News April 18, 2025

பிரபல எழுத்தாளர் மறைவு

image

இந்திய மலைகள், நதிகள் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் பில் எய்ட்கான் (90) காலமானார். ஸ்காட்லாந்தில் பிறந்த அவர், அமெரிக்காவில் பிறகு குடியேறினார். வீட்டில் தடுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், டேராடூன் ஹாஸ்பிடலில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் கடைசி ஆசைப்படி, ஹரித்வாரில் கங்கை நதிக்கரை அருகே நேற்று உடல் தகனம் செய்யப்பட்டது.

News April 18, 2025

இந்தியாவில் டெஸ்லா கார் எப்போது வருகிறது?

image

PM மோடி, எலான் மஸ்க்குடன் ஃபோனில் பேசியுள்ளார். இதற்கு முன், அமெரிக்காவில் நடந்த சந்திப்பின்போது விவாதித்த விவகாரங்கள் மற்றும் தற்போதைய இறக்குமதி வரிவிதிப்பு குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இதனால், இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் விரைவில் நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டின் 3வது காலாண்டுக்குள் மும்பை, டெல்லி, பெங்களூருவில் விற்பனை தொடங்கக்கூடும் என கூறப்படுகிறது.

News April 18, 2025

கோயில் ஓய்வூதியதாரர்களுக்கு இனி ரூ.2,000 கருணைத் தொகை

image

கிராம கோயில் பூசாரிகளுக்கு பைக் வாங்க அரசு ரூ.12,000 மானியம் வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிராம கோயில் பூசாரிகள், ஆதிதிராவிட கோயில் அர்ச்சகர்கள் 10,000 பேருக்கு பைக் வாங்க தலா ரூ.10,000 மானியம் தரப்படும் என்றார். கோயில் ஓய்வூதியதாரர்களுக்கு தரப்படும் பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படுதாகவும் அவர் கூறினார்.

News April 18, 2025

RBI ரூல்ஸால் பர்சனல் லோன் வாங்குவதில் சிரமம்!

image

தனிநபர் கடன்(Personal Loan) வாங்க நினைத்த பலர் இம்மாதத்தில் ஒப்புதல் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். காரணம், கடந்த ஜன.1 முதல் Cibil score 30 நாள்களுக்கு ஒரு முறைக்குப் பதிலாக 15 நாள்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்ற RBI-இன் ரூல்ஸ்தான். இதனால் 2 வாரங்களில் பரிவர்த்தனைகளில் செய்த சிறு தவறுகளால் ஒப்புதல் மறுக்கப்படுகிறது. உங்கள் EMI, மினிமம் பேலன்ஸ் விவகாரத்தில் கவனமாக இருங்க..

News April 18, 2025

பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதை கண்டறிந்த தமிழர்!

image

கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தவர் நிக்கு மதுசூதன் என்னும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் ‘Astrophysics & Exoplanetary Science’ பிரிவில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான குழுதான் James Webb தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளது. IIT-ல் பி.டெக் பட்டம் பெற்ற நிக்கு, Massachusetts யூனிவர்சிட்டியில் PhD முடித்துள்ளார்.

News April 18, 2025

பகவத் கீதைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: PM பெருமிதம்

image

பகவத் கீதைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியதற்கு PM மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது நமது பாரம்பரியத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். பகவத் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன எனவும் மோடி கூறியுள்ளார்.

News April 18, 2025

5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

News April 18, 2025

மீன்கள் விலை: கிலோவுக்கு ₹100 வரை அதிகரிப்பு

image

மீன்பிடித் தடைக்காலம் காரணமாக தமிழகத்தில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. ஏப்.15 அன்று மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியதை அடுத்து, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் வழக்கம் போல மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், பிடிக்கப்படும் மீன்கள் போதுமானதாக இல்லை. வரத்து குறைந்ததால் ஒவ்வொரு ரக மீனும் கிலோவுக்கு ₹100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

News April 18, 2025

விவாகரத்து பாதையில் அடுத்த சினிமா ஜோடி?

image

நஸ்ரியா, ஃபஹத் ஃபாசில் ஜோடி விவகாரத்து செய்யப் போவதாக தகவல் பரவுகிறது. நஸ்ரியாவின் அண்மைக் கால சோசியல் மீடியா பதிவுகளும் அதையே உணர்த்துவதாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, “நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ‘Sookshmadarshini’ திரைப்பட வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை. இது கடினமான நேரம்” என நஸ்ரியா பதிவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News April 18, 2025

தமிழ்நாடு என்றுமே OUT OF CONTROL தான்: CM ஸ்டாலின்

image

அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பாஜக வெற்றி பெறாது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் TNல் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாது. TN என்றும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். 2026-லும் திராவிட மாடல் ஆட்சியே மலரும் என்றார். TN MP தொகுதிகள் குறையாது, நீட் விலக்கு, இந்தி திணிப்பு இருக்காது என அமித் ஷா உறுதியளிப்பாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!