India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *காட்டாற்று ஓர சாலைகளில் பஸ்களை கவனமாக இயக்க வேண்டும். சாலைகளில் குறைவான தண்ணீர் இருந்தாலும் மாற்றுவழியை தேர்வு செய்யவும். *பஸ்களில் மழைநீர் ஒழுகுவது உள்ளிட்ட பிரச்னை இருந்தால் கிளை மேலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். *கடலோர சாலை பஸ் டிரைவர்கள் கூடுதல் கவனமாக இருங்கள்.

*நாகாலாந்திற்கு எதிரான ரஞ்சி போட்டியில், தமிழகம் முதல் இன்னிங்ஸில் 66 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. *19 வயதுக்கு உட்பட்ட மகளிர் நட்புறவு கால்பந்தில், இந்தியா கஜகஸ்தான் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. *மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் ஒலிம்பியாடில், கிஷன் கங்கோலி தங்கம் வென்றார். *23 வயதுக்கு உட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், சுஜீத் கல்கல் தங்க பதக்கத்தை வசப்படுத்தினார்.

பொது இடங்களில் 10 பேருக்கு அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளை நடத்த, தனியார் அமைப்புகள் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கர்நாடகா அரசின் உத்தரவை, அம்மாநில ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் உத்தரவு குடிமக்களின் அடைப்படை உரிமைகளை மறுப்பதாக புனஸ்சைதன்ய சேவா சமிதி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. முன்னதாக, RSS நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவே, இத்தகைய உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

ஒருபுறம் திருமண செலவுக்கே பலரும் தள்ளாடி வரும் நிலையில், உலகை ஆச்சரியப்பட வைக்கும் அதிக செலவிலான திருமணங்களும் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. இந்த லிஸ்ட்டில் யார் யாரின் திருமணங்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை பார்க்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. உங்க கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு பண்ணீங்க?

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக கோவை வந்த CP ராதாகிருஷ்ணன், கொடிசியா அரங்கில் நடைபெற்ற தொழில் துறையினருடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் துணை ஜனாதிபதி பதவி என்பது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை என அவர் தெரிவித்தார். நாடு உயர்ந்தால் தான் நாம் வளர முடியும் என்றும், விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்சிக்கு முக்கியம் எனவும் கூறினார்.

22 காரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் ₹3,000 குறைந்துள்ளது. காலையில் சவரன் ₹1,200 குறைந்த நிலையில், மதியம் மேலும் ₹1,800 சரிந்துள்ளது. சென்னையில், தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,075-க்கும், 1 சவரன் ₹88,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹9,000 சரிந்து, 1 சவரன் விலை மீண்டும் ₹90,000-க்கு கீழ் சென்றுள்ளது. SHARE IT.

கபடியில் தங்கம் வென்று கண்ணகி நகரை பெருமைப்படுத்திய கார்த்திகாவுக்கு தமிழக அரசு ₹25 லட்சம் பரிசு தொகை வழங்கியிருந்தது. இந்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என சீமான், திருமா, இபிஎஸ், வேல்முருகன் என பலர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தனக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கியிருக்கலாம் என கபடி வீராங்கனை கார்த்திகாவே பேசியிருக்கிறார். TN அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

2026 ஏப்.1 முதல், தங்கத்தைபோல் வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என RBI அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் பண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. நீங்கள் ₹2.5 லட்சம் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85% கடன் கிடைக்கும். ₹5 லட்சம் வரை 80% வரையும், அதற்கு மேல் 75% வரையும் கடன் பெறலாம்.

2019-ல் இருந்து தாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளை பெற்று வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம் என கூறிய அவர், அன்றைக்கு தலைப்புச் செய்தி, திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது என்பதுதான் என்றும் குறிப்பிட்டார். இதை ஆணவத்தில் சொல்லவில்லை, மக்கள் மீதான நம்பிக்கையிலேயே சொல்வதாகவும் வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தில் CM கூறினார்.

இந்திய சினிமாவை புரட்டிபோட்ட பாகுபலி படத்தின் பார்ட் 3-யை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆம், கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் & தயாரிப்பாளர்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தையில் ராஜமெளலி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படம் அனிமேஷன் படமாக எடுக்கப்படவுள்ளதாம். முன்னதாக, முதல் 2 பாகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, ‘பாகுபலி The epic’ என்ற பெயரில், வரும் அக்டோபர் 31-ம் தேதி ரிலிஸாகவுள்ளது.
Sorry, no posts matched your criteria.