News December 30, 2024

சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: அண்ணாமலை

image

சென்னை அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் போராட முன்வர வேண்டும் என அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் R.N.ரவியை, TVK தலைவர் விஜய் சந்தித்து புகாரளித்ததை வரவேற்றுள்ள அவர், நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், வழக்கை திசைதிருப்ப திமுக அரசு தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News December 30, 2024

அண்ணா பல்கலை FIR லீக் ஆனது எப்படி?

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான FIR லீக் ஆனது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில், மாணவியின் பெயர் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இருந்தன. IPCயில் இருந்து BNSக்கு மாற்றும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால்தான் இந்த குளறுபடி நடைபெற்றதாக NIC விளக்கம் அளித்துள்ளது. இது ஒரு அலட்சியமான பதில் என்று நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.

News December 30, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

இல்லாத ஒன்றை கேட்டால் எப்படி? கோவி.செழியன்

image

இல்லாத ஒன்றை கேட்டு EPS அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை., விவகாரத்தில் #யார்_அந்த_SIR? எனக் கேட்டு அதிமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர், திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் துணிச்சலாக போலீசில் புகாரளிப்பதாகவும், அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இபிஎஸ் இவ்வாறு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News December 30, 2024

ஆளுநர் மாளிகை வந்தார் விஜய்

image

தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பேசுவதற்காக சென்னை ராஜ் பவன் வந்தடைந்தார். 1 மணிக்கு அவர் ஆளுநரை நேரில் சந்தித்து உரையாடவிருக்கிறார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தான் அரணாக இருப்பேன் என்று பெண்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகவே அவர் ஆளுநரை சந்திக்க சென்றிருக்கிறார்.

News December 30, 2024

பாஜக புறக்கணிப்பதாக குஷ்பு குற்றச்சாட்டு

image

தமிழக பாஜக தன்னை எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். ”என்னை ஏன் அழைப்பதில்லை என்று தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குஷ்புவின் இந்த வெளிப்படையான பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை என்ன பதில் வைத்திடுக்கிறார்?

News December 30, 2024

ஐரோப்பா முழுவதும் இனி ஒரே Charger தான்!

image

Smartphone, Tablet உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு Type-C சார்ஜரை மட்டுமே பயன்படுத்தும் நடைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வந்துள்ளது. லேப்டாப்களுக்கு மட்டும் 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மின் கழிவுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் இதை பின்பற்ற முன்வந்துள்ள நிலையில், ஆப்பிள் மட்டும் சிறிது தயக்கம் காட்டி வருகிறது.

News December 30, 2024

வெற்றி விழா கொண்டாடிய ‘விடுதலை 2’ படம்

image

வெற்றிமாறன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘விடுதலை 2’ படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளது. தனியார் விடுதியில் நடந்த இந்த விழாவில் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், உதவி இயக்குநர்கள் கலந்துகொண்டனர். விழாவில், எல்ரெட் குமார் ஆளுயர மாலையை வெற்றிமாறனுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News December 30, 2024

2025 ராசிபலன்: இந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்

image

வரவிருக்கும் புத்தாண்டில் சனி மற்றும் குருவின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்து அவர்களது பொருளாதார நிலையை உயர்த்தவுள்ளன. குறிப்பாக மேஷம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசியினருக்கு நிதியோகம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு இந்தாண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் வாழ்வில் நிம்மதியும் கிடைக்கும்.

News December 30, 2024

இனியும் இந்தியாவிற்கு WTC வாய்ப்பு உள்ளதா?

image

தற்போது ஆஸி. 2-1 என BGT தொடரில் லீட் எடுத்துள்ளது. கடைசி சிட்னி மேட்சில் இந்தியா வெற்றி பெற்றால் WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா 10 வெற்றிகளுடன் 55.26 % பெறும். ஆஸி.யும் 10 வெற்றிகளுடன் இருக்கும். அடுத்த நடைபெறும் இலங்கை – ஆஸி. தொடரில், இலங்கை 2 போட்டிகளையும் வென்றால் மட்டுமே, இந்தியாவிற்கு WTC பைனலுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். அடுத்த போட்டியில் இந்தியா வெல்லுமா?

error: Content is protected !!