India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கவிழ்ந்து கிடப்பது <<15051738>>18 டன் எமன்<<>> என்பதை உணராமல் லீக்கான Gas உடன் விளையாடிய இளைஞர்கள் போட்டோவை போட்டு இது தான் கோவை குசும்பா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிகாலையில் டேங்கர் கவிழ்ந்த தகவல் கிடைத்த உடன் தங்களது உயிரைப் பணயம் வைத்து போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர் வேலை செய்து வருகின்றனர். ஆனால், ஆபத்தை உணராமல் விளையாடும் இவர்களை என்ன சொல்வது என நீங்களே கமெண்ட்ல சொல்லுங்க..
சீனாவில் வேகமாக பரவும் Human Metapneumovirus (HMPV) பொதுவான சளியைப் போன்றது. அதேநேரம், தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தி நிமோனியா, ஆஸ்துமா, COPD போன்ற நோய்களை கொண்டு வரலாம். இந்த வைரஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் IV மற்றும் ஸ்டீராய்டுகள் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலானோருக்கு பெரிய தாக்கல் இல்லாமல் இந்த நோய் குணமாகிவிடுகிறது.
கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. ஆண்டின் முதல், பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. கடந்தாண்டு அரசு வழங்கிய உரையை முழுவதும் வாசிக்காமல் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ‘புஷ்பா 2’ திரைப்படம் இதுவரை ₹1,799 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம், 28 நாள்களைக் கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. பெரிய படங்கள் ரிலீஸாக இன்னும் 10 நாள்கள் இருப்பதால் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் தடையை மீறி பேரணி சென்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் குஷ்புவும் கலந்து கொண்டார். ஆனால், இதற்கு அனுமதி இல்லை என்று கூறி பேரணி நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூரில் தனக்குச் சொந்தமான இடங்களில் ED அதிகாரிகள் சோதனை நடந்தி வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் CM ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்துடன் காட்பாடியில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வரும் நிலையில், 2019 தேர்தலின் போது, பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ₹11 கோடி சிக்கிய வழக்கில் சோதனை நடந்து வருகிறது.வந்திருப்பது யார் எனத் தெரியவில்லை என்று துரைமுருகன் கூறியிருந்தார்.
சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘1965’ எனத் தலைப்பு வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த இப்படத்திற்கு, ‘புறநானூறு’ எனப் பெயரிடப்பட்டது. ஆனால், இப்படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், அந்த கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டார். இப்படம், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாக கொண்டிருக்கும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. அதிகபட்சமாக நேற்றிரவு அதன் மதிப்பு 86 ரூபாய்க்கு கீழ் சரிந்து 86.09 என்று வர்த்தகம் ஆனது. ரூபாயின் தொடர் வீழ்ச்சியால் அதனை சீர் செய்யும் பணிகளை RBI முடுக்கிவிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 71ஆக இருந்த ரூபாயின் மதிப்பு 5 ஆண்டுகளில் ₹15 சரிந்துள்ளது.
5வது டெஸ்டில் ஓய்வு பெற்றுள்ள ரோஹித் ஷர்மாவை டெஸ்ட்டில் பார்ப்பது இதுவே கடைசியாக முறையாக கூட இருக்கலாம் என முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கூறுகின்றனர். இந்திய அணி WTC பைனலுக்கு தேர்வாகவில்லை என்றால், இது தான் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என்கிறார்கள். கேப்டானாகவும், பேட்ஸ்மேனாகவும் கடுமையான விமர்சனத்திற்கு ரோஹித் உள்ளாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் உள்ள வீட்டில் ED சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வேலூர் காந்தி நகரில் கதிர் ஆனந்துடன் வசிக்கும் அவரது வீடு, காட்பாடியில் உள்ள கல்லூரியில் ED சோதனையானது நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.