News April 18, 2025

வித்தியாசமான பெயரை குழந்தைக்கு வைத்த ராகுல்

image

கடந்த 24-ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது பிறந்தநாளான இன்று குழந்தைக்கு ‘எவராஹ்’ என ராகுல் பெயர் சூட்டியுள்ளார். மனைவி குழந்தையுடன் தான் இருக்கும் போட்டோவுடன் பெயரை இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார். ‘எவராஹ்’ என்ற பெயருக்கு ‘கடவுளின் பரிசு’ என அர்த்தம் என்பதையும் ராகுல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பெயர் நல்ல இருக்கா?

News April 18, 2025

OTTக்கு வரும் ‘வீர தீர சூரன்’.. பாக்க ரெடியா..

image

பல தடைகளை தாண்டி வெளியான விக்ரமின் ‘வீர தீர சூரன்’ -2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு இரவில் நடக்கும் கதையில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்டோரின் மாறுபட்ட நடிப்பு மக்களை கவர்ந்தது. திரையில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது OTT-க்கு வருகிறது. வரும் 24-ம் தேதி அமேசான் பிரைம் OTT-யில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News April 18, 2025

வார விடுமுறை கேட்டு மனு

image

மக்களுக்காக அயராது உழைக்கும் போலீசுக்கு நாள் கிழமை கிடையாது, நேரம் காலம் கிடையாது, விடுமுறையை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதனை மாற்றும் வகையில், போலீசுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும் என்று 2021ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு, ஐகோர்ட்டில் காவலர் ஒருவர் மனு அளித்திருக்கிறார்.

News April 18, 2025

வங்கதேசத்தின் மூக்கை உடைத்த இந்தியா!

image

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக மே.வங்கத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மைனாரிட்டி முஸ்லிம்களை காக்க இந்தியா நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேசம் வலியுறுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, முதலில் அங்குள்ள மைனாரிட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள், தேவையின்றி மூக்கை நுழைக்காதீர்கள் என பதிலடி தந்துள்ளது.

News April 18, 2025

உடல்நிலை பாதிப்பு.. நஸ்ரியா உருக்கமான பதிவு

image

தாம் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக நஸ்ரியா உருக்கமாக சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் இருந்தும், சமூகவலைதளத்தில் இருந்தும் நீண்ட நாள்களாக அவர் விலகியுள்ளார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நஸ்ரியா, தனது உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதிலிருந்து குணமாக மேலும் சில நாள்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். மிஸ் யூ நஸ்ரியா !

News April 18, 2025

கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க சிறப்புக்குழு

image

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் மோதலை தடுக்க சிறப்புக்குழு அமைக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது. பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள் படித்த கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மோதலில் ஈடுபடுவது வேதனையளிப்பதாக ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

News April 18, 2025

புகழ் பெற்ற ‘M*A*S*H’ பட நடிகர் பேட்ரிக் காலமானார்

image

மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஹாலிவுட்டின் நகைச்சுவை தொடரான ‘M*A*S*H’ நடிகர் பேட்ரிக் அடியார்டே (82) காலமானார். நாடகத்திலிருந்து வந்ததால் சார்லி சாப்ளின் சாயலில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ‘The King and I’, ‘High Time’, ‘World War II’ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். பேட்ரிக்கின் மறைவு ஹாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

News April 18, 2025

பைலட் பயிற்சிக்கான விதியில் அதிரடி மாற்றம்?

image

12-ம் வகுப்பில் கலை, வணிகவியல் பிரிவுகளில் வெற்ற பெற்ற மாணவர்களும் இனி விமான பைலட் ஆகலாம். இதற்காக விதிமுறைகளை மாற்ற விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. தற்போது 12-ம் வகுப்பில் அறிவியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விமான பைலட்டுக்கான பயிற்சி பெற முடியும். அந்த அடிப்படை கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

News April 18, 2025

1-5ம் வகுப்பு பள்ளிகளுக்கு 45 நாள்கள் விடுமுறை துவக்கம்

image

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. இதையடுத்து அவர்களுக்கு இன்று முதல் ஜூன் 1 வரையிலான 45 நாள்கள் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர். சிலர் தாத்தா-பாட்டி ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு தயாராகி வருகின்றனர். மேலும் சிலர், அடுத்த ஆண்டுக்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

News April 18, 2025

₹10,000ஐ தொட்ட தங்கம் விலை

image

தமிழ்நாட்டில் 1 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை முதல் முறையாக ₹10,000-ஐ கடந்துள்ளது. சொக்கத் தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தங்கம், நேற்று ஒரு கிலோ ₹1 கோடியை கடந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்தியாவிலும் தங்கம் விலை ராக்கெட் போல உயருகிறது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹8,945-ஆக உள்ளது.

error: Content is protected !!