News January 5, 2025

சிரியாவில் சண்டை: 101 பேர் பலி

image

சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு துருக்கி ஆதரவு குழுக்களுக்கும், சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில், 2 நாள்களில் மொத்தம் 101 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலியானோரில் 85 பேர் துருக்கி ஆதரவு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 16 பேர் சிரியாவை சேர்ந்த குர்து படையினர் என்றும் கூறப்படுகிறது.

News January 5, 2025

₹3200,00,00,000 வசூல் செய்த ‘முபாசா’

image

‘முபாசா: தி லயன் கிங்’ ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் நேற்றுவரை ரூ.3200 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.150.5 கோடி வசூலை எட்டியுள்ளது. ஹிந்தி வெர்சன் ரூ.46.98 கோடி, தமிழில் ரூ.23.65 கோடி, தெலுங்கில் ரூ.16.84 கோடி வசூல் செய்துள்ளது. டிச.20 வெளியான படம், 16 நாள்களில் இந்த சாதனையை எட்டியுள்ளது. குழந்தைகளுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்ததால், படம் பெரிய வெற்றி பெற்றது. நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

News January 5, 2025

கோலி, ரோஹித் ஓய்வு? கம்பீர் சொன்ன தகவல்

image

அணியின் நலனை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறுவது குறித்து கோலியும், ரோஹித்தும் முடிவு எடுப்பார்கள் என கம்பீர் தெரிவித்துள்ளார். 5ஆவது டெஸ்ட்டில் இருந்து விலகும் முடிவில், ஒரு கேப்டனாக ரோஹித் மெச்சூரிட்டி காட்டியதாகவும், ஆனால் அதைவிடுத்து சிலர் அர்த்தமற்ற விவாதங்களை கிளப்பியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அணிக்காகவே ரோஹித் அப்படி செய்ததாகவும் பாராட்டியுள்ளார்.

News January 5, 2025

FD வட்டியை உயர்த்திய SBI, HDFC

image

நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான SBI, 80 வயதுக்கும் மேற்பட்டோருக்கு FD வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வட்டியை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டியை உயர்த்தியுள்ளது. இதேபோல், தனியார் வங்கியான எச்டிஎப்சியும் 5-10 அடிப்படை புள்ளிகள் வட்டியை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வட்டி, ரூ.5 கோடி, அதற்கும் மேல் டெபாசிட் செய்வோருக்கே பொருந்தும்.

News January 5, 2025

திருமணமாகாத ஆண்- பெண் ஒன்றாக தங்கலாமா?

image

மணமாகாத ஆண், பெண் ஒன்றாக ஹோட்டலில் தங்கலாமா என்ற கேள்விக்கு OYO வெப்சைட்டில் உள்ள பதில்: ‘ஆம். எந்த நாட்டிலும் அதற்கு தடையில்லை. ஆனால் அவர்களை Check-In செய்ய அனுமதிப்பது Hotel ஓனர்களின் உரிமை’. 2013-ல் OYO அறிமுகமானபோது அதன் வெற்றிக்கு காரணம் Couple Friendly Policy. தற்போது <<15071522>>புதிய ரூல்<<>> கொண்டு வரப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக தடை இல்லாதபோது, OYO-வின் புதிய விதி சரியா எனக் கேட்கின்றனர் நெட்டிசன்கள்.

News January 5, 2025

ஏர்போர்ட் கூட இல்லாத 5 நாடுகள்..

image

விண்வெளியில் வீடு கட்டலாமா, செவ்வாய்க்கிரகத்தில் செல்போன் டவர் அமைக்கலாமா என உலக நாடுகள் ஓடிக் கொண்டிருக்க, இந்த 5 நாடுகள் ஏர்போர்ட் கூட இல்லாமல் உள்ளன. வாடிகனில் ஏர்போர்ட் கிடையாது. அங்கு செல்வோர், இத்தாலியின் ரோமில் இறங்கியே வாடிகனுக்கு செல்ல முடியும். அதேபோல, லைச்டென்ஸ்டெய்ன், அன்டோரோ, மொனாக்கோ, சான் மாரினோ நாடுகளிலும் ஏர்போர்ட் இல்லை. இடப்பற்றாக்குறையும், பூளோக அமைப்புமே இதற்கு காரணமாம்.

News January 5, 2025

விஷாலுக்கு இதுதான் பிரச்னை

image

‘மதகஜராஜா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால் உடல் மெலிந்து போய் காணப்பட்டார். மேடையில் கை நடுக்கத்துடன் பேசிய அவரை, படக்குழுவினர் நாற்காலியில் அமர்ந்து பேச வைத்தனர். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம், அவருக்கு என்னாச்சு.. என்னாச்சு.. என்று கேட்க, அதிகளவில் காய்ச்சல் இருந்ததாகவும், குளிரின் காரணமாக நடுக்கத்துடன் காணப்பட்டதாகவும் படக்குழு விளக்கமளித்துள்ளது.

News January 5, 2025

முதலில் விஜய், பிறகே CM ஸ்டாலின்

image

சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ. சண்முகம் இன்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு முதல் ஆளாக தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். திமுக கூட்டணியில் சிபிஎம் உள்ள நிலையில், ஸ்டாலின் முதலில் வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் வாழ்த்து தெரிவித்தபிறகே ஸ்டாலின் வாழ்த்தை தெரிவித்தார்.

News January 5, 2025

இந்த முறை சாதிப்பாரா ஷங்கர்?

image

‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. அரசியல்வாதியாக எஸ்.ஜே.சூர்யாவும், கலெக்டராக ராம்சரணும் நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலான மோதல், ஊழல், ஃபிளாஷ்பேக்கில் ஃபேமிலி சென்டிமெண்ட், கலர்ஃபுல்லான பாடல்கள் என இயக்குநர் ஷங்கரின் டிரேட் மார்க்காக இந்த படம் உருவாகியுள்ளது. ‘இந்தியன் 2’ ஃபிளாப் ஆனதால், கேம்சேஞ்சரை ஷங்கர் பெரிதும் நம்பியுள்ளார்.

News January 5, 2025

புறப்பட்டு ஓடும் புதன்: 3 ராசிகளுக்கு ராஜயோகம்!

image

புத்தாண்டின் முதல் வாரத்தில் புதன் பகவான் தனுசு ராசிக்கு செல்வதால் 3 ராசிகள் யோகம் பெறவுள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) சிம்மம்: தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். கல்வி சிறக்கும். வாழ்க்கை துணை ஆதரவு உண்டு. 2) துலாம்: சோகம் விலகும். தொட்ட காரியங்கள் துலங்கும். பாசிட்டிவான எண்ணங்கள் தோன்றும். 3) கும்பம்: பொருளாதாரம் உயரும். உழைப்பின் பலன்களை பெறுவீர்கள்.வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு.

error: Content is protected !!