India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘2024ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இருண்ட வானத்தின் பின்னணியில் தடிமனான எழுத்துகளில் ‘கூகுள்’ என எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக ‘ஓ’ என்ற எழுத்து நள்ளிரவு 12 மணியை குறிக்கும் வகையில் கடிகாரத்தின் முள் இருக்கிறது. 2025ம் ஆண்டில் பிரகாசமாக இருப்போம். புதிய வாய்ப்புகள் நிறைந்த துவக்கமாக இருக்கட்டும் என்பதை குறிக்கிறது.
அண்மையில் டெல்லி சென்ற அண்ணாமலைக்கு அமித் ஷா போட்ட உத்தரவின் வெளிப்பாடே நேற்று அதிமுகவின் யார் அந்த சார்? போஸ்டர் போராட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாடு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அத்துடன், தமிழகத்தில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் உங்களால் எந்தக் கூட்டணிக் கதவும் அடைபடக்கூடாது என்றும் அண்ணாமலைக்கு அட்வைஸ் வந்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. இத பத்தி உங்க கமெண்ட் என்ன?
இந்தியா பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி ₹21,000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “10 ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி ₹2,000 கோடியாக இருந்தது. ப்ராக்ஸி போர், மின்காந்த போர், விண்வெளி போர், AI போர் என போர் முறைகள் மாறியுள்ளன. அவற்றுக்கு ஏற்றதாக இந்திய உற்பத்தி உபகரணங்கள் இருக்கின்றன” எனக் கூறினார்.
ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. அதற்காக, அடுத்த நாளும் இப்படியேதான் இருக்கப் போகிறது என்று துவண்டுபோகாமல் பாசிட்டிவாக காலையை தொடங்குவதே புத்துணர்ச்சியின் அடையாளம். ஒரு நாளுக்கே அப்படியென்றால், ஆண்டுக்கு எப்படி இருக்க வேண்டும்? 2025 புத்தாண்டை புதிய resolutionகளுடன் சந்தோஷமாக தொடங்குங்கள். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. HAPPY NEWYEAR
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. நேற்று ₹57,200ஆக இருந்த ஒரு சவரன் தங்கம், இன்று ₹56,880ஆக விற்பனையாகிறது. நேற்று ₹7,150ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ₹40 குறைந்து ₹7,110ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹98ஆக விற்பனையாகிறது.
FIRஇல் குறிப்பிடப்பட்டுள்ள ‘அந்த சார்’ விவகாரத்தில் காவல்துறை இன்னும் பதில் அளிக்காமல் இருப்பது ஏன் என இபிஎஸ் வினவியுள்ளார். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அமைச்சரும், காவல்துறையும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறி வருகிறது எனக் கூறிய அவர், மாணவிக்கு நீதி கிடைக்கவே அதிமுக போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாலிவுட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜோலி & பிராட் பிட் விவாகரத்து கோரி வழக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014இல் திருமணம் செய்த இருவரும் 2016இல் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். தற்போது, இருவருக்கும் பொதுவான சொத்துகளை பிரித்து கொள்ள இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களுக்கு 6 குழந்தைகள் இருப்பது கவனிக்கத்தக்கது.
சுனாமியையே எதிர்கொண்டு கம்பீரமாக நிற்கும் வள்ளுவர் சிலை பண்பாட்டின் குறியீடு என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை வெளியிட்ட அவர், ‘வள்ளுவர் சிலை வெள்ளி விழா’ எனது வாழ்நாள் பரிசு என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மாவட்டந்தோறும் திருக்குறள் பயிலரங்கம் அமைக்கப்படும் எனவும் டிச. மாதத்தின் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு ரோஹித் ஷர்மா தகுதியான பேட்ஸ்மேன் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ரோஹித் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. அவருடைய தற்போதைய தடுமாற்றத்தை சரி செய்ய பேட்டிங் பயிற்சியாளர் முயற்சிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் (ECI) தலையிட முடியாது என EPS கூறியுள்ளார். ‘இரட்டை இலை’ தொடர்பாக ECI எழுப்பிய கேள்விக்கு, ADMK பொதுச் செயலாளர் இபிஎஸ் எழுதிய கடிதத்தை டெல்லியில் டிச.19இல் சி.வி.சண்முகம் அளித்தார். அதில், 2022 ஜூலை 11இல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை ஆணையம் அங்கீகரித்துள்ளது எனவும், இரட்டை இலை தொடர்பாக இனி யார் மனுவையும் ஏற்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.