News December 30, 2024

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்யலாம் என RMC கணித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மழை பெய்யலாம் என முன்னறிவித்திருந்தது.

News December 30, 2024

பாலிவுட் செல்லும் வெங்கட் பிரபு?

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘GOAT’ படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் SK படம் ஒன்று பேச்சுவார்த்தையில் உள்ளது. இப்படத்தின் கதையை எழுதி வருவதாக பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார். இதன்பிறகு, பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரை நடிக்க வைக்க முதற்கட்டப் பேச்சுவார்த்தை மட்டும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News December 30, 2024

இருண்ட டிசம்பர்.. 236 பேர் பலி

image

2024 டிசம்பர் மாதத்தில் நடந்த விமான விபத்தில் மட்டும் இதுவரை 236 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் இன்று நடந்த விபத்தில் 176 பேர் மாண்டனர். அதேபோல், கடந்த 25ஆம் ஆண்டு அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் விபத்துகுள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 4 உலக நாடுகளில் 19 பேர் பலியாகினர். இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

News December 30, 2024

10 மாதங்களில் 62,637 டிரைவிங் லைசென்ஸ் ரத்து!

image

TNல் கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட 62,637 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. அதிவேகம், மது அருந்துதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக RTI கேள்விக்கு விளக்கமளித்துள்ளது. இதனால், மாநிலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

News December 30, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 30 ▶மார்கழி- 15 ▶கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 PM – 8:30 PM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶சூலம்: கிழக்கு ▶திதி: அமாவாஸ்யை ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: மூலம் ▶சந்திராஷ்டமம்: பரணி

News December 30, 2024

ரோஹித் ஓய்வு பெறலாம்: AUS முன்னாள் வீரர்

image

தான் தேர்வுக் குழுவில் இருந்தால் ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு அளிப்பேன் என AUS முன்னாள் வீரர் மார்க் வாஹ் தெரிவித்துள்ளார். கடந்த 14 இன்னிங்ஸில் அவரது சராசரி 11ஆகவே இருப்பதாகவும், அதனால் அடுத்த டெஸ்ட்டில் பும்ராவை கேப்டனாக நியமிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனைத்து சிறந்த வீரர்களுக்கு ஃபார்ம் அவுட் என்பது நடக்க கூடிய ஒன்றுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வை ரத்து செய்தது TNPSC

image

டிச.14ல் நடந்த 2ஆம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது. கணினிவழித் தேர்வாக நடந்த இதனை 4,186 தேர்வர்கள் எழுதிய நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மீண்டும் பிப்.22ல் OMR முறையில் தேர்வு நடத்தப்படும் எனவும், டிச.14ம் தேதி நடந்த தேர்வில் பங்கேற்காதவர்களும் மறுத்தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

News December 30, 2024

2026ல் மீண்டும் திமுக ஆட்சி: CM ஸ்டாலின் உறுதி

image

2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட நிர்வாகிகள் உறுதியேற்றதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், தூத்துக்குடியில் நிர்வாகிகளை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார். அத்துடன், #களம்2026ல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட, தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் என நிர்வாகிகள் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News December 30, 2024

பாலுமகேந்திரா மீது எனக்கு வன்மம் இருந்தது: பாலா

image

பாலுமகேந்திராவிடம் அசிஸ்டென்ட்டாக சேர்ந்த புதிதில், தன்னை உதாசீனப்படுத்தியதால் அவர் மீது தனக்கு கோபம் ஏற்பட்டதாக பாலா கூறியுள்ளார். ஒருநாள் அவர் தன்னை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என வன்மம் வைத்ததாக கூறிய அவர், ஒரு தெலுங்கு படத்தில் அனைத்து உதவி இயக்குநர்களும் வேலையை உதறிவிட்டு போக, தான் மட்டும் ஒற்றையாக நின்று எல்லா வேலையையும் முடித்துக் காட்டியதாக பாலா கூறினார்.

error: Content is protected !!