India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
240 பயிற்சி ஊழியர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இதேபோல 300 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த கட்ட பணி நீக்கத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Trainee-யான இவர்களுக்கு, திறன் போதவில்லை என நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பணிக்கு எடுக்கும்போது அவர்களின் திறன் பற்றி தெரியவில்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
AP-ஐ சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவுக்கு பெங்களூரில் கால் சென்டர் வைத்துள்ள லூயிசுடன் பழக்கம் ஏற்பட்டது. 3 பேரும் கால்சென்டர் வரும் பெண்களிடம் ஆசைக்காட்டி, நிர்வாண வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்துள்ளனர். இதையறிந்த போலீஸ், 3 பேரையும் கைது செய்து 100 இளம்பெண்கள் நிர்வாண வீடியோவை கைப்பற்றியுள்ளனர். எனவே இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையா இருங்க!
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள், மே 12 அல்லது மே 13-ம் தேதி வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுகள் முடிந்த நிலையில், முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு முடிவுகள் மே 12, மே 13ம் தேதிகளில் வெளியானது. அதனால் இந்த ஆண்டும் அதே தேதியிலேயே வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. SHARE IT.
30 ஆண்டுகளாக ஒரே அரசு பதவியில் இருப்பவர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல் அரசாணை வெளியாகியுள்ளது. TN நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், 1998ம் ஆண்டு அரசாணை, 2009, 2017ம் ஆண்டு அரசாணைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளர், பணியிட இடமாற்றம் மூலம் பதிவு எழுத்தர் நியமனத்தை துறந்தாலும் போனஸ் உயர்வு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.
நடப்பு IPL சீசனில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் SRH அணி, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், கேப்டன் பேட் கம்மின்ஸின் மனைவி பெக்கி கம்மின்ஸ் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதில், பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவது போன்ற போட்டோக்கள் இருக்கின்றன. அதில், ‘Goodbye India’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை பங்குச்சந்தையில் கடந்த 3 நாட்களில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக, நேற்று மட்டும் ஒரே நாளில் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வை சந்தித்தன. இந்த 3 நாள் உயர்வால், மும்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு ரூ.18.42 லட்சம் கோடி கிடைத்தது. அதேபோல், மும்பை பங்குச்சந்தையின் முதலீடு மதிப்பு ரூ.419.60 லட்சம் கோடியாக அதிகரித்தது.
தற்போது தமிழகம் முழுவதும் நகரங்களில் இயக்கப்படும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி தர வேண்டுமென அண்மையில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிர்வாகத்தால் இயக்கப்படும் பஸ்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகள் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் தான் சொல்வதை கேட்காதவர்கள் விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள் என்று சீமான் காட்டமாக பேசியிருக்கிறார். கட்சியினர் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் நான் சொல்பவர்கள்தான் வேட்பாளர்கள், அதனை மீறி யாராவது போட்டியிட நினைத்தால், விஜய் கட்சிக்கு சென்றுவிடுங்கள் என்று கூறினார். சீமானின் இப்பேச்சு குறித்த உங்களது கருத்து என்ன?
நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் செய்த ஒரு காரியம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில்
பழங்குடி கிராமமான பெடபாடுவுக்கு சென்றிருந்த அவர் வயதான பெண்கள் உள்பட பலர் காலில் செருப்பின்றி இருந்ததை கண்டுள்ளார். உடனடியாக அந்த கிராமத்தில் இருக்கும் 350 பேருக்கு செருப்பு வாங்கி கொடுக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றியும் உள்ளார். யார் சாமி இவர்?
2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதிதான் ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பமானது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. அதில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய நியூசிலாந்தின் ஜாம்பவான் மெக்கல்லம் சரவெடியாக 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார். இதனால் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. பிறகு விளையாடிய ஆர்சிபி 82 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. மிஸ் யூ மெக்கல்லம் சார்!
Sorry, no posts matched your criteria.