News April 19, 2025

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

image

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். குண்டூரில் ரத்தன் டாடாவின் சிலையை திறந்து வைத்து பேசிய ராஜூ, கல்வி, மருத்துவ துறைகளில் அவர் செய்த சாதனைகள் அளப்பரியவை என புகழ்ந்தார். ரத்தன் டாடாவின் சேவைகளை நினைவுகூரும் வகையில் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

News April 19, 2025

நீட் மரணம்: மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி

image

நீட் தேர்வு ரத்து என்ற திமுகவின் பொய் வாக்குறுதியால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு, இன்று அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக மாணவர் அணியினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். பொய் வாக்குறுதி அளித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாக்குகளைப் பெற்று திமுக வெற்றி பெற்றதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

News April 19, 2025

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு.. கல்வித்துறை முக்கிய தகவல்

image

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் முடிவடைந்துள்ளது. 10-ம் வகுப்புக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 9-ம் தேதியும், 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதியும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News April 19, 2025

குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த கவர்னர் ஆர்.என்.ரவி!

image

டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்த நிலையில், ஆர்.என்.ரவி திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

News April 19, 2025

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்து!

image

சென்னையில் விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகர் பாபி சிம்ஹாவின் டிரைவர் புஷ்பராஜ் ஓட்டிய கார் சாலையில் சென்ற 6-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து சேதப்படுத்தியது. இதில் பெண் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் டிரைவர் புஷ்பராஜை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். மதுபோதையால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

News April 19, 2025

மகளின் மாமனாருடன் ஓட்டம் பிடித்த தாய்!

image

என்னதான் நடக்குது? அப்படினு கேட்குற அளவுக்கு உ.பி.யில் விநோதமான காதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அண்மையில், பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன், <<16041082>>மாமியார்<<>> ஓடிச் சென்றது பெரும் பரபரப்பானது. அடுத்த ட்விஸ்டாக படாவுனைச் சேர்ந்த மம்தா என்ற பெண், தனது மகளின் மாமனார் சைலேந்திராவுடன், ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் லாரி டிரைவரான அவரது கணவர் மனம் நொந்து போலீஸில் புகாரளித்துள்ளார்.

News April 19, 2025

அதே ஸ்கிரிப்ட்.. RCB-யின் 18-ம் எண் சாபம்!

image

நேற்று PBKS அணிக்கு எதிராக, RCB-யின் தோல்வி ஒரு dejavu- ஃபீலிங்கை கொடுக்கிறது. ஏப்ரல் 18, 2008-ல் KKR அணிக்கு எதிரான மேட்ச்சில் வெறும் 82 ரன்னில் சுருண்டது RCB. அன்று கோலி 1 ரன்னில் அவுட்டாகினார். 18 வருடங்கள் கழித்து, அதே ஏப்ரல் 18-ல் நேற்றும் 95 ரன்னிலேயே RCB சுருண்டது. நேற்றும் கோலி 1 ரன் மட்டுமே அடித்தார். அதே ஸ்கிரிப்ட் வருது. கோலி ஜெர்சி நம்பர் சொல்லி தெரியவேண்டியதில்லை.

News April 19, 2025

வீட்டில் சிலிண்டர் சீக்கிரம் காலியாவதை தடுக்க…

image

◆அரிசி, பருப்பு, சுண்டல் போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும் ◆சின்ன வளைவான பாத்திரங்களை பயன்படுத்தினால், தீ வேகமாக பரவி சமையல் சீக்கிரம் முடியும் ◆அடுப்பின் பர்னர் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள் ◆பாத்திரங்களை கழுவியவுடன், ஈரத்தோட அடுப்பில் வைக்காதீர்கள் ◆ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த காய்கறிகளை சிறிது நேரம் வெளியில் வைத்துவிட்டு உபயோகப்படுத்தவும்.

News April 19, 2025

இந்த வாரம் முடிவுக்கு வந்த தங்கம் விலை!

image

தங்கம் விலை இந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த வந்த நிலையில், இன்று (ஏப்.19) மாற்றமின்றி விற்பனையாகிறது. இந்த வாரத்தில் 1 கிராம் 225 ரூபாயும், சவரன் 1,800 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று மாற்றமின்றி 1 கிராம் ₹8,945-க்கும், ₹71,560-க்கும் விற்பனையாகிறது. நாளையும் இதே விலைதான் என்பதால் ஒரு ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?

News April 19, 2025

பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அதேநேரம் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வரை வெயில் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியே செல்லும் போது குடையோடு போங்க மக்களே.!

error: Content is protected !!