News January 6, 2025

BREAKING: சென்னையில் HMPV தொற்று

image

சென்னையில் 2 குழந்தைகளுக்கு புதிய HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் HMPV தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கர்நாடகா 2, குஜராத் 1, கொல்கத்தா 1, தமிழ்நாட்டில் 2 என ஒரே நாளில் 6 பேருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. சளி, இருமல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை இதன் அறிகுறியாகும்.

News January 6, 2025

அஜித் ரசிகர்களுக்கு ஏப்.10 தான் பொங்கல். ஏன் தெரியுமா?

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்ததால், இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. அஜித் ஃபேன்ஸ்க்கு பொங்கல் ஏப்ரலில்தான் போல!

News January 6, 2025

மாஸ்க் அணிவது கட்டாயம்: முதல் மாநிலமாக அமல்

image

HMPV வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதியான நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை பொறுத்து மற்ற மாநிலங்களிலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 6, 2025

அயர்லாந்து தொடர்: இந்திய அணி அறிவிப்பு

image

அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ODI தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா கேப்டனாகவும், தீப்தி சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதிகா ராவல், ஹார்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஹர்மன்ப்ரீத் கவுர், ரேணுகா சிங் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குவோர் எத்தனை பேர்?

image

2024ஆம் ஆண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளவர்களின் விவரங்கள் மூலம் நம் நாட்டில் எத்தனை பேர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 5 – 10 லட்சம் சம்பளம் வாங்குவோர் 1.28 கோடி பேர் இருக்கின்றனர். 10-15 லட்சம் சம்பளம் பெறுவோர் 50 லட்சம் பேர், 15 – 20 LPA – 19 லட்சம் பேர், 20-25 LPA – 9 லட்சம் பேர், 25 – 50 LPA – 13 லட்சம் பேர் எனத் தெரியவந்துள்ளது.

News January 6, 2025

சீன வைரஸ் தாக்காமல் தடுக்க TIPS

image

சீன வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம். *கைகளை தண்ணீர், சோப் கொண்டோ (அ) சானிடைசர் காெண்டோ 20 விநாடிகள் சுத்தம் செய்தல் *இருமல் (அ) தும்மலின்போது வாய், மூக்கை துணியை கொண்டு மூடுதல் *மாஸ்க் அணிதல் *உடல்நிலை பாதிக்கப்பட்டோரிடம் இருந்து விலகி இருத்தல் *சுத்தமில்லாத கைகளால் கண்கள், மூக்கு, வாயை தொடுவதை தவிர்த்தல் *உடல்நிலை பாதித்தால் சுயதனிமை. SHARE IT.

News January 6, 2025

ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த விஜய்

image

சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் பேரவை கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநர் – அரசுக்கு இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கை கைவிட்டு, மக்கள் பிரச்னைகள் குறித்தான விவாதங்களே பேரவையில் இடம் பெற வேண்டும். அதனை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

மது விற்பனை சரிவு ஏன்? டாஸ்மாக்கிற்கு சுற்றறிக்கை

image

டாஸ்மாக் கடைகளில் ஜன.1ஆம் தேதி மது மற்றும் பீர் விற்பனை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், விற்பனை சரிவிற்கான காரணத்தை கண்டறியும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், விற்பனை சரியாமல் இருப்பதையும், போலி மது விற்பனை நடைபெறாமல் உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

News January 6, 2025

பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

image

ஆப்கன் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, உள்நாட்டில் ஏற்பட்ட தோல்விகளுக்கு அண்டை நாடுகளின் மீது குற்றம் சுமத்துவது பாகிஸ்தானுக்கு பழக்கமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். AFG-PAK எல்லையில் தற்போது தீவிர தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News January 6, 2025

ஜன.1 புத்தாண்டில் சரிந்த பீர் விற்பனை

image

மதுபிரியர்கள் அதிகம் விரும்பி குடிக்கும் பானங்களில் பீரும் ஒன்று. 2025 ஜன. 1இல் டாஸ்மாக்கில் 90,109 பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. 2024 ஜன.1இல் 93, 883 விற்பனையாகின. அதனுடன் ஒப்பிடுகையில் இது 4.02% குறைவு. 2024 டிசம்பரிலும் பீர் விற்பனை 1.48% குறைந்துள்ளது. ஜன.1இல் நெல்லை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பீர் விற்பனை குறைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!