News November 18, 2024

பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்

image

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார். ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், நேற்று கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், ஒரே நாளில் இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார். இதனால், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News November 18, 2024

இபிஎஸ்-க்கு விஜய் அனுப்பிய மெசேஜ்..!

image

திமுகவை எதிர்த்ததால் உற்சாகமடைந்த அதிமுக, இனி விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என ர.ர.க்களுக்கு உத்தரவும் போட்டது. இதனால் இபிஎஸ் – விஜய் கூட்டணி உருவாகும் என பேசப்பட்ட நிலையில், பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதே லட்சியம் என தவெக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் “அதிமுகவுடன் ஒட்ட வந்தவர்கள் அல்ல.. ரீபிளேஸ் செய்ய வந்தவர்கள் நாங்கள்” என்ற மெசேஜைதான் இபிஎஸ்க்கு விஜய் அனுப்பியுள்ளார்.

News November 18, 2024

கங்குவா பத்தி சும்மாவே நெகட்டிவா பேசுறாங்க – சூரி

image

சூர்யாவின் கங்குவா படத்தை நடிகர் சூரி பாராட்டி பேசியுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு பேசியவர், கங்குவா படம் நன்றாக உள்ளது. என் குழந்தைகளுக்கு படம் பிடித்தது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சிக்கு தலைவணங்குகிறேன். ஒரு சிலர் வாரா வாரம் கேமரா முன் வரவேண்டும் என்பதற்காக படத்தை பற்றி நெகட்டிவாக பேசுகிறார்கள் என்றார்.

News November 18, 2024

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி: கர்ஜித்த விஜய்

image

அதிமுகவுடன் கூட்டணி என்பதை திட்டவட்டமாக மறுத்த தவெக, அதிரடியாகவும் சில கருத்துகளை கூறியுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் தமிழக மக்களின் பேராதரவை பெற்று நல்லாட்சியை அமைப்பதே லட்சியம் எனக் கூறியுள்ள தவெக, இந்த விஷயத்தை மாநாட்டிலேயே விஜய் தெளிவுப்படுத்தியுள்ளாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தவெக தனித்தோ அல்லது அதன் தலைமையில் கூட்டணி அமைத்தோ தான் போட்டியிடும் எனத் தெளிவாகியுள்ளது.

News November 18, 2024

நாளை விண்ணில் பாய்கிறது GSAT N-2 செயற்கைக்கோள்!

image

இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் இந்தியாவின் அதிநவீன செயற்கைக்கோள் GSAT N-2 அமெரிக்காவில் இருந்து நாளை விண்ணில் பாய்கிறது. 4,700 கிலோ எடையுள்ள இந்த GSAT-N2 செயற்கைக்கோள் விமான சேவைகள் உட்பட இந்தியா முழுவதும் இணைய இணைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இதன் மூலம் இந்தியா-அமெரிக்கா உறவு மேம்படும்.

News November 18, 2024

கண்ணீர் விட வைக்கும் வெங்காய விலை!

image

தமிழகத்தின் பல பகுதிகளில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ₹100ஐ தொட்டிருப்பதால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்று உயர்தர வெங்காயம் கிலோ ₹80 முதல் ₹100க்கு விற்கப்படுகிறது. மூன்றாம் தர பெரிய வெங்காயம் கிலோ ₹50க்கு விற்கப்படுகிறது. வரும் காலங்களில் வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News November 18, 2024

பற்றி எரியும் மணிப்பூர்: என்ன நடக்கிறது?

image

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி இனத்தினரை ST பட்டியலில் சேர்க்க அம்மாநில HC கூறியதால், கடந்த ஆண்டு பெரும் கலவரம் வெடித்து 250+ பேர் பலியாகினர். இந்நிலையில், கடந்த வாரம் ஜிரிபாம் என்ற இடத்தில், 6 மெய்திகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மீண்டும் அங்கு கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில் மணிப்பூரை ஆளும் BJP அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக கூட்டணி கட்சி NPP அறிவித்துள்ளது.

News November 18, 2024

அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொ.செ. புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவுடன் தவெக கூட்டணி என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. தவெகவின் எழுச்சியை மடைமாற்றும் முயற்சி இது. தவெகவை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

News November 18, 2024

ராகிங் கொடுமையால் MBBS மாணவர் மயங்கி விழுந்து பலி!

image

குஜராத்தின் பதானில் உள்ள G.M.E.R.S மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததில் முதலாமாண்டு மாணவர் உயிரிழந்தார். கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் அனில் மெத்தானியா(18) என்ற மாணவரை சீனியர் மாணவர்கள் சிலர் 3 மணிநேரம் நிற்க வைத்து ராகிங் செய்துள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2024

பாஜகவில் இணைகிறாரா கைலாஷ் கெலாட்?

image

ஆம் ஆத்மியில் இருந்து ராஜினாமா செய்த டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி உள்துறை அமைச்சராக இருந்த அவர், ஆம் ஆத்மி கட்சியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகினார். இதனையடுத்து ‘வாஷிங் மெஷின் பாஜக’ என்ற கோஷத்தை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.