News January 3, 2025

ஒரே வரியில் பதிலளித்த பும்ரா

image

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர், நான் இந்திய அணிக்குள் வந்தபோது தோனி கேப்டனாக இருந்தார். நீண்ட காலமாக ரோஹித் தலைமையில் விளையாடியிருக்கிறேன். எனது முதல் டெஸ்ட் போட்டி கோலி தலைமையில் விளையாடினேன். அனைவருக்கும் தனி தனி திறமைகள், தலைமைத்துவ பண்புகள் உள்ளன. அதனால் அனைவரிடம் இருந்தும் கற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

ராசி பலன்கள் (03-01-2025)

image

➤மேஷம் – உழைப்பு
➤ ரிஷபம் – போராட்டம்
➤மிதுனம் – விவேகம்
➤கடகம் – தனம்
➤சிம்மம் – இரக்கம்
➤கன்னி – நற்செயல்
➤துலாம் – தொல்லை
➤விருச்சிகம் – பாசம்
➤தனுசு – ஊக்கம்
➤மகரம் – சுபசெலவு
➤கும்பம் – சுகம் ➤மீனம் – பெருமை

News January 3, 2025

சிரிப்பதற்கு முன் இதை நினைச்சு பாருங்க..!

image

சில தருணங்களில் நமது பயத்தையும், தயக்கத்தையும், அடிபணியும் எண்ணத்தையும் மற்றவர்களுக்கு கடத்தும் கருவியாக சிரிப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான், பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக்கலை போட்டிகள் தொடங்கும் போது, எந்த வீரர் சிரிக்கிறாரோ, அவரே கடைசியில் பெரும்பாலும் தோல்வியை சந்திப்பதாக, மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிரிப்பு வீரர்களின் பயத்தை வெளிப்படுத்துவதாக அவர்கள் சொல்கின்றனர்.

News January 3, 2025

கோழைத்தனமான தாக்குதல்- மோடி கண்டனம்

image

US நியூ இயர் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு PM மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். நியூ ஆர்லியன்ஸில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களது பிரார்த்தனைகள் அவர்களுக்காக உண்டு. இந்த சோகத்திலிருந்து குணமடைய போதிய வலிமை கிடைக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் திரள் மீது வாகனத்தை மோதி துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஈடுபட்டார்.

News January 2, 2025

கல்வியே ஆயுதம்! 1-8ம் வகுப்பு வரை ‘0’ இடைநிற்றல்

image

மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் நிற்கும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் ‘0’ என மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆம்! பள்ளிப் படிப்பை தொடங்கிய 100 சிறுவர்களில் 100 பேரும் நடுநிலைப்பள்ளியை முடிக்கின்றனர். ஆனால், 9-10 வகுப்புகளில் இடைநிற்றல் 7.68%ஆக உள்ளது.

News January 2, 2025

பீகாரில் முதல்வரை முந்திய அமைச்சர்கள்

image

பீகாரில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தங்கள் சொத்து மதிப்பை வெளியிடுவது கட்டாயம். அந்த வகையில், முதல்வர் நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி என தெரியவந்துள்ளது. அவரின் அசையா சொத்து மதிப்பு மட்டும் ரூ.1.48 கோடியாக உள்ளது. நிதிஷ் குமாரை விட, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல அமைச்சர்கள் அதிக சொத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

News January 2, 2025

இறந்தவருக்கு உயிர் கொடுத்த Speed Breaker!

image

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பாண்டுரங் (65). கடந்த டிச.16ல் மாரடைப்பு ஏற்பட்டதால், குடும்பத்தினர் அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறவே, சடலத்தை ஆம்புலன்ஸில் வைத்து கொண்டுவந்துள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸ் வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது, அவரது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளது. இதையடுத்து வேறு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், அவர் உயிர்பிழைத்து வந்துள்ளார்.

News January 2, 2025

மக்களுக்காக வாழும் அண்ணாமலை: கங்கை அமரன்

image

தமிழக மக்களுக்காக அண்ணாமலை தன்னையே வருத்திக் கொள்வதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். மக்களுக்கு நீதி கிடைக்க தன்னை வருத்திக்கொள்ளும் அண்ணாமலையை பாராட்ட மனமில்லாமல், அவர் செய்யும் நல்லவற்றை மக்களிடம் மறைக்கும் வேலையை திமுக செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாமலை தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவார் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.

News January 2, 2025

மீண்டு வாங்க ரோகித் ❤️❤️

image

2025இல் அடியெடுத்து வைத்துள்ள ரோகித்துக்கு தொடக்கமே மோசமாக மாறியிருக்கிறது. சமீபத்தில் 2வது குழந்தையை வரவேற்ற மகிழ்ச்சியில் இருந்த அவருக்கும், ரசிகர்களுக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் என்பது துக்கத்தின் விளிம்புக்கே அழைத்து சென்றுள்ளது. மனித வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்து, பழைய ரோகித்தாக மீண்டு வாங்க என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

News January 2, 2025

பொங்கல் போனஸ் போதாது: அரசு ஊழியர் சங்கம்

image

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு (C, D பிரிவு) பொங்கல் போனஸை முதல்வர் இன்று அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 போனஸாக வழங்கப்படவுள்ளது. ஆனால், இந்த போனஸ் தங்களுக்கு போதாது என தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல, ரூ.7000 போனஸை முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!