India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவு சீர்குலைந்தது. இதற்கிடையே, வங்கதேச நீதிபதிகள் 50 பேர் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஷேக் ஹசினாவை நாடு கடத்துவது குறித்து இந்தியா பதில் அளிக்காததால், அத்திட்டத்தை வங்கதேச அரசு ரத்து செய்துள்ளது.
கடவுளை நினைத்து மனமுருகி வேண்டும் போது, சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இது நல்ல சகுனம் தானே தவிர தவறில்லை. அதற்கு பெயர் தான் பக்தி. அதே நேரத்தில், உங்களுடைய பிரார்த்தனைகளை கடவுள் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் கடவுளை வழிபட வேண்டுமே தவிர, எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என அழுது கொண்டே ஒருபொழுதும் பிரார்த்திக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. 4 நாள்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்பை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். பின்னர், 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு வழக்கறிஞர் தொடர்பான ஆவணப் படத்தை பார்த்தபடி இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர். அடுத்த சில நாள்களில் தற்போதைய அதிபர் பைடன் இத்தாலி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் இருந்ததே கருப்பு துப்பட்டா சர்ச்சைக்கு காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டா அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில், இனியும் இதுபோன்று நிகழாமல் இருக்க சென்னை காவல் பிரிவிற்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழகத்தில் மையம் கொண்ட இசைப்புயல், இன்றும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ராஜா மயக்கத்தில் இருந்த ரசிகர்கள், “சின்ன சின்ன ஆசை…” என்ற மெல்லிய தொடுதலில் மெய்சிலிர்த்து போனார்கள். ஆஸ்கர் விருது, தேசிய விருது, கிராமி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கையில் ஏந்தி, ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று.
தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மறைந்த பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாள்கள் கூட்டத்தொடரை நடத்துவது என முடிவெடுக்கும். கூட்டத்தொடரில் பொங்கல் பரிசுத் தொகை குறித்த அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் கலந்து கொள்ளும் மாடுகளின் பதிவுகளை madurai.nic.in இணையதளம் மூலம் பெயர்கள், மாடுகளின் விவரங்களை பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஜன. 14ஆம் தேதி அவனியாபுரம், ஜன. 15ஆம் தேதி பாலமேடு, ஜன. 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
*1899 – இந்தியாவின் வைசிராயாக கர்சன் பிரபு நியமனம். *1912 – நியூ மெக்சிக்கோ 47ஆவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது. *1929 – இந்தியாவில் நோயுற்றவர்களுக்கு சேவை செய்ய கல்கத்தா வந்தார் அன்னை தெரசா. *1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது. *1967 – ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தார். *1989 – இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
உறவினரின் வளைகாப்புக்கு சென்ற போது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் SI இளவரசி(28), அவரது கணவர் கலைவேந்தன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் GHஇல் வைக்கப்பட்டுள்ள இருவரது சடலங்களைப் பார்த்து உறவினர்கள் அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்துள்ளது. விபத்தில் பலியான இந்த தம்பதிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.