News October 28, 2025

3 நாள் STOP பண்ணுங்க.. அதிசயம் நடக்கும்!

image

இன்றைய ஜெனரேஷனின் மிகப்பெரிய சாபமே, ஸ்மார்ட்போன்தான். தொடர்ந்து 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தியவர்களின் மூளையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றனர். 72 மணிநேரம் போன் பயன்படுத்துவதை நிறுத்தி இளைஞர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களின் மூளை தன்னைத் தானே Reboot செய்துகொண்டது கண்டறியப்பட்டுள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?

News October 28, 2025

World சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் சரிவு

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) $119 குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ₹10,492 குறைந்துள்ளது. கடந்த 22-ம் தேதி $240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் பெரிய அளவில் சரிந்து $3,994-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

News October 28, 2025

உள்நோக்கத்துடன் ஒருநாள் முன்னர் தான் அனுமதி: தவெக

image

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஒருநாள் முன்னர்தான் உள்நோக்கத்துடன் அனுமதி அளிக்கப்பட்டதாக தவெக, சென்னை HC-ல் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, முன்கூட்டியே அனுமதி அளித்தால் அசம்பாவிதங்கள் நடைபெறாது என கூறியது. நிபந்தனைகள் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டியது. இதையடுத்து எல்லா கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என HC அறிவுறுத்தியுள்ளது.

News October 28, 2025

சனி தோஷத்தை விரட்ட..

image

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ
சனிப் ப்ரசோதயாத்
பொருள்:
ஓம், கொடியில் காக்கையை வைத்திருப்பவரை நினைத்துப் பார்க்கட்டும், ஓ, உள்ளங்கையில் வாளை ஏந்தியவரே, சனீஸ்வரர் என் எண்ணங்களை ஒளிரச் செய்யுங்கள். SHARE IT.

News October 28, 2025

வரலாற்றை மாற்றிய விஜய்

image

கரூர் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தனர். இதன்பிறகு அறிக்கை, வீடியோ என பனையூரிலேயே இருந்தார் (இருக்கிறார்) விஜய். சரி, பாதிக்கப்பட்டவர்களையாவது நேரில் சென்று பார்ப்பார் என்று பார்த்தால், ஆறுதல் கூறும் பாணியையே மாற்றி சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த ஆறுதல் நிகழ்ச்சியை கூட ஊடக வெளிச்சமின்றி நடத்தியுள்ளார். இது அவரது கட்சியினருக்கே அயற்சியை தருவதாக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

News October 28, 2025

விஜய்யுடன் இணையாதது வருத்தம்: சாய் அபயங்கர்

image

‘டியூட்’ பட இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் சாய் அபயங்கர். கருப்பு, மார்ஷல், அட்லீ – அல்லு அர்ஜுன் படம் என அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியாக உள்ளார். இந்நிலையில், ‘சாய் – விஜய் காம்போ மிஸ் ஆவது வருத்தமாக இருக்கிறது’ என்று ரசிகர் ஒருவர் சோஷியல் மீடியாவில் பதிவிட, ‘எனக்கும் வருத்தம் தான்’ என்று பதிலளித்துள்ளார் சாய். விஜய்யின் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ உள்ளதால், இந்த காம்போ அமையாது.

News October 28, 2025

BREAKING: இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

மொன்தா புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ளதால், கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.

News October 28, 2025

முதல் முறை ODI கேப்டன்களின் சாதனையும் சறுக்கலும்

image

சுப்மன் கில், ஆஸி.,க்கு எதிரான தொடரில் தோல்வியுற்றார். கில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜிம்பாப்வேக்கு (2013) எதிரான ODI தொடரை 5-0 என கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதில் 197 ரன்களையும் கோலி குவித்தார். இலங்கைக்கு (2017) எதிரான ODI தொடரை 2-1 என வெற்றி பெற்ற ரோஹித்தின் நீலப்படை வென்றது. ரோஹித் மட்டும் 217 ரன்களை குவித்தார். ஆஸி.,க்கு (2007) எதிரான தொடரில் தோல்வியுற்றது தோனியின் கேப்டன்சி.

News October 28, 2025

விஜய் புதிய அணுகுமுறையில் உள்ளார்: திருமாவளவன்

image

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து வந்து விஜய் பார்த்திருப்பது, அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையாக உள்ளது என திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் இடங்களுக்கு சென்று சந்தித்து, ஆறுதல் சொல்வதைத்தான் இவ்வளவு காலமாக நாம் பார்த்திருக்கிறோம், அதைத்தான் அரசியல் தலைவர்களும் பின்பற்றி வருகின்றனர் என்றும் திருமா குறிப்பிட்டார்.

News October 28, 2025

வின்னிங் கோச்சாக விரும்பவில்லை: கம்பீர்

image

நான் எப்போதும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை, இந்தியாவை பயமற்ற அணியாகவே உருவாக்க விரும்புகிறேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். ஹெட் கோச் கம்பீர் வழிகாட்டுதலில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, ஆஸி., உடனான ODI தொடரை இழந்தது. ஆஸி.,க்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் ஆட்டத்தின் மீது முழுக் கவனத்தையும் செலுத்துவோம் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

error: Content is protected !!