News December 31, 2024

BREAKING: சீமான் விடுவிப்பு

image

போலீசாரால் கைது செய்யப்பட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் <<15027812>>சீமான்<<>> சற்றுமுன்பு விடுவிக்கப்பட்டார்.

News December 31, 2024

Infosys வளாகத்தில் சிறுத்தை.. ஊழியர்களுக்கு WFH

image

மைசூரில் உள்ள Infosys நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலாவுவது கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சிறுத்தையின் நடமாட்டம் CCTV கேம்ராவில் பதிவானதை தொடர்ந்து, வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு நலன் கருதி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை இந்த வளாகத்தில் நுழைவது இது முதல்முறை அல்ல. 2011இல் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News December 31, 2024

விடுமுறை நாள்களில் ரேஷன் கடைகள் இயங்கும்

image

ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகுப்பு வழங்க ஏதுவாக விடுமுறை தினமான ஜன.3, 10 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்கும். இந்த விடுமுறையை ஈடுகட்ட ஜன.15, பிப்.22ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

News December 31, 2024

நாளை அஜித்தின் ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர்

image

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர் நாளை வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புத்தாண்டில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், ஆக்‌ஷன், காதல், காமெடி என FULL ENTERTAINMENTஆக ட்ரெய்லரை இன்னும் செதுக்க வேண்டும் என்பதால், இயக்குநர் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

News December 31, 2024

7 புயல்களுக்கு பின் குட் பை சொல்லும் பாலச்சந்திரன்

image

தென் மண்டல வானிலை மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் பிப்ரவரி 28ஆம் தேதி உடன் ஓய்வுபெறுகிறார். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பதவியேற்ற அவர் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய கஜா புயல், ஃபனி புயல், நிவர் புயல், புரேவி புயல், மாண்டஸ் புயல், மிக்ஜாம் புயல், ஃபெஞ்சல் புயல் ஆகியவற்றின் தாக்கம் குறித்தும், மழையின் பாதிப்பு குறித்தும் கணித்தவர்.

News December 31, 2024

நாளை முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது

image

மோசடி உள்ளிட்டவற்றை தடுக்க வங்கிக் கணக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி புதுப்புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாளை (ஜன.1) முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள், 12 மாதத்திற்கு மேல் பயன்படுத்தப்படாத கணக்குகள், குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது.

News December 31, 2024

புத்தாண்டு பரிசாக சொத்து வரி உயர்வு: இபிஎஸ் தாக்கு

image

சென்னை வாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35% தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளதாக இபிஎஸ் கடுமையாக சாடியுள்ளார். 44 மாத கால திமுக ஆட்சியில் சொத்து வரி உட்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று 75% மக்கள் பாதிக்கப்படவுள்ளனர். எனவே, இந்த வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News December 31, 2024

இந்தியாவின் கடன் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு

image

இந்தியாவின் வெளிநாட்டு கடன் நிலவரம் குறித்த செப்டம்பர் மாத புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவுக்கு ரூ.60.94 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.3% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் மாதத்துடன் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, ரூ.2.5 லட்சம் கோடி அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்யலாம்? கமெண்ட் பண்ணுங்க.

News December 31, 2024

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000.. உடனே விண்ணப்பிங்க

image

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதற்காக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, நமது மாநிலத்தில் இருந்து 6,695 பேர் உள்பட 1 லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வுக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஜன.24க்குள் விண்ணப்பிக்கலாம்.

News December 31, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

காலையில் இருந்து சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!