News January 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 140 ▶குறள்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். ▶பொருள்: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

News January 6, 2025

Beta தலைமுறையின் முதல் குழந்தை இவன்தான்

image

2025ஆம் ஆண்டு ஜன.1 முதல் பிறக்கிற குழந்தைகளின் தலைமுறை Gen Beta எனப்படுகிறது. இந்த தலைமுறையில் சேரும் இந்தியாவின் முதல் குழந்தை மிசோரம் மாநிலத்தில் பிறந்துள்ளது. ஜன.1 நள்ளிரவு 12:03-க்கு பிறந்த இந்த ஆண் குழந்தைக்கு பிராங்கி ரெம்ருவாடிகா ஸடெங் எனப் பெற்றோர் பெயரிட்டுள்ளனர். Gen Beta-வினர் பலர் 22-ம் நூற்றாண்டை காண்பார்கள் என Gen Beta பெயரிட்ட அறிஞர் கணித்துள்ளார். நீங்க எந்த ஜெனரேஷன்?

News January 6, 2025

இன்றைய (ஜன. 6) நல்ல நேரம்

image

▶ஜனவரி 6 ▶மார்கழி- 22 ▶கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 09.45 AM – 10:30 AM, 4.30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM, 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 AM – 03:00 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: உத்திரட்டாதி ▶சந்திராஷ்டமம்: மகம் பூரம்

News January 6, 2025

நடப்பு ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை அமோகம் என கணிப்பு

image

2025இல் இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை ₹4 லட்சம் கோடியை எட்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதில், 20% பேர் ₹30,000க்கும் மேல் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் என்கின்றனர். சமீபகாலமாக ஆப்பிள், சாம்சங் போன்ற ப்ரீமியம் பிராண்டு போன்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். மற்ற மாடல்களிலும் ₹30,000 – ₹45,000 விலை கொண்ட போன்களை வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன. 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News January 6, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன. 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News January 6, 2025

இந்த சரக்கு ஜஸ்ட் ₹364 கோடி தான்!

image

உலகின் டாப் மோஸ்ட் மது பாட்டிலின் விலையை கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள். D’Amalfi Limoncello Supremeன் விலை வெறும் ₹364 கோடிதான். அதற்கு அடுத்தபடியாக ₹51 கோடியில் Isabella’s Islay Whisky உள்ளது. ₹31 கோடியில் Billionaire Vodka கிடைக்கும். இவ்வளவு விலையில் விற்கப்படும் இந்த மதுவில், அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள். கமெண்ட் பண்ணுங்க.

News January 6, 2025

கீர்த்தியின் ஹனிமூன்+ புத்தாண்டு கொண்டாட்டம்

image

கீர்த்தி சுரேஷ் புத்தாண்டை தாய்லாந்தில் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கடந்த டிச.12ல் இவருக்கு திருமணமான நிலையில், கணவருடனான இந்த கொண்டாட்டம் ஹனிமூனாகவும் மாறியதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். செம ஜாலியாக Vibe செய்த போட்டோக்களுக்கு மத்தியில், காய்ச்சலை சோதிக்கும் கருவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதைதான் ஓவர் Vibe உடம்புக்கு ஆகாது என சொல்வார்களோ!

News January 6, 2025

மாப்பிள்ளையை இப்படி தேடுங்க: சரண்யா அட்வைஸ்

image

இந்த காலத்து பெண்கள் பெரும்பாலானோர், தனக்கு வரும் கணவர்கள், இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என பல கண்டிஷன்கள் வைப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை கூறுகையில், புருஷன் நல்ல மனுசனா இருக்கணும்னு நினைச்சு தேடுங்க. காசு இருக்கா, வெள்ளையா இருக்கானானு பாக்காதீங்க. உங்களுக்கு மரியாதை கொடுப்பானா, உங்க வீட்டு சுதந்திரம் அவன் வீட்டுல இருக்குமானு பாருங்க என கூறியுள்ளார்.

News January 6, 2025

பெண்களுக்கு இந்த பசங்களை தான் பிடிக்குதாம்!

image

பெண்களின் டேட்டிங் ட்ரெண்ட் மாறி வருகிறது. முன்பு தன்னை விட வயதில் மூத்த, வசதியான ஆண்களையே டேட்டிங் செயலியில் தேடி வந்த இளம் பெண்கள், தற்போது தங்களை விட வயது குறைவான ஆண்கள் மீது விருப்பம் காட்டுவது தெரியவந்துள்ளது. குறைந்த வயது ஆண்களே, காதல் செய்வதில் டெடிகேஷன் காட்டுவதாக பெண்கள் கருதுகின்றனர். எதார்த்தமாக மனதில் தோன்றுவதை பேசுவதும், Wacky மனநிலையில் இருப்பதும் பெண்களை கவர்வதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!