India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. குருப் டி நிலையிலான அந்தப் பதவிகளுக்கு ஜனவரியில் ரயில்வே அறிவிப்பு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் டிரேக் மெயின்டெய்னர். பாயின்ட்ஸ்மேன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் ஆகும். வேலைக்கான கல்வித் தகுதி 10, ITI எனக் கூறப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகும்.
இந்தியா-ஆஸி., இடையிலான BGT தொடரின் 4வது டெஸ்ட் போட்டி, வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரம் காட்டும் சூழலில், ஆட்டத்தை விறுவிறுப்பாக நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளமும் குவிந்து வருகிறது. அந்த வகையில் போட்டியின் முதல் 4 நாளில் 2.99 லட்சம் ரசிகர்கள் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். BGT வரலாற்றில் இவ்வளவு ரசிகர்கள் போட்டியை நேரில் காண்பது இதுவே முதல்முறை.
அனைத்து அரசுப் பஸ்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக இந்தத் திட்டம், சென்னையில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தி.க தலைவர் வீரமணி கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து கேரள மாநிலம் வைக்கத்திற்கு 2 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் வீட்டு உபயோக மின் கட்டணம் குறைவு என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதனை பொய் என அம்பலப்படுத்தி உள்ளது அறப்போர் இயக்கம். கடந்த 2019-20-ம் ஆண்டில் 100 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.2.08 என கட்டணம் இருந்த நிலையில், அதுவே 2022-23-ம் ஆண்டில் ரூ.2.81 ஆக அதிகரித்ததாகவும், இதனால் 4-வது ரேங்கில் இருந்து 9-வது ரேங்குக்கு தமிழகம் இறங்கியதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
சுதா கொங்கராவின் நட்பு காரணமாகவே ‘SK 25’ல் நடிக்க ஒப்புக் கொண்டதாக அதர்வா தெரிவித்துள்ளார். ‘பரதேசி’ படத்தில் பணியாற்றிய போது நட்பு ஏற்பட்டதாகவும், இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம் என சுதா முன்பே தெரிவித்து இருந்ததாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், ‘SK 25’ படத்தில் வழங்கப்பட்டுள்ள கேரக்டர், சினிமாவில் தனக்கு திருப்புமுனையை தரக்கூடியதாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
38 பேரை பலி கொண்ட விமான விபத்திற்கு ரஷ்யாவின் தாக்குதலே காரணம் என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், ரஷ்யா இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, ரஷ்யாவின் வான் பரப்பிற்குள் இந்த விபத்து நடைபெற்றதற்கு புதின் நேற்று மன்னிப்பு கோரினார். இருப்பினும், விபத்திற்கு பொறுப்பேற்கவில்லை.
ஒவ்வொரு மாதமும் 14 (அ) 15 தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 2025 ஜன. 14, 15, 16 நாள்கள் பொங்கலை முன்னிட்டு விடுமுறையாகும். இதனால் மகளிர் உரிமைத் தொகை எப்போது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பொங்கலுக்கு முன்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என பதிலளித்துள்ளார்.
முகம், உடல் அமைப்பு என அனைத்திலும் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்களுக்கு, ஒரே மாதிரி கைரேகைகள் இருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மைதான். கருப்பையில் சிசுவின் வளர்ச்சியில் சூழல் ஏற்படுத்தும் தாக்கங்களை பொறுத்தே, அதன் கைரேகைகள் அமையுமாம். தொப்புள் கொடியின் நீளம், கருவில் உள்ள நிலை மற்றும் விரல்களின் வளர்ச்சி விகிதம் ஆகியவையே கைரேகைகளை தீர்மானிக்கின்றன.
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்காெடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிராெலியாக, பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை இன்று புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அடையாள அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதேபோல், பயோமெட்ரிக் பதிவை கொண்டு வர வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இ-சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 1998 செப்.1 முதல் ஓய்வு பெற்றவர்கள், VRS வாங்கியோர், இறந்த பணியாளர்களின் வாரிசுகள் ஆகியோர் 2025 மார்ச் 31க்குள் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதிய ஆணை படிவம், பேங்க் பாஸ்புக், ஆதார், ஃபோட்டோ, மொபைல் எண்ணுடன் இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.