News April 19, 2025

திமுகவில் ஒன்றியம், நகரங்களை பிரிக்கத் திட்டம்

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக, கட்சியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திமுகவில் ஒன்றியம், நகரங்களை பிரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திமுக தலைமையகத்தில் கடந்த சில நாள்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 52 மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டதில் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

News April 19, 2025

நடிகை ஸ்ரீதேவி மரணம்.. சந்தேகம் எழுப்பும் இந்தி நடிகர்

image

தமிழ் திரையுலகின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிறகு, போனி கபூரை திருமணம் செய்து பாலிவுட்டில் செட்டினாலார். 2018-ல் துபாயில் பாத்டப்பில் தடுக்கி விழுந்து அவர் பலியானார். அவர் உயிர் நீத்து 7 ஆண்டுகளாகிய நிலையில், இந்தி நடிகர் நசீர் அப்துல்லா திடீரென சந்தேகம் எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி மரணத்தில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாகவும், அதற்கான விடைகளை மக்கள் அறிவது அவசியம் என கூறியுள்ளார்.

News April 19, 2025

இரட்டை இலை மேலே தாமரை மலரும்: நயினார்

image

தமிழக பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக கூட்டணி தொடர்பான கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் எனவும் தலைமையின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் தேர்தலில், இரட்டை இலை மேலே தாமரை மலரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

News April 19, 2025

புதுச்சேரி CM வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி CM ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் ரங்கசாமியின் வீடு முழுவதும் சோதனையிட்டனர். இறுதியில் அது புரளி என தெரியவந்ததையடுத்து போலீஸார் நிம்மதியடைந்தனர். இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

News April 19, 2025

ஹிந்தியில் பெயர் ஏன்? NCERT விளக்கம்

image

இந்தியாவின் கலாசாரம், அறிவியல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவே ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களுக்கு பெயரிடப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, CBSE பாடப்புத்தகங்களுக்கு மிருதங், சந்தூர், கணித மேளா, கணித பிரகாஷ், பூர்வி, கிருதி, சிதார் என பெயரிடப்பட்டது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில், NCERT தற்போது விளக்கம் அளித்துள்ளது.

News April 19, 2025

போதைப்பொருள் விவகாரம்.. GBU நடிகர் அரெஸ்ட்

image

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக போலீசார் ரெய்டுக்குச் சென்ற போது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், NDPS சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News April 19, 2025

REWIND: தேர்தலில் போட்டி என ரஜினி அறிவித்த நாள்

image

ரஜினியின் வாழ்க்கையில் முக்கிய நாள்களில் இன்றைய (ஏப்.19) நாளும் ஒன்று. இந்த நாளில்தான், 2019ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தனது இலக்கு இல்லை, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்தான் தனது இலக்கு, அந்தத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று அவர் கூறினார். எனினும் பிறகு கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி, அந்த முடிவை ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார்.

News April 19, 2025

IPL 2025: DC முதலில் பேட்டிங்

image

IPL 2025-ல் அகமதாபாத்தில் நடைபெறும் மேட்ச்சில், GT அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அவற்றில் 3-ல் DC-யும், 2-ல் GT-யும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவாங்க என நினைக்குறீங்க?

News April 19, 2025

₹49,000 வரை சம்பளம்.. மத்திய அரசில் 200 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் 200 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10வது, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும். மாதம் ₹49,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு மே 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News April 19, 2025

மதிமுகவினருக்கு துரை வைகோ எம்.பி. வேண்டுகோள்

image

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகிய <<16147444>>துரை வைகோ<<>> எம்பி, 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 20ம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பேன், பிறகு முக்கிய கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 7 ஆண்டாக தான் மேற்கொண்ட முயற்சிகளை நிர்வாகிகள் தொடர வேண்டும், எந்த சூழலிலும் வைகோ மனம் கலங்கி விடாமல் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

error: Content is protected !!