News January 1, 2026

ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்

image

2026 புத்தாண்டை வரவேற்று, உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் 00.01 மணிக்கு இடைவிடாமல் வாணவேடிக்கைகள் அரங்கேறின. பொதுஇடங்களில் அலைகடலென திரண்டிருந்த மக்கள், ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் சில கண்கவர் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்க்கவும்..

News January 1, 2026

அன்புக்குரியவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

image

நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் பகிர்வதற்கான சில புத்தாண்டு வாழ்த்துகள்.. *எண்ணங்கள் யாவும் வண்ணங்களாய் மாறி இன்பம் நிறையும் இனிய வருடமாக அமைந்திட மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் *2026 புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், குறைவில்லா செல்வத்தையும் தரும் ஆண்டாக மலர வாழ்த்துகள் *புதியதொரு வருடம் புத்தம் புது பூ போல மலர்கிறது, 365 நாட்களும் இந்த பூ உங்கள் வாழ்வில் வாசம் வீசட்டும்..

News January 1, 2026

கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு மஸ்க்கின் புத்தாண்டு பரிசு

image

X-ல் ஒரிஜினல் பதிவுகளை பதிவிடும் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கான வருமானத்தை அதிகரிக்க உள்ளதாக அதன் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கண்டெண்ட் குவாலிட்டியில் கடுமையான விதிகள் பின்பற்றப்படும் எனவும், கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு யூடியூப் நல்ல வருமானத்தை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். X பதிவுகளில் என்கேஜ்மெண்ட் அடிப்படையில் விளம்பரங்கள் மூலம் தொகை வழங்கப்படுகிறது.

News January 1, 2026

விஜய் தான் ‘ஜனநாயகன்’ டைரக்டரா?

image

விஜய் ஒரு பக்கா டைரக்டர் என்று ஹெச்.விநோத் கூறியுள்ளார். ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டியதைவிட அதிகமாகவே அவருக்கு தெரிந்திருப்பதாக ஹெச்.விநோத் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, பகவந்த் கேசரியை ரீமேக் செய்ய விஜய் விரும்பியதாக கோலிவுட்டில் பேசப்பட்டது. ஹெச்.விநோத்தும் அதை மறுக்காமல் இது தளபதி படம் என மழுப்பலாக பதிலளிக்கிறார். இதனால் ஜனநாயகன் டைரக்டர் விஜய் தானோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுகிறது.

News January 1, 2026

ஜனவரி 1: வரலாற்றில் இன்று

image

*1877–இந்திய பேரரசின் மகாராணியாக விக்டோரியா அறிவிப்பு *1951–நடிகர் நானா படேகர் பிறந்தநாள் *1971–நடிகர் கலாபவன் மணி பிறந்தநாள் *1971–அரசியல்வாதி ஜோதிர் ஆதித்யா சிந்தியா பிறந்தநாள் *1975–நடிகை சோனாலி பிந்த்ரே பிறந்தநாள் *1978–துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா 855 போயிங் 747 விமானம் வெடித்ததில் 213 பயணிகள் உயிரிழப்பு *1979–நடிகை வித்யா பாலன் பிறந்தநாள் *1995–உலக வர்த்தக அமைப்பு உருவாக்கம்

News January 1, 2026

சிலிண்டர் விலை உயர்வு!

image

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹110 ஏற்றப்பட்டு சென்னையில் ₹1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ₹868.50 ஆக தொடர்கிறது.

News January 1, 2026

போரில் வெற்றி பெறுவோம்: புடின்

image

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவே வெற்றிபெறும் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ராணுவ வீரர்களுடன் உரையாடிய அவர், உங்கள் மீதும் நம் வெற்றியின் மீதும் நம்பிக்கை உள்ளதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு எதிராக போராடும் ராணுவ வீரர்களுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனிடையே, 2026 டிச.31 உடன் ஆட்சி அதிகாரத்தில் புடின் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

News January 1, 2026

அப்துல்கலாம் பொன்மொழிகள்!

image

*கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால் தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும் *அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு *எல்லா பறவைகளும் மழைக்காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும் *ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான் *மதிப்பீடுகளுடன் கூடிய கல்வி முறையே இன்றைய தேவை

News January 1, 2026

காங்கிரஸுடன் கூட்டணியா? அருண்ராஜ் பதில்

image

அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என தவெகவின் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய்யை CM வேட்பாளராக ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் அரவணைத்து ஏற்க தயார் என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ், தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் அறிவிப்பு வரும் என்றும், கூட்டணி அமைப்பு குழு அமைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.

News January 1, 2026

SKY உடன் ரிலேசன்ஷிப்பில் இல்லை: நடிகை

image

சமீபத்தில் இந்திய டி20 கேப்டன் <<18713562>>SKY<<>> தனது மனைவியுடன் திருப்பதி சென்றிருந்த நிலையில், கடந்த காலங்களில் அவர் தனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவருடன் ரொமாண்டிக் ரிலேசன்ஷிப்பில் இல்லை, நட்பு ரீதியாகத்தான் பேசிக்கொண்டு இருந்ததாக நடிகை விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவருடன் பேசியே நீண்ட நாள்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!