India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக நஸ்ரியா உருக்கமாக சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் இருந்தும், சமூகவலைதளத்தில் இருந்தும் நீண்ட நாள்களாக அவர் விலகியுள்ளார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நஸ்ரியா, தனது உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதிலிருந்து குணமாக மேலும் சில நாள்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். மிஸ் யூ நஸ்ரியா !
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் மோதலை தடுக்க சிறப்புக்குழு அமைக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது. பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள் படித்த கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மோதலில் ஈடுபடுவது வேதனையளிப்பதாக ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஹாலிவுட்டின் நகைச்சுவை தொடரான ‘M*A*S*H’ நடிகர் பேட்ரிக் அடியார்டே (82) காலமானார். நாடகத்திலிருந்து வந்ததால் சார்லி சாப்ளின் சாயலில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ‘The King and I’, ‘High Time’, ‘World War II’ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். பேட்ரிக்கின் மறைவு ஹாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
12-ம் வகுப்பில் கலை, வணிகவியல் பிரிவுகளில் வெற்ற பெற்ற மாணவர்களும் இனி விமான பைலட் ஆகலாம். இதற்காக விதிமுறைகளை மாற்ற விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. தற்போது 12-ம் வகுப்பில் அறிவியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விமான பைலட்டுக்கான பயிற்சி பெற முடியும். அந்த அடிப்படை கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. இதையடுத்து அவர்களுக்கு இன்று முதல் ஜூன் 1 வரையிலான 45 நாள்கள் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர். சிலர் தாத்தா-பாட்டி ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு தயாராகி வருகின்றனர். மேலும் சிலர், அடுத்த ஆண்டுக்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 1 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை முதல் முறையாக ₹10,000-ஐ கடந்துள்ளது. சொக்கத் தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தங்கம், நேற்று ஒரு கிலோ ₹1 கோடியை கடந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்தியாவிலும் தங்கம் விலை ராக்கெட் போல உயருகிறது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹8,945-ஆக உள்ளது.
லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய நியோமேக்ஸ் வழக்கு தொடர்பாக ₹600 கோடி மதிப்பிலான சொத்துகளை ED முடக்கியுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ், அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியது. இதில், சுமார் ₹5,000 கோடி ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ₹121.80 கோடி (இன்றைய மதிப்பில் ₹600 கோடி) மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.
இந்திய மலைகள், நதிகள் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் பில் எய்ட்கான் (90) காலமானார். ஸ்காட்லாந்தில் பிறந்த அவர், அமெரிக்காவில் பிறகு குடியேறினார். வீட்டில் தடுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், டேராடூன் ஹாஸ்பிடலில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் கடைசி ஆசைப்படி, ஹரித்வாரில் கங்கை நதிக்கரை அருகே நேற்று உடல் தகனம் செய்யப்பட்டது.
PM மோடி, எலான் மஸ்க்குடன் ஃபோனில் பேசியுள்ளார். இதற்கு முன், அமெரிக்காவில் நடந்த சந்திப்பின்போது விவாதித்த விவகாரங்கள் மற்றும் தற்போதைய இறக்குமதி வரிவிதிப்பு குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இதனால், இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் விரைவில் நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டின் 3வது காலாண்டுக்குள் மும்பை, டெல்லி, பெங்களூருவில் விற்பனை தொடங்கக்கூடும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.