பாஜகவின் மாநில தலைவர் பஞ்சு சாட்டை நாடகம் வெட்ககேடானது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவான செயல். மத்திய நிதி அமைச்சர் ஒவ்வொரு முறையும் பேசும் போது ஒன்றை மறக்காமல் சொல்கிறார். அது இந்தி படிக்கவில்லை என்று, ஆனால் அவரது கல்வி சான்றிதழில் இந்தி படித்திருப்பதை மறைத்து கூறி வருகிறார்” என்றார்.

error: Content is protected !!