India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் மேற்கொள்ளப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். 1951 முதல் 2004 வரை 8 முறை மட்டுமே SIR நடத்தப்பட்டதாகவும், கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002 – 2004-ல் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தேர்தலுக்கு முன்பு வாக்காளர் சரிபார்ப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிஹாரில் வெற்றிகரமாக SIR நடத்தப்பட்டதாகவும், 2-ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெற உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான, தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான அணியில் டெவால்ட் பிரெவிஸ், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சென், ரபாடா, கேஷவ் மஹராஜ், ரியான் ரிக்கல்டன், எய்டன் மார்க்ரம் உள்ளிட்ட 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவ.14-ம் தேதி கொல்கத்தாவிலும், நவ.22-ம் தேதி கவுஹாத்தியிலும் நடைபெறவுள்ளது.

SIR தொடர்பாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடும் TN அரசு அதிகாரிகளை, திமுக அரசு சந்தேகிக்கிறதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். RK நகர் இடைத்தேர்தலின் போது போலி வாக்காளர் குறித்து திமுக வழக்கு தொடர்ந்தது மறந்து விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தவறுகளை மறைக்கவே, திமுக SIR-ஐ கையில் எடுத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் வந்த நிலையில், அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். எனினும் ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்று போலீசார் அங்கு சோதனை நடத்தவில்லை. 2 வாரங்களுக்கு முன்பாக, இதே போல அவரது வீட்டிற்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனஸ் மீண்டும் ஒருமுறை இந்தியாவை வம்பிழுத்துள்ளார். பாக்., தளபதிக்கு அவர் பரிசளித்த மேப்பில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்தின் மாநிலங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செக் வைக்க, சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார்.

தனது புகைப்படத்தை வைத்து AI-ஆல் உருவாக்கப்பட்ட, ஆபாச வீடியோ இணையதளத்தில் பரவி வருவதாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஐதராபாத் போலீஸில் புகாரளித்துள்ளார். உடனே அந்த வீடியோக்களை நீக்குமாறும், இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தன்னிச்சையாக நடக்கவில்லை எனவும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மொன்தா’ புயல், நாளை தீவிர புயலாக மாறக்கூடும் என IMD ஏற்கெனவே கணித்திருந்தது. இந்நிலையில், மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது 17 கி.மீ., வேகத்தில் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காக்கிநாடா அருகே நாளை(அக்.28) மாலை (அ) இரவு கரையை கடக்க இருப்பதால், ஆந்திரா, ஒடிசா, தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கன், மட்டனை விட பலருக்கும் மீன் பிடிக்கும். தினமும் மீன் சாப்பிடலாமா என்றால், தாராளமாக என்று கூறுகின்றனர் டாக்டர்கள். மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை மூளை, கண்கள், உடல் எடையை சீராக்க, இதய பிரச்னை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆக தினமும் சாப்பிடலாம், அதேநேரம் சாப்பிடும் அளவில் கவனம் தேவை என்பதே டாக்டர்கள் அட்வைஸ்.

இதுவரை நடிகை, நடிகர்களின் Deep Fake வீடியோக்கள் வெளியாகின. அது தற்போது சாதாரண மக்கள் வாழ்விலும் புகுந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த ராகுலிடம், ₹20,000 தரவில்லை என்றால், அவரது 3 சகோதரிகளின் AI Deep Fake நிர்வாண வீடியோக்களை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் ராகுல் தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற மிரட்டல்கள் வந்தால் பதற்றமாகாமல், போலீஸை அணுக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.