News December 29, 2024

நாளை விண்ணில் ஏவப்படும் PSLV சி-60 ராக்கெட்

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணி 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்றிரவு 8.58 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஸ்பேடெக்ஸ் – A & B ஆகிய இரு சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்லவுள்ளது. பூமியில் இருந்து 470 km உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் இந்த இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளது.

News December 29, 2024

பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

image

முவான் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தென் கொரியாவின் முவானுக்கு சென்ற போயிங் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 181 பேர் பயணம் செய்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

News December 29, 2024

அமைச்சர் செந்தில் பாலாஜி சபதம்!

image

2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனச் செந்தில் பாலாஜி பந்தயம் கட்டியுள்ளார். கோவையில் நடந்த DMK ஐடி விங் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டச் செயலாளர்களுடன் பந்தயம் கட்டினார். அதிமுகவின் கோட்டையாகப் பார்க்கப்படும் கோவையில் தற்போது ஒரு MLA கூட திமுகவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News December 29, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு எப்போது?

image

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக தாமதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. புத்தாண்டு நெருங்கும் வேளையில், DA உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு 2025 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி அறிவிப்பு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகளின் அடிப்படையில் அமைவதால் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

News December 29, 2024

‘கூலி’ திரைப்படம் குறித்து ரஜினி தந்த அப்டேட்

image

‘கூலி’ படப்பிடிப்பு 70% முடிவடைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் 171வது திரைப்படமான ‘கூலி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் 2025 மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

News December 29, 2024

முடிவுக்கு வரும் தந்தை – மகன் மோதல்!

image

ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தைலாபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த சந்திப்பின் போது PMK மூத்த நிர்வாகிகள் சிலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. அக்கா மகனுக்குக் கட்சியில் பொறுப்பு வழங்கியதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவிலிருந்து பாதியில் வெளியேறினார். அவருடன் GK மணி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.

News December 29, 2024

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி காலமானார்

image

மேல்மலையனூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி ராஜதத்தன் உடல் நலக்குறைவால் காலமானார். 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தமிழ்மொழி ராஜதத்தன் மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 29, 2024

மலையை அப்படியே உணவாக சாப்பிடும் ஊர் மக்கள்..

image

ஒரு மலையை சாப்பிட முடியுமா? ஆம், நாங்கள் காலம் காலமாக சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள், ஈரான் அருகே இருக்கும் ஹார்முஸ் தீவு மக்கள். இவர்கள் உணவு – மீன் மசாலாவாக அங்குள்ள மலையை பயன்படுத்துகிறார்கள். ஏன், பிரேட்டும் தயாரிக்கிறார்கள். ரெயின்போ வண்ணத்தில் காட்சியளிக்கும் இந்த ஹார்முஸ் மலையில் வெவ்வேறு உப்பு தாதுக்கள் படிந்திருப்பதால், உலகிலேயே சாப்பிட கூடிய ஒரு மலையாக உள்ளது. டேஸ்ட் பண்ணிடுவோமா?

News December 29, 2024

விசாரணை நடந்த வரும் தேசிய மகளிர் ஆணையக் குழு

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இதன்படி விசாரணை நடத்த NCW ஆணையத்தின் தலைவர் விஜயா ரகத்கர் அமைத்துள்ள 2 பேர் கொண்ட குழு நாளை சென்னை வரவுள்ளது. இக்குழு பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தவுள்ளது.

News December 29, 2024

‘வணங்கான்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்?

image

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விடாமுயற்சி, கேம் சேஞ்சர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளதால், தற்போது இப்படத்திற்கு திரைகளில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!