India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தேர்வுக்குழுவின் எதிர்கால திட்டத்தில் ரோஹித் ஷர்மா இல்லை என கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். வரும் நாட்களில் அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும் கணித்துள்ளார். ரோஹித்துக்கு தற்போது 37 வயதாகும் நிலையில், அடுத்த WTC போட்டிக்குள் 41 வயதை அடைந்துவிடுவார். அந்த வயதில் அவர் டெஸ்ட் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவருக்கு பதிலாக இளம் தலைமையை BCCI தயார் செய்யும் என்றார்.
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் பதவியை கேட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பாஜக அமைப்பு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த 2 நாள்களுக்கு முன்பு நட்டாவை சந்தித்த தமிழிசை, அதிமுகவுடன் மீண்டும் இணக்கமான சூழல் உருவாக வேண்டுமெனில், தன்னை தலைவராக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டாதாகக் கூறப்படுகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 138 ▶குறள்: நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். ▶பொருள்: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றால் TNல் கடந்த ஆண்டு (2024) மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த பூச்சிகள் மனிதர்களை கடிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பாதிப்பு தீவிரமாக உள்ளதாகவும், தற்போது தினசரி 10 – 20 பேர் வரை பாதிப்புடன் ஹாஸ்பிடல் வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மக்களின் கவனத்தை ஈர்க்கவே சில ஹீரோக்கள் Bodyguardகளை வைத்துள்ளதாக சோனு சூட் தெரிவித்துள்ளார். அதனால் தான், நடிகர்கள் வரும்போது அவர்கள் சத்தம் எழுப்பி தங்களது இருப்பை காட்டிக் கொள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நடிகர்கள் சிம்பிளாக பொது இடங்களுக்கு போகும்போது, அவ்வளவு களேபரம் ஏற்படாது எனவும், யாருக்கும் தொந்தரவை கொடுக்க கூடாது என தனது Bodyguardகளுக்கு கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் எதிரில் உள்ளவர்களை பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 470 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவுக்கு புகை மூட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு சாலைகளும் தரிசாக மாறிவிட்டன.
வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. மூடியிருந்த 2 அறைகளை திறக்க சாவி இல்லாததால், கதவுகளை உடைத்து சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக, அவரது வீட்டிற்குக் காலையில் அதிகாரிகள் சென்றபோது, அங்கு யாரும் இல்லாததால் வெளியில் காத்திருந்தனர். பின்னர், வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்திடம் பேச, உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடக்கிறது.
▶ஜனவரி 4 ▶மார்கழி- 20 ▶கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: சதயம் ▶சந்திராஷ்டமம்: பூசம்.
இன்று (ஜன.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணம், கேப்டன் உடல்நிலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அவர் உயிரிழந்ததால், முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு பிறகு திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்தனர். தற்போது அதுவும் முடிந்ததால், விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.