News January 2, 2025

கடைசி டெஸ்டில் பண்ட்டிற்கு பதிலாக இளம் வீரர்

image

BGT கடைசி டெஸ்டில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் சொதப்பும், பண்ட்டிற்கு பதிலாக ஜுரேல் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது. 4வது போட்டிக்கு பிறகு ரோஹித் பண்ட்டை விமர்சித்து பேசியதை தொடர்ந்து இம்மாற்றம் வரலாம் எனப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் அணி: ஜெய்ஸ்வால், ரோஹித், கே.எல்.ராகுல், கோலி, பண்ட்/ ஜூரேல், நிதிஷ், ஜடேஜா, சுந்தர், பும்ரா, சிராஜ், தீப்.

News January 2, 2025

சென்னையில் காய்கறி விலை சரிவு

image

சென்னையில் பூண்டு, வெங்காயம், முருங்கை விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ₹400க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பூண்டு இன்று ₹280க்கு விற்பனையாகிறது. அதேபோல், கடந்த வாரம் ₹70க்கு விற்ற கிலோ வெங்காயம் இன்று ரூ.40க்கும், கடந்த வாரம் ₹30க்கு விற்பனையான கிலோ தக்காளி இன்று ₹20க்கும் விற்பனையாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை சரிவைக் கண்டுள்ளது.

News January 2, 2025

ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லாமலே இனி திருமணப் பதிவு

image

ஆன்லைனில் திருமணப் பதிவு திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வர TN அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் பதிவு கட்டணம் ₹100, கணினி கட்டணம் ₹100 என மொத்தம் ₹200 தான். ஆனால் சில இடங்களில் ₹10,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. நடைமுறை சிக்கல்களை களைந்து ‘ஸ்டார்-3’ மூலம் தம்பதிகள் ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லாமல், தேவையான ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்து சான்று பெற வழிவகை செய்கிறது.

News January 2, 2025

ஒரு எருமை மாட்டினால் இவ்வளவு அக்கப்போரா…

image

இது எங்க மாடு, நாங்க பலிகொடுக்க நேர்ந்து விட்டது என எருமை மாட்டினால், கர்நாடக – ஆந்திர மாநில எல்லை கிராமத்தினர் மோதி வருகிறார்கள். பொம்மனஹல்லைச் (கர்நாடகா) சேர்ந்த விவசாயி மாட்டை காணவில்லை என தேடி, மெட்டஹல்லில் (ஆந்திரா) கண்டுபிடித்தார். இருகிராமத்தினரும் இது தங்கள் மாடு என முரண்டுபிடிக்க, பஞ்சாயத்து போலீசிடம் வந்தது. திணறி போனவர்கள், DNA டெஸ்ட் எடுத்து முடிவு செய்யலாம் என இறங்கி விட்டார்கள்.

News January 2, 2025

அனைத்து பள்ளிகளிலும் இன்றே நோட்டு புத்தகம்

image

மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மூன்றாம் பருவத்திற்கான நோட்டு, புத்தகங்கள் இன்றே வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. சீருடைகளும் இன்றே விநியோகிக்கப்பட்டு, நாளை முதல் தடங்கலின்றி பாடங்களை நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

ஜன.6 முதல் 28 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்

image

28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வரும் 5ஆம் தேதி நிறைவடைகிறது. அந்த 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. தேர்தலை நடத்தத் திமுக அஞ்சுவதாக ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

News January 2, 2025

ஒரே ஒரு நாள் இந்தியாவின் கேப்பிடலாக இருந்த நகரம்

image

இந்திய அரசியல் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தாரை வார்க்கப்பட்டபோது அலகாபாத் ஒரே ஒரு நாள் நவ. 1, 1858ம் ஆண்டு கேப்பிட்டல் நகரமாக செயல்பட்டது. அப்போது, டெல்லி பற்றி எரிந்து கொண்டிருந்ததால், இந்த நிர்வாக மாற்ற சாசனம் அலகாபாத் நகரில் இருந்து வாசிக்கப்பட்டது. அதற்காக, அலகாபாத் ஒரே ஒரு நாள் தலைநகராக செயல்பட்ட நிலையில் பின்னர் கொல்கத்தா கேப்பிட்டல் ஆனது.

News January 2, 2025

பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

image

சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து பாமக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதியளிக்க போலீசார் மறுத்துள்ளனர். முன்னதாக, அதிமுக, நாதகவினர் போராடி கைதானது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2025

மீண்டும் கேப்டன் ஆக கோலி விருப்பம்

image

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்க விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு BGT தொடருடன் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 2027 வரை டெஸ்ட் போட்டிகள் விளையாட கோலி விரும்புவதாகவும் அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் வரை தற்காலிக கேப்டனாக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

News January 2, 2025

சிறைகளில் ஜாதி பாகுபாடு கூடாது!

image

சிறைகளில் கைதிகள் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. சிறைகளில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலைகள் வழங்கக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!