News October 28, 2025

விஷ்ணு விஷாலின் நிறைவேறாத ஆசை

image

நடிகர் விஷ்ணு விஷால் ‘ஆர்யன்’ பட புரமோஷனில் பிஸியாக உள்ளார். இதனிடையே பேட்டி ஒன்றில் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்துள்ளார். தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் ஆசைப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன் மின்னல் முரளி, லோகா உள்ளிட்ட மலையாளப் படங்கள் வெளியாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

News October 28, 2025

துணை ஜனாதிபதியாக சொந்த மண்ணில் கால்பதித்த CPR

image

துணை ஜனாதிபதியாக தேர்வான பிறகு முதல்முறையாக தனது சொந்த மண்ணான கோவைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி ஆகியோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், வியாழன் அன்று தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். அன்றைய தினமே மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

News October 28, 2025

ஷ்ரேயஸ் உடல்நிலை குறித்து சூர்யகுமார் கொடுத்த அப்டேட்

image

<<18116578>>ஷ்ரேயஸ் உடல்நிலை<<>> சீராக உள்ளதாக டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும், மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்வதாகவும் சூர்யா கூறியுள்ளார். உடலில் நல்ல முன்னேற்றமடைந்தாலும், இன்னும் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் அவர் இருப்பார் எனவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 28, 2025

டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது

image

பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை, இரவு 10 மணிக்கு பதில், 1 மணி நேரம் முன்னதாக மூட அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, மதியம் 12 – இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்படுகின்றன. மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே, மழையின் சூழலுக்கு ஏற்ப கடைகளை சீக்கிரமாக மூட சில மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

News October 28, 2025

தங்கம், வெள்ளியை விட காஸ்ட்லியான உலோகங்கள்

image

தங்கம் வெள்ளியின் விலை இன்று குறைந்திருக்கிறது. இருந்தாலும், அதன் விலை இனி வரும்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் சொல்கின்றனர். தங்கம், வெள்ளியை விட விலை உயர்ந்த உலோகங்கள் சில இருக்கின்றன. இவை தொழிற்சாலை தேவைகளுக்காக பயன்படுகின்றன. அந்த விலை உயர்ந்த உலோகங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News October 28, 2025

முக்கியமான Calls-ஐ மிஸ் பண்ணாம இருக்க DO THIS

image

வீட்டில் உள்ளவர்கள் அவசர நேரத்திற்கு உங்களுக்கு Call பண்ணும்போது, அதனை எடுக்கமுடியாமல் போனால் ஏதாவது அசம்பாவிதம் நேரலாம். இதனை தவிர்க்க போனில் இந்த Settings-ஐ ON-ல வெச்சுக்கோங்க. ➤போனில் உள்ள Dial pad-க்கு சென்று ➤Calling Accounts ➤Call forward Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤நெருங்கிய உறவினரின் போன் நம்பரை உள்ளிடுங்கள். Call-ஐ நீங்கள் எடுக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு Forward ஆகும். SHARE.

News October 28, 2025

FLASH: 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

‘மொன்தா’ புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. எண்ணூரில் தொடர்மழை பெய்து வருவதால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். புயல் இன்று மாலை கரையை நெருங்கும் போது மணிக்கு 90 – 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்.

News October 28, 2025

நேற்று விஜய் சென்ற ரிசார்ட்டில் இன்று CM ஸ்டாலின்!

image

2026 தேர்தலுக்காக திமுக பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் பயிற்சி வழங்குகிறார். இதில், MP, MLA, மாவட்ட செயலாளர்கள், கிளை செயலாளர் என சுமார் 3,000 பேர் பங்கேற்றுள்ளனர். கரூர் மக்களை நேற்று விஜய் சந்தித்த அதே மாமல்லபுரம் ரிசார்ட்டில்தான் திமுகவின் இக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது.

News October 28, 2025

சற்றுமுன்: ஒரே அடியாக விலை ₹5,000 குறைந்தது

image

கடந்த 4 நாள்களாக விலை மாற்றத்தை சந்திக்காமல் சைலண்ட் மோடில் இருந்த வெள்ளி இன்று(அக்.28) ஒரே அடியாக கிலோவுக்கு ₹5,000 குறைந்துள்ளது. 1 கிராம் ₹165-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த வெள்ளியின் விலை, மாதத்தின் கடைசி வாரங்களில் மளமளவென கிலோவுக்கு ₹41,000 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

News October 28, 2025

இருமல் டானிக்கை ஸ்டாக் வைக்கலாமா? Must Read

image

டாக்டர் பரிந்துரைத்த நாள்களில் Syrup-ஐ குடித்துவிட்டு, Expiry Date இருக்கிறது என்பதற்காக ஸ்டாக் வைக்கக்கூடாது. Syrup பாட்டிலை திறக்கும்போது அதனுள் புகும் காற்றால், ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் தன்மையை இழந்து நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களால் இருமல் வரும் என்பதால், ஸ்டாக் வைத்த Syrup-ஐ எடுத்துக் கொள்ளக்கூடாது என்கின்றனர் டாக்டர்கள்.

error: Content is protected !!