India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதுகுறித்து Xல் விளக்கமளித்த ஆளுநர் மாளிகை, பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டதால் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியதாகவும் கூறியது. முதலில் பகிர்ந்த இப்பதிவை நீக்கிய ஆளுநர் மாளிகை பின், மோடி, அமித்ஷாவை Tag செய்து மீண்டும் பதிவிட்டது.
தமிழ்நாட்டில் 2.2% மட்டுமே ஏழைகள் உள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதிஆயோக் அறிக்கையின்படி, பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் ஏழைகளின் தேசிய சராசரி 14.96% ஆக உள்ள நிலையில், மருத்துவம், வீட்டுவசதி, கல்வி உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் மாநிலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்குள் 5 லட்சம் வறிய குடும்பங்கள் மேம்படுத்தப்படும் எனவும் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் அதிகம் பரவிவரும் HMPV வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது. பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதை கர்நாடக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், எங்குமே பயணம் செய்திராத குழந்தைக்கு இந்த தொற்று எப்படி ஏற்பட்டது என ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறனர். மேலும், குழந்தையை சந்தித்த வேறு யாருக்கும் தொற்று உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
TN சட்டப்பேரவையில் இருந்து பாமக MLAக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் GK மணி, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளதாகவும், போராடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து பாமக வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார். முன்னதாக, அண்ணா பல்கலை. விவகாரத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக மகளிரணியினரை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு பெரிய லாக்டவுன் ஏற்பட்டு விடுமோ என அச்சுறுத்தும் வகையில் சீனாவில் வேகமாக பரவி வருகிறது HMPV வைரஸ். இது எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் 2 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளை, 65 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகளவில் பாதிக்கிறது. இதன் பொதுவான symptoms: காய்ச்சல், குளிர் ஜூரம், மூச்சுநுண்குழாய் அழற்சி, சளி போன்றவை ஆகும். இந்த வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்த ஆய்வக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சீனாவில் வேகமாக பரவிவரும் HMPV வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்குள் நுழையக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தையை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்று மாநில அரசு அரசாணையே வெளியிட்டிருக்கிறது. ஆனால், பேரவையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். அதனை சபாநாயகரும் முதல்வரும் ஏற்காததால் ஆளுநர் வெளியேறியிருக்கிறார்.
உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் அதனை சபாநாயகர் தானே வாசித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை ஆளுநர் உரையாக வாசிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டும் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதால் சபாநாயகர் அதனை தமிழில் வாசித்து வருகிறார்.
சட்டப்பேரவையில் உரையை தொடங்குவதற்கு முன்னரும், பின்னரும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் மட்டும் இந்த முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் ராஜ்பவன் குற்றம்சாட்டியுள்ளது. இது தேசிய கீதத்துக்கு அவமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில், ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இதனிடையே, பேரவையில் இருந்து வெளியேறிய செல்வப்பெருந்தகை, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., MLAக்கள் வெளிநடப்பு செய்ததாகக் கூறினார். நீட்டிற்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாகவும், தமிழகத்திற்கு எதிராக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து வந்ததாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.