News October 27, 2025

விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

‘மொன்தா’ புயல் எதிரொலியால் சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம் மீன்பிடி துறைமுகங்களில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள் புயல் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பினர். இதனால், மீன் வரத்து குறைந்து சென்னையில் 1 கிலோ வஞ்சிரம் ₹1,300 – ₹1,400, பாறை ₹400 – ₹500, சீலா ₹600 -₹700, இறால் ₹400 – ₹500, நண்டு ₹300 – ₹400, சங்கரா ₹300 – ₹400-க்கு விற்பனையாகிறது.

News October 27, 2025

FLASH: ஷ்ரேயஸுக்கு ICU-வில் சிகிச்சை

image

இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் ஷ்ரேயஸ் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்ற IND Vs AUS இடையேயான கடைசி ஒருநாள் போட்டியின்போது, ஆஸி., வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, ஷ்ரேயஸ் நீண்ட தூரம் பின்னோக்கி ஓடி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த முயற்சியில் அவரது இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டு உட்புற ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News October 27, 2025

USA-வின் 100% வரியில் இருந்து தப்பியதா சீனா?

image

சீனா மீதான USA-ன் 100% வரி நவ.1-ல் அமலுக்கு வரவிருந்தது. இதுதொடர்பாக இரு நாடுகளும் 2 நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தின. அதில், முன்னேற்றமும் காணப்பட்டதால் வரியை உயர்த்தும் முடிவில் இருந்து USA பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அக்.30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கவுள்ளார். அன்றைய தினம் இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 27, 2025

ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் புஸ்ஸி ஆனந்த்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்தின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. SC-யின் தீர்ப்பின்படி, கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்மனுதாரராக கரூர் போலீஸ் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த தனது முன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

News October 27, 2025

சற்றுமுன்: இந்திய வீராங்கனை தற்கொலை

image

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய ஜூஜிட்சு வீராங்கனை ரோகிணி கலாம்(35) ம.பி.,யில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்த இவர், வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரி ரோஷிணி தெரிவித்துள்ளார். ரோகிணி கலாம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தற்கொலை தீர்வல்ல!

News October 27, 2025

கூவி கூவி அழைக்கும் அதிமுக? செல்லூர் ராஜு பதிலடி

image

கூட்டணிக்கு வாங்க என்று தவெகவை கூவி கூவி அதிமுக அழைப்பதாக TTV தினகரன் விமர்சித்திருந்தார். இதுதொடர்பான கேள்விக்கு, அரசியலில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக அதிமுகவை TTV தினகரன் விமர்சிப்பதாக செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சரியான நேரத்தில் யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட் என்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

Certificates தொலைஞ்சிடுச்சா? இதுல ஈஸியா வாங்கிக்கலாம்

image

தமிழக அரசின் e-pettagam செயலி உங்களிடம் இருந்தால் போதும். தொலைந்து போன உங்களுடைய 10,12-ம் வகுப்பு சான்றிதழ்கள், உயர்கல்வி, பட்டய படிப்பு சான்றிதழ்களை எளிதாக டவுன்லோடு செய்துகொள்ள முடியும். அத்துடன் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் கூட பதிவிறக்கம் செய்யலாம். அனைவருக்கும் பயன்படட்டுமே SHARE THIS.

News October 27, 2025

உலகின் மிகவும் பிரபலமான ஓவியங்கள் இதோ!

image

மனிதனின் ஆழமான எண்ணங்களை காகிதத்தில் வண்ணம் பூசி உயிர்பெற செய்யும் அதிசயமே ஓவியங்கள். டாவின்சி, வான்கோ, பிகாசோ என பல கலைஞர்கள் இந்த கலையை தங்களுக்கு சொந்தமாக்கி, உலகுக்கு பல அழியாத ஓவியங்களை தந்து சென்றுள்ளனர். அப்படி உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற, இன்றும் உயிர்ப்போடு இருக்கும் சில ஓவியங்களை காண மேலே ஸ்வைப் பண்ணுங்க…

News October 27, 2025

BREAKING: கூட்டணியை உறுதி செய்தார் CM ஸ்டாலின்

image

நாட்டின் வளர்ச்சிக்காக திமுகவும், காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில், காங்., நிர்வாகி ஸ்ரீராஜா சொக்கர் இல்ல திருமண விழாவில் பேசிய அவர், தன்னை மூத்த அண்ணனாக ராகுல் காந்தி ஏற்று கொண்டு இந்தியாவின் குரலாக ஒலிப்பதாக தெரிவித்தார். ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட்டு என திமுக, காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பேசப்பட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News October 27, 2025

‘சார்பட்டா பரம்பரை 2’: அப்டேட் கொடுத்த ஆர்யா!

image

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகி OTT-யில் நேரடியாக வெளியான ‘சார்பட்டா பரம்பரை’, ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி, பணிகள் தொடங்காமலேயே இருந்தது. ஆர்யா, பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த படம் முடிந்ததும், ‘சார்பட்டா பரம்பரை 2’-க்கான பணிகள் தொடங்கும் என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!