India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசியல் சூழ்ச்சி மற்றும் நில அபகரிப்பு மூலம் மும்பையை முழுவதும் விழுங்க பாஜக முயற்சி செய்வதாக உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மும்பையில் நிலத்தை அபகரித்து பாஜக அலுவலகம் கட்டப்பட்டதாக வெளியான பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டிய அவர், அனகோண்டாவை போல அனைத்தையும் அமித்ஷா விழுங்குவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் ஆப்கானியப் படையெடுப்பாளர் அஹமது ஷா அப்தாலியுடன் BJP தலைவர்களை ஒப்பிட்டும் சாடியுள்ளார்.

இந்த 3 அறிகுறிகள் இருந்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு சர்க்கரை நோய் வரலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். 1. கழுத்தை சுற்றி அளவுக்கு அதிகமாக கருமையாக இருத்தல் 2. கண்களுக்கு மேல், கழுத்தில் Warts எனப்படும் மருக்கள் வந்தால் 3. தொப்பை போட்டால் சுகர் வரும் ரிஸ்க் இருக்கிறதாம். இதனை சரி செய்ய நல்ல உணவும், உடற்பயிற்சியும் தேவை. அத்துடன் டாக்டரை அணுகுவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE THIS.

‘மொன்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் 65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து காக்கிநாடா, விசாகப்பட்டினம் எனக் கடலோர பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம், புதுச்சேரி – புவனேஸ்வர், டாடா நகர் – எர்ணாகுளம், காக்கிநாடா – பெங்களூரு உள்ளிட்ட முக்கிய ரயில்களின் சேவைகள் ரத்தாகியுள்ளன.

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட 8,858 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2 தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறனறித் தேர்வு. சம்பளம்: ₹19,900 – ₹35,400 முதல் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <

மொன்தா புயல் எதிரொலியாக சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மழைநீர் அப்புறப்படுத்துதல், மின்சார பிரச்னை உள்ளிட்டவைகளை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து DCM உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு செய்தார்.

பாலய்யாவின் புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ள இப்படம், வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ளதாம். ஏற்கெனவே ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களில் பாலய்யா உடன் நயன்தாரா நடித்திருக்கிறார். சமீப காலமாக கோலிவுட்டில் நயனுக்கு சரியான வெற்றி அமையாத நிலையில், டோலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார்.

திமுகவினர் சாதனையை சொல்லி வாக்கு கேட்காமல், மக்களிடம் சத்தியம் வாங்கி ஓட்டு வாங்குகின்றனர் என்று சீமான் விமர்சித்துள்ளார். திமுகவை எதிர்த்து பேசினால் தன்னை RSS, BJP-காரன் என்கின்றனர், பாஜகவை எதிர்த்தால் திமுகவின் கைக்கூலி என்கின்றனர், ஆனால் ஒருவரும் ஒரு பைசா கூட தருவதில்லை என்று தெரிவித்தார். SIR நடவடிக்கையில் சதி இருப்பது உண்மை தான் என தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார்.

இன்றைய ஜெனரேஷனின் மிகப்பெரிய சாபமே, ஸ்மார்ட்போன்தான். தொடர்ந்து 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தியவர்களின் மூளையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றனர். 72 மணிநேரம் போன் பயன்படுத்துவதை நிறுத்தி இளைஞர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களின் மூளை தன்னைத் தானே Reboot செய்துகொண்டது கண்டறியப்பட்டுள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) $119 குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ₹10,492 குறைந்துள்ளது. கடந்த 22-ம் தேதி $240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் பெரிய அளவில் சரிந்து $3,994-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஒருநாள் முன்னர்தான் உள்நோக்கத்துடன் அனுமதி அளிக்கப்பட்டதாக தவெக, சென்னை HC-ல் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, முன்கூட்டியே அனுமதி அளித்தால் அசம்பாவிதங்கள் நடைபெறாது என கூறியது. நிபந்தனைகள் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டியது. இதையடுத்து எல்லா கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என HC அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.