News January 3, 2025

கல்யாணத்துக்கு முன் இதை பண்ணாதீங்க: சின்மயி

image

கடந்த டிச.31ஆம் தேதி 1 லட்சம் ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டதாக BLINKIT தளம் தெரிவித்திருந்தது. அதற்கு ‘இந்த காலத்தில் கன்னிப்பெண்களை பார்ப்பது அரிது’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அப்படியானால், திருமணத்திற்கு முன் எந்த பெண்ணிடமும் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள், இதையே உங்களது நண்பர்களிடமும், சகோதரர்களிடமும் கூறுங்கள் என சின்மயி காட்டமாக பதிவிட்டுள்ளார்.

News January 3, 2025

அஜித் ரசிகர்களை COOL பண்ண முயற்சி

image

‘விடாமுயற்சி’ ரிலீஸ் திடீரென தள்ளிப் போனதாலும், 2 ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாததாலும் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்த விரைவில் ‘விடாமுயற்சி’ டிரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2.24 நிமிடங்கள் கொண்ட டிரெய்லருக்கு சென்சார் சான்றிதழையும் வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 3, 2025

பொங்கல் தொகுப்பு: அமைச்சர் உத்தரவு

image

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று தாெடங்கியுள்ளது. இதையடுத்து வரும் 9ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் அந்தத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தோகை வெட்டாமல் கரும்பை முழுதாக வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். மேலும், பச்சரிசி, சர்க்கரை தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News January 3, 2025

அரசியல் கட்சி: சுப உதயகுமார் புது அறிவிப்பு

image

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பிரபலமானவர் சுப உதயகுமார். அவர் பச்சைத் தமிழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்தார். தற்போது தனது கட்சி இயக்கமாக மாறி, சுற்றுச்சூழலுக்காக போராடும், தவாக-வுடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ளார். கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் சுப உதயகுமார் மீது வழக்குகள் பதியப்பட்டன. எனினும் போராட்டத்தை தொடர்ந்தார்.

News January 3, 2025

சீனாவிற்கு கடும் எதிர்ப்பை காட்டிய இந்தியா

image

கடந்த டிச.27ல் ஹோட்டன் மாகாணத்தில் 2 புதிய மாவட்டங்களை சீனா அறிவித்தது. ஆனால், இவை லடாக் யூனியன் பிரதேச எல்லைக்குள் வருவதாகவும், இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிக்க விடமாட்டோம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனாவின் Hydropower திட்டத்தால், இந்தியாவின் எல்லை மாநிலங்கள் பாதிக்கப்படுமா என்பதை உன்னிப்பாக கவனிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

News January 3, 2025

காதலரை மணந்தார் நடிகை சாக்ஷி அகர்வால்

image

காதலர் நவநீத் மிஸ்ராவை நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம் செய்து கொண்டார். கோவாவில் வைத்து 2 பேரின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை சாக்ஷி அகர்வால், சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், தனது சிறு வயது நண்பரான நவ்நீத்தும், தானும் “என்றென்றும் என்றானோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜா ராணி, கெஸ்ட் உள்ளிட்ட படங்களில் சாக்ஷி நடித்துள்ளார்.

News January 3, 2025

விஜய் ஹசாரே தொடர்: TN வெற்றி

image

விஜய் ஹசாரே தொடரில் மிசோரம் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் TN அணி வென்றது. மிசோரம் 21.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 71 ரன்களே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய TN அணி, 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. வரும் 5ம் தேதி TN அணி, அடுத்த லீக் ஆட்டத்தில் சத்தீஸ்கரை எதிர்கொள்ள உள்ளது.

News January 3, 2025

JUST IN: குஷ்பு விடுவிப்பு!

image

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் குஷ்பு தலைமையில் பாஜக மகளிரணி பேரணி நடைபெற்றது. போலீஸ் தடையை மீறி இந்தப் பேரணியை நடத்தியதால் குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 3 மணிநேரத்திற்கு பிறகு குஷ்பு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது நிருபர்களிடம் பேசிய குஷ்பு, தங்களை ஆடுகள் வைக்கும் இடத்தில் அடைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார்.

News January 3, 2025

மோடியின் காஸ்ட்லி கிஃப்ட்.. ஆனால் இனி NO USE

image

கடந்த 2023 USA பயணத்தின் போது, பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு ₹17.15 லட்சம் மதிப்புள்ள சிந்தடிக் வைரத்தை பரிசளித்தார். ஆனால், அந்த பரிசை ஜில் பைடன் இனி பயன்படுத்த முடியாது. வரும் 20ஆம் தேதி டிரம்ப் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், வைரத்தை தேசிய காப்பகத்தில் ஜில் பைடன் ஒப்படைத்தார். அந்நாட்டு விதிகளின் படி, காஸ்ட்லி பரிசுகளை பதவிக்காலம் முடிந்ததும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

News January 3, 2025

1,00,000 பெண்களுக்கு வேலை.. SWIGGY இலக்கு

image

ஆண்களுக்கு பெண்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வந்து விட்டனர். உணவு டெலிவரியிலும் தற்போது அவர்கள் கால் பதித்துள்ளனர். இதை கருத்தில் காெண்ட உணவு ஆர்டர் நிறுவனமான SWIGGY, 2030ஆம் ஆண்டுக்குள் 1,00,000 டெலிவரி உமேன்களை பணிக்கு தேர்வு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் தலா 20,000 பேர் என அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யவுள்ளது.

error: Content is protected !!