India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 மற்றும் ஒரு முறை ரூ.6,000 ஊக்கத் தொகை வழங்கும் PM இன்டர்ன்ஷிப் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு இதுவரை நாடு முழுவதும் இருந்து 6.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக மத்திய பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், 1.27 லட்சம் வேலைவாய்ப்புகளே இருப்பதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
2025இல் 10 முறை சுக்கிரன் தனது இடத்தை மாற்றுவதால் 3 ராசிகளுக்கு யோகம் அடிக்க போகிறது. 1) மேஷம்: ஆரோக்கியம் மேம்படும். திருமண யோகம் அடிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம் கொட்டும். 2) விருச்சிகம்: வருமானம் பல மடங்கு உயரும். சிக்கியிருந்த பணத்தை மீட்பீர்கள். தாம்பத்ய பந்தம் வலுப்பெறும். 3) தனுசு: தீராத நோய்கள் தீரும். உடல் வலிமையும், ஆளுமையும் அதிகரிக்கும். கூரையை பிய்த்து பணம் கொட்டும்.
புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த மாணவிகளின் வங்கிக் கணக்கிலும் மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்யும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தை ஸ்டாலின், தூத்துக்குடியில் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற தத்துவத்தை வழங்கிய பேராசான் எனக் கூறியுள்ளார். மேலும், ஆழிப்பேரலையை தாங்கி நிற்கும் திருவள்ளுவர் சிலையை போல, தமிழ்நாடும் தடைகளை தகர்க்கும் என கூறிய ஸ்டாலின், திருக்குறளை கொண்டே எதேச்சதிகாரத்தை வெல்வோம் எனவும் சூளுரைத்தார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி முதல் அந்த ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு சக நடிகர்கள் போன் செய்தபோது, அதை அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஓட்டலுக்கு வந்து அறையில் பார்த்தபோது சடலமாக கிடந்தார். அவர் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.
பூமியின் சுழற்சி வேகம் மாறுபட்டு வருகிறது. முன்பை விட மெதுவாக சுழல்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, ஒரு நாளின் நீளம், ஒரு நூற்றாண்டுக்கு 1.8 விநாடிகள் என்ற அளவில் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால், வரும் காலங்களில் ஒரு நாளின் நீளம் 24 மணி நேரம் என்ற அளவை கடந்து விடும் எனக் கூறுகின்றனர். 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 1 நாள் 21 மணி நேரம் மட்டுமே நீடித்தது.
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, பேரணி நடத்த தேமுதிக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், போலீசார் இதற்கு அனுமதி தரவில்லை. இதனை விமர்சித்த பிரேமலதா, தேமுதிகவை கண்டு திமுக அஞ்சுவதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சேகர்பாபு, அச்சம் என்றால் என்னவென்றே தெரியாத இயக்கம் திமுக என்றும், தற்போது மறப்போம், மன்னிப்போம் என்ற பாதையில் நடைபோட்டு வருவதாகவும் கூறினார்.
நேற்று சமந்தா Baby Bump உடன் இருக்கும் போட்டோக்கள் வைரலான நிலையில், இன்று கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒரு சிலரால் AI தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சியான AI வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சினிமா ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு, SA அணி முதல் ஆளாக தேர்வாகியுள்ளது. இதனால், அடுத்த இடங்களில் இருக்கும் IND- AUS இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட்டை ட்ரா செய்து, சிட்னியில் அடுத்து நடைபெற உள்ள போட்டியை, IND கட்டாயம் வெல்ல வேண்டும். அதேபோல், இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட்டிலும் AUS அணி தோற்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்தியா ஃபைனலுக்குச் செல்லும்.
தமிழகத்தில் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 2019-20இல் ரூ.4.7 <<15014162>>மின் கட்டணம்<<>> வசூலிக்கப்பட்டது. அதுவே 2022-23-இல் ரூ.5.69 ஆக அதிகரித்துள்ளது. 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.5.33 வசூலிக்கப்பட்ட நிலையில், 2022-23-இல் அது ரூ.7.29 ஆக அதிகரித்துள்ளது. 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.5.65 ஆக இருந்த கட்டணம், 2022-23இல் ரூ.8.22 ஆக அதிகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.