India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை(தெய்வானை) மிதித்ததில் இருவர் உயிரிழந்தனர். திடீரென மதம் பிடித்த யானை கோயிலுக்கு வந்திருந்த 2 பேரை மிதித்தது. இதில் யானை பாகனின் உறவினரான சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த யானைப் பாகன் உதயகுமார் அருகில் உள்ள ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சற்றுமுன் பலியானார்.
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் முதல் பரவலாக மழை பெய்வது அனைவரும் அறிந்ததே. இப்படி மழை பெய்தும், 18 மாவட்டங்களில் மழை போதிய அளவில் பெய்யவில்லை, பற்றாக்குறை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சம் 41 செ.மீ. மழை பெய்தபோதும் 14 செ.மீ. பற்றாக்குறை என்றும், கடலூர் மாவட்டத்தில் 40 செ.மீ. மழை பெய்தாலும் 15 செ.மீ. பற்றாக்குறை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நடந்த TNPSC குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 5,000 பேருக்கு பணி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் விடைத்தாள் நகல் வெளியானது. அதில், பலருக்கு மதிப்பெண் முரணாக உள்ளது. விடைத்தாளை 2 மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்த நிலையில், 12 மதிப்பெண்களுக்கு முதல் மதிப்பீட்டாளர் 10 மார்க்கும், 2வது மதிப்பீட்டாளர் 0.5 மார்க்கும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
Bank of Barodaஇல் காலியாக உள்ள 592 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.19) கடைசி நாளாகும். Specialist Officer பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree, B.E, B.Tech, MBA, CA, Post Graduate. வயது வரம்பு: 22-45. சம்பளம்: ₹40,000. தேர்வு முறை: நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு: <
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சேலம் மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக நாதகவில் இருந்த அழகாபுரம் தங்கம் கட்சியில் இருந்து விலகியது அம்மாவட்ட நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கிருஷ்ணகிரி, நாகை, விழுப்புரம் நிர்வாகிகளைத் தொடர்ந்து சேலம் நிர்வாகியும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சிக்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே இன்று வருகை தந்தார். அப்போது, தான் தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை என்றார். பாகிஸ்தானியர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற்று குண்டு வைத்ததாகவே தான் கூறியதாகவும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் மன்னிப்பு கேட்டதாகவும் ஷோபா விளக்கம் அளித்தார். பெங்களூர் குண்டுவெடிப்புக்கு தமிழத்தில் இருந்து வந்தவர்களே காரணம் என ஷோபா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா: beyond the fairy tale ஆவணப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதில், நயன்தாரா பேசும் போது, எனக்கு எல்லாமே சினிமாதான், இனி நடிக்கக்கூடாது என்ற முடிவை நான் எடுக்கவில்லை. அந்நபரே சொன்னார். எனக்கு சாய்ஸே தரவில்லை. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டேன். பின்னர் தவறான நபரை நம்பிவிட்டோமே என்ற கவலை இருந்ததாக கூறினார். இவர் பிரபுதேவாவை தான் சொல்கிறார் என்ற நெட்டிசன்கள் அடித்து பேசுகிறார்.
சண்டிகரில் கென்யாவின் லுண்டா (2) என்ற சிறுவன், வீட்டில் தற்செயலாக தவறி விழுந்ததில் மூளை சாவு அடைந்துள்ளான். இதனை தொடர்ந்து, சிறுவனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவனது பெற்றோர்கள் முன்வந்துள்ளார். Pancreas ஒருவருக்கும், கிட்னி ஒருவருக்கும், 2 பேருக்கு கண் தானம் என 4 உயிர்களுக்கு சிறுவன் வாழ்வு அளித்துள்ளான். இந்தியாவில் சிறு வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையும் லுண்டா பெற்றார்.
சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை எலினா உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ம.பி.யில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கச் சென்று திரும்பிய அவர், ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து உடல்நல பாதிப்பால் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட எலினா உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்றும் (நவ.18), நாளையும் (நவ.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.