India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க, ஜப்பான் PM சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்த டிரம்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியா – பாக்., மோதல் உள்பட 7 போர்களை தான் நிறுத்தியதாகவும் இன்று வரை டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில் தான், ஜப்பான் PM மூலம் மீண்டும் நோபல் பரிசு கோரிக்கை எழுந்துள்ளது.

*சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
*உடற்பருமன் அதிகரிக்கலாம்.
*Leptin என்ற ஹார்மோன் அளவு குறைவதால், பசியுணர்வு அதிகமாகி, அளவுக்கு அதிகமான உணவை எடுக்க நேரிடும்.
*வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
*தினமும் காலை உணவை தவிர்ப்பதால், மதிய உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். *காலை உணவை தவிர்ப்பவர்கள், பெரும்பாலும் ஸ்நாக்ஸ் பிரியர்களாக இருப்பர் என ஆய்வுகள் கூறுகிறது.

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறியது இயற்கையான ஒன்று என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். ஆனால், அனுமதி பெற்றும் கூட நினைத்த நேரத்தில் அரசியல் தலைவர்களால் ஒரு இடத்திற்கு செல்ல முடியவில்லை என்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்த்து அனைத்து கட்சி கூட்டம் போடும் திமுக, மழைநீர் வடிகால் பிரச்னையை சரிசெய்வதற்கு கூட்டம் போட்டதுண்டா என்றும் கேள்வி எழுப்பினார்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் இந்த 3 தாவரங்களை நடுவது வீட்டிற்கு செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும் எனப்படுகிறது.
*துளசி: வீட்டின் முற்றத்திலோ அல்லது கிழக்கு திசையிலோ துளசி செடியை வைத்திருப்பது சிறந்தது *மணி ப்ளாண்ட்: வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்திருப்பது நல்லது *நெல்லிக்காய் மரம்: வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். SHARE IT.

வங்கக்கடலில் உருவான <<18135063>>மொன்தா<<>> புயல், நள்ளிரவு 12:30 மணிக்கு கரையைக் கடந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI-க்கு மாற்றியதை எதிர்த்து, TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், புதிய இடையீட்டு மனுவை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, SC-ல் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை CBI விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கரூர் துயர வழக்கு போன்று, CBI விசாரணையை கண்காணிக்க Retd நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஆஸி.,வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை தொடங்குகிறது. முன்னதாக, கில் தலைமையில் விளையாடிய 3 ODI போட்டிகள் கொண்ட தொடரை, 2-1 என்ற கணக்கில் ஆஸி., கைப்பற்றியது. எனவே, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது பிளேயிங் 11-ஐ கமெண்ட் பண்ணுங்க.

தீபாவளியை அடுத்து டெல்லியில் காற்று மாசு அதிகமானது. இதனால் 53 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை மழை பெய்ய வைப்பதற்காக, மேக விதைப்பு நடைபெற்றது. இதனை ‘மிகப்பெரிய மோசடி’ என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. உண்மையாகவே மழை பெய்தால், அவர்கள் (பாஜக) மழைக் கடவுளான இந்திரனின் புகழை திருடக்கூடும் என்றும் அக்கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. ஏற்கெனவே சில சமயங்களில் டெல்லியில் செயற்கை மழை பொழிய வைக்கப்பட்டது.

மற்ற நடிகைகளை போலவே நடிக்கவும், தோற்றமளிக்கவும், நடனமாடவும் கடினமாக முயற்சித்ததாக சமந்தா கூறியுள்ளார். ஆனால், அந்த நடிப்பை தற்போது திரும்பி பார்க்கையில் மிகவும் அபத்தமானதாக இருப்பதாக நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டதும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவிலிருந்து வெளியே வந்ததும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் என சமந்தா கூறியிருந்தார்.

‘மீண்டும் பாபர் மசூதி கட்டப்படும்’ என்று சட்டக்கல்லூரி மாணவர், 2020-ல் FB-ல் பதிவிட்டிருந்தார். இந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி மாணவர் தரப்பில், SC-ல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த கோர்ட், வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. உ.பி.,யின் லக்கிம்பூர் கேரி கோர்ட், இந்த வழக்கை தனது சொந்த விருப்பத்தின் பேரில் பரிசீலிக்கலாம் என்றும் SC அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.