News January 3, 2025

பொங்கல் தொகுப்பு டாேக்கன்: 4 நாள்களுக்குள் வழங்க உத்தரவு

image

பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. சில இடங்களில் வீடு- வீடாகவும், சில இடங்களில் ரேஷன் கடைகளிலும் மக்கள் பெற்றுச் செல்கின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை 9ஆம் தேதி முதல் வழங்க திட்டமிட்டுள்ள உணவுத் துறை, டோக்கன் விநியோகத்தை 4 நாள்களுக்குள் வழங்கி முடிக்கும்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நீங்கள் டோக்கன் பெற்று விட்டீர்களா? கீழே பதிவிடுங்க.

News January 3, 2025

இறுக்கமாக ஜீன்ஸ் அணிகிறீர்களா? அலர்ட்

image

இறுக்கமான ஜீன்ஸ் அணியும் போது, வியர்வை வெளியாவதில் சிக்கல்கள் உண்டாகும். அதன் காரணமாக, சருமத்தில் எரிச்சல், சிரங்கு, அரிப்பு போன்றவை உண்டாகும். இடுப்பில் ஜீன்ஸ் இறுக்கமாக இருப்பதால், செரிமான அமைப்பில் அழுத்தம் அதிகரித்து அஜீரண கோளாறுகள் உண்டாகும். மேலும், இது போன்ற ஜீன்ஸ் நரம்புகளை அதிக நேரம் அழுத்தி பிடிப்பதால், குழந்தையின்மை பிரச்னையும் உண்டாகலாம். இவற்றை, லூசான காட்டன் ஜீன்ஸை அணியலாம்.

News January 3, 2025

தலைகீழாக மாறிய லக்னோ 5 கொலை விவகாரம்

image

லக்னோவில் கடந்த <<15037822>>31ஆம் தேதி<<>> தாய், 4 தங்கைகளை இளைஞர் அர்ஷத் கொலை செய்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அர்ஷத் வீடியோவில் கூறியதை மறுத்துள்ள போலீசார், அவர் குற்றம்சாட்டிய ஆலிமிடம் கடந்தாண்டே ₹7 லட்சத்திற்கு அவரது நிலத்தை விற்று பணம் பெற்றதாகவும் கூறியுள்ளனர். தந்தையுடன் சேர்ந்து குடும்பத்தைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அர்ஷத் நாடகமாடுவதாகவும் போலீசார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 3, 2025

சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு

image

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ சின்ன வெங்காயம் ₹80 முதல் ₹100 என விற்பனையானது. அண்மையில் பெய்த கனமழையால் சின்ன வெங்காய பயிர்கள் அழுகியதாகத் தெரிகிறது. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இதன் விலை குறைய 10 நாள்கள் ஆகலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

News January 3, 2025

Offer லெட்டர் வந்த மறுநாளே Retirement?

image

பிஹாரில் 19 வருடமாக ஆசிரியராக பணியாற்றி வந்த அனிதா குமாரி, கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வில் பாஸாகிறார். அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியராக சேர டிச. 30ம் தேதி அரசின் பணி நியமன கடிதம் கிடைத்தது. அதில் ஜனவரி 1ம் தேதி பணியில் சேரும் படியும் கூறப்பட்டிருந்தது. ஆனால், டிச. 31ம் நாள் 60 வயதை எட்டிய நிலையில் அனிதா ஓய்வு பெற்று விட்டார். விசித்திரமாக உள்ளது அல்லவா?

News January 3, 2025

வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்

image

இன்று காலை 10 மணியளவில் மணிப்பூருக்கு மிக அருகே மியான்மர் நாட்டு எல்லைக்குள் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம், மணிப்பூர், நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது. ரிக்டர் அளவுகோளில் 5.1ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 127 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இன்று காலை சிலி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவற்றால் பாதிப்பு ஒன்றும் இல்லை.

News January 3, 2025

வேலூரில் நடக்கும் ED ரெய்டு பின்னணி

image

2019இல் நடந்த IT ரெய்டில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ₹11.48 கோடி சிக்கியது. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஏப்.18 தேர்தல் ரத்தாகவும் காரணமாக அமைந்தது. இந்த விவகாரத்தில் அப்போது திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலையில் உள்ளது. இந்த சூழலில் தான் இன்று மீண்டும் <<15052553>>ED அதிகாரிகள்<<>> சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News January 3, 2025

பல வங்கிகளில் லோன் வாங்குவோரா நீங்கள்?

image

லோன் பெற்றோர் குறித்த தகவல்களை கடந்த ஆண்டு வரை மாதம் ஒரு முறை RBIக்கு ரிப்போர்ட் செய்து வந்தன வங்கிகள். இதனால், ஒரே மாதத்தில் பல்வேறு வங்கிகளில் தனி நபரால் பெர்சனல் லோன் பெற முடியும். இதனை தடுக்கும் விதமாக ரிப்போர்ட்டிங் நாளை 15ஆக குறைத்திருக்கிறது RBI. இதனால், நீங்கள் லோன் வாங்கிய தகவல் 15 நாள்களில் மற்ற வங்கிகளுக்கு அப்டேட் ஆகிவிடும். இதன் மூலம் multi-loan குறையும் என்கிறது RBI.

News January 3, 2025

சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தேன்

image

‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மறுத்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாக் அஸ்வின் கதை சொல்லும்போது நடிக்க மறுத்ததாகவும், சாவித்ரி கதாபாத்திரத்தை தன்னால் திரையில் கொண்டு வர முடியுமா என்ற பயம் இருந்ததாகவும் தெரிவித்தார். சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான அப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது.

News January 3, 2025

BGT 5வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தில் ஆஸி. ஆதிக்கம்

image

BGT தொடரில் இந்திய அணி ஆஸி.யின் பந்துவீச்சில் விளையாட தடுமாறி வருகிறது. சிட்னியிலும் முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன்களில் சுருண்டது. இந்த டெஸ்டிலும் ஆஸி. அணி 1வது இன்னிங்சில் அதிக ரன்களை குவித்து அதிக முன்னிலை பெற்று விடும் என்றே தோன்றுகிறது. நாளை ஆஸி.யின் விக்கெட்டுகளை வேகமாக இந்தியா காலி செய்ய வேண்டும். இல்லையேல், இந்த டெஸ்டிலும் ஆஸி. அணி முதல் இன்னிங்ஸிலேயே லீட் எடுத்து விடும்.

error: Content is protected !!