India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகள் பிறந்த நிலையில் 2024ஆம் ஆண்டு 8 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. தேசிய மக்கள் தொகை வளர்ச்சி 0.92%ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் அது வெறும் 0.30%தான். இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?
ஆசிய யானைகளைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு ஆப்பிரிக்க யானைகளைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை. இப்போது தெரிந்து கொள்வோம்.
* யானைகளின் மூளையின் எடை மட்டும் 5.4 கிலோ இருக்கும்
* யானைகளின் பேறுகாலம் மொத்தம் 22 மாதங்கள்
* குட்டி யானைகள் 10 ஆண்டுகள் வரை தாயுடன்தான் வாழும்
சிட்னியில் தற்போது நடைபெறும் BGT 5ஆவது போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைக்கப்படுவது ஏன் தெரியுமா? ஆஸ்திரேலிய லெஜண்ட் வீரர் மெக்ராத்தின் மனைவி ஜேன் 2008ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது நினைவாகவும், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் சிட்னியில் பிங்க் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
கடமைகள் நிறைந்த வாழ்க்கையில் குடும்பத்துக்காக ஓடி கொண்டிருப்பவர்களே, ஒரு நிமிடம் ஓட்டத்தை நிறுத்தி உங்களுக்காக ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என யோசியுங்கள். இயற்கையின் கொடையான வாழ்க்கையில் நமக்கு என கொஞ்சம் நேரம் வேண்டும். கடமையை விட்டு கனவுகளை நோக்கி ஓடுங்கள் என கூறவில்லை. பிடித்த படம், நண்பரை சந்திப்பது என உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும் விஷயங்களை செய்யுங்கள். அன்றைய நாள் அழகாகும்.
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது. இதுவரை இதற்கான தேர்தல் அறிவிப்பு வெளிவராததால், அரசுப் பணிகளை ஊராட்சி மன்ற செயலாளர்கள்தான் இனி கவனிப்பார்கள். ஊரகப் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியையும் அரசு செய்யவில்லை.
BGT தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 162 ரன்கள் இலக்குடன் விளையாடி வரும் அவ்வணியின் விக்கெட்டுகளை அனைத்தையும் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். இதில், கேப்டன் பும்ரா விளையாடாததால் சோர்வாய் இருந்த ரசிகர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்துவீச வராததால் நடப்பு போட்டி களையிழந்துள்ளது. மொத்த தொடரில் 30க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் பும்ராவால் இப்போட்டியில் வெற்றி சாத்தியம் என்று கருதப்பட்டது. ஆனால் அவருக்கு முதுகு பிடிப்பு காரணமாக முதல் ஓவர்களை சிராஜும் கிருஷ்ணாவும் வீசினர். பும்ரா எப்போது மீண்டும் பந்துவீச வருவார் என்று தெரியாததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
உணவு அல்லாத பொருட்களுக்கு இந்தியர்கள் அதிகம் செலவிட தொடங்கியுள்ளதாக SBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 12 ஆண்டுகளில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி நுகர்வு வழக்கத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. 2011-12 நிதி ஆண்டில் 52.90%ஆக இருந்து உணவுக்கான செலவு 2023-24இல் 47.04%ஆக குறைந்துள்ளது. கிராமத்தில் உணவுக்கான செலவு 5.86% குறைந்த நிலையில், நகரங்களில் 2.94% குறைந்துள்ளது.
BGT தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும் ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, 162 என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியிருக்கிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இது டிச. 27ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் $4.11 பில்லியன் குறைந்து, $640.27 பில்லியனாக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் RBI டாலரை விற்று வருகிறது. அதேநேரம், தங்கத்தை தொடர்ந்து வாங்குவதால், அதன் கையிருப்பு $541 மில்லியன் உயர்ந்து $66.26 பில்லியனாக இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.