India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 தேர்தலுக்காக திமுக பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் பயிற்சி வழங்குகிறார். இதில், MP, MLA, மாவட்ட செயலாளர்கள், கிளை செயலாளர் என சுமார் 3,000 பேர் பங்கேற்றுள்ளனர். கரூர் மக்களை நேற்று விஜய் சந்தித்த அதே மாமல்லபுரம் ரிசார்ட்டில்தான் திமுகவின் இக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது.

கடந்த 4 நாள்களாக விலை மாற்றத்தை சந்திக்காமல் சைலண்ட் மோடில் இருந்த வெள்ளி இன்று(அக்.28) ஒரே அடியாக கிலோவுக்கு ₹5,000 குறைந்துள்ளது. 1 கிராம் ₹165-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த வெள்ளியின் விலை, மாதத்தின் கடைசி வாரங்களில் மளமளவென கிலோவுக்கு ₹41,000 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

டாக்டர் பரிந்துரைத்த நாள்களில் Syrup-ஐ குடித்துவிட்டு, Expiry Date இருக்கிறது என்பதற்காக ஸ்டாக் வைக்கக்கூடாது. Syrup பாட்டிலை திறக்கும்போது அதனுள் புகும் காற்றால், ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் தன்மையை இழந்து நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களால் இருமல் வரும் என்பதால், ஸ்டாக் வைத்த Syrup-ஐ எடுத்துக் கொள்ளக்கூடாது என்கின்றனர் டாக்டர்கள்.

கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 1 மாதமாக முடங்கிப்போய் இருக்கிறது தவெக. நேற்றுதான் பலியானோர் குடும்பத்தை அழைத்து விஜய் ஆறுதல் சொல்லி, இழப்பீடு வழங்கினார். இந்நிலையில், மீண்டும் புத்துணர்ச்சியோடு தேர்தல் பணிகளை தொடர்வது குறித்து 2-ம் கட்ட நிர்வாகிகளோடு விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், கட்சியின் பொதுக்குழுவை விரைவில் நடத்தவேண்டும் என விஜய் சொன்னதாக கூறப்படுகிறது.

இன்று தமிழகம், ஆந்திராவை அதிர வைத்துள்ள ‘மொன்தா’ புயலின் பெயர் காரணம் தெரியுமா? இப்பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ என்றால், ‘மணமிக்க மலர்’ அல்லது ‘அழகான பூ’ என பொருள் பெறுகிறது. மேலும், மென்மை, அழகு & இயற்கையின் மணத்தை குறிக்கவும் தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ குறிப்பிடப்படுகிறது. எனவே, இயற்கையின் அழகையும், மழையின் நறுமணத்தையும் ‘மொன்தா’ பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் துட்டு கொட்டோ கொட்டு’னு கொட்டும் கோயில் திருப்பதி என அனைவரும் அறிவோம். ஆனால், திருப்பதியை போலவே நாட்டின் பணக்கார கோயில்கள் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அந்த லிஸ்ட்டை பார்க்கவும். இவற்றில் எந்தெந்த கோயில்களில் நீங்க தரிசனம் செஞ்சிருக்கீங்க?

அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரீன் கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டினர் உள்பட அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் facial recognition மற்றும் பயோமெட்ரிக் சோதனைக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் வைத்திருப்பவர்களை கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று போல் இன்றும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதன்படி சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்ந்து 84,887 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 26,000 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. HDFC, BHARATHI AIRTEL, SBI உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேநேரம், ICICI, BAJAJ FINANCE, AXIS BANK உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன.

‘SIR’ என்றாலே திமுகவுக்கு பயம் என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவ.4-ல் தொடங்குகிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் TN-ல் மேற்கொள்ள கூடாது என திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவான போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதால்தான் SIR-யை திமுக எதிர்ப்பதாக நயினார் கூறியுள்ளார்.

கால்பந்து உலகின் அரசன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், 2026 உலகக்கோப்பையில் விளையாட விரும்புவதாக அவரே தெரிவித்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், உடற்தகுதி இருந்தால் மட்டுமே பங்கேற்பேன் எனவும் கூறியுள்ளார். தற்போது அவர் இன்டர் மியாமி அணி சார்பாக கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.