India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுகர் பிரச்னைக்காக ஆண்டு முழுக்க இனிப்புகள் சாப்பிடாமல் கட்டுப்பாடோடு இருந்த நீங்கள், தீபாவளிக்கு Sugar Diet-அ மீறப்போறீங்களா? வேண்டாம். என்னைக்கோ ஒருநாள் என கூறி அனைத்து இனிப்புகளையும் சாப்பிட்டால் அடுத்த 1 வருடம் சிரமப்படப்போவது நீங்கள்தான். எனவே, இனிப்புகளை தவிர்த்துவிட்டு, Sugar Free & Fruit Based Sweet-களை சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்கள் குடும்பத்தாருக்கு SHARE THIS.
சில நாட்களில் தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை தங்கத்தில் முதலீடு செய்யாமல், புதிதாக செய்தால் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர். எனவே, புதிதாக தங்கத்தில் முதலீடு செய்வோர் கொஞ்சம் காத்திருக்கலாம். சர்வதேச பொருளாதார நிலையை பொறுத்து முடிவு செய்யுங்கள்; 2013ல் ஒரே நாளில் (28%) தங்கம் விலை குறைந்ததுபோல் நல்ல விஷயம் நடக்கலாம் என்கின்றனர்.
பருவமழை காலத்தில் டெங்கு, ஃபுளு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனால், அனைத்து மாவட்ட அரசு ஹாஸ்பிடல்களில் போதிய மருந்துகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். ஜெனரேட்டர்கள், ஆக்ஸிஜன் வினியோக அமைப்புகள் 72 மணி நேர தொடர் பயன்பாட்டுக்கு எரிபொருள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் படுக்கைகளை அதிகரித்து தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் அஜ்மல் அமீருக்கு எதிராக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் பல பெண்களுடன் பாலியல் ரீதியாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் ஐடியில் இதுதொடர்பான பல ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார்.
விஜய் தலைமையில் பலமான புதிய கூட்டணி அமையும் என <<18041840>>டிடிவி தினகரன்<<>> பேசியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. NDA-வில் இருந்து வெளியேறிய பின்னர், TVK கூட்டணியில் இணைய டிடிவி தீவிர காட்டி வருகிறாராம். விஜய் தரப்பும், தங்களது கூட்டணியை வலுப்படுத்த டிடிவி உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தவெக கூட்டணிக்கு செல்ல TTV தினகரனும், இசைவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Planks செய்வதால் வயிற்று கொழுப்பு குறைவதுடன், எலும்புகள் வலுவடைகின்றன *இதனை செய்ய, கைகளை மடக்கி 2 கைமுட்டிகளையும் தரையில் ஊன்றவும் *கால்களை நீட்டி, கால் விரல்களால் உடலை சமநிலைப்படுத்தவும் *வயிற்றுத் தசைகளை இறுக்கிப் பிடித்து, இடுப்பும் முதுகும் நேராக இருக்கச் செய்யவும் *பார்வையை தரையில் வைக்கவும் *இந்த நிலையில், முடிந்தவரை சில விநாடிகள் இருக்கலாம். பிறகு ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் செய்யலாம்.
அக்.20 தீபாவளியன்று டூர் போகலாம், பட்டாசு வெடிக்கலாம் என பலரும் பல கனவில் உள்ளனர். அவர்களுக்கு வருண பகவான் ஷாக் கொடுத்துள்ளார். அன்றைய தினம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. அதனால், கவனமா இருங்க!
*இந்திய பங்குச்சந்தைகள் ₹13,840 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. *2025 Q2 காலாண்டில், தனியார் வங்கிகளிலேயே அதிகபட்சமாக HDFC ₹19,610 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. *GST குறைப்பின் மூலம் PM மோடியின் தீபாவளி பரிசு மக்களுக்கு சென்றடைந்ததாக நிதியமைச்சர் பேச்சு. *RBL வங்கியில் ₹26,850 கோடி முதலீடு செய்ய உள்ளதாக UAE-ஐச் சேர்ந்த Emirates NBD அறிவிப்பு.
தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த நகராட்சிகளில் இருந்து மழைக்கால தடுப்பு பணிகளில் ஈடுபடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடவுளிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம் ➥வேண்டும் பொழுது கண்களில் கண்ணீர் வந்தால் வேண்டுதல் பலிக்கும் ➥குழந்தை அழும் சத்தம் கேட்டால், கடவுள் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம் ➥வேண்டும் பொழுது பல்லி சத்தமிட்டால் வேண்டுதல் பலிக்கும் ➥கடவுளிடம் வேண்டும் பொழுது மணி அடிக்கும் சத்தம் கேட்டாலும், கடவுள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் என நம்பப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.