News October 29, 2025

மழைக்காலத்தில் பருக வேண்டிய முக்கிய கசாயம்!

image

✦தேவை: மிளகு, சீரகம், திப்பிலி, ஓமவல்லி இலை, சுக்கு, பனங்கற்கண்டு, வர கொத்தமல்லி ✦செய்முறை: மேல் குறிப்பிட்ட அனைத்தையும் நன்கு இடித்து, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இதனால், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை குணமாவதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். SHARE IT.

News October 29, 2025

மாரி செல்வராஜை ஊக்கப்படுத்திய மணிரத்னம்

image

மாரி செல்வராஜ் தான் உண்மையான பைசன் என மணிரத்னம் பாராட்டியுள்ளார். உங்கள் படத்தை பார்த்து பெருமைப்படுவதாகவும், இந்த குரல் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு, என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் நன்றி என மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். ‘பைசன்’ படத்தை பார்த்து CM தொடங்கி பல பிரபலங்கள், மாரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News October 29, 2025

திமுக கூட்டணியில் இணைகிறாரா ராமதாஸ்?

image

அண்மை கால அரசியல் நிகழ்வுகள் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைவதற்கான சிக்னல்களாக பார்க்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் விசிக, பாமக ஒரு அணியில் இருக்க முடியாது என பேசி வந்த திருமா, அண்மையில் திமுக கூட்டணியில் ராமதாஸ் வருகிறாரா என்ற கேள்விக்கு சைலண்டாக சென்றார். நேற்று இரவு, திமுக கூட்டணியில் உள்ள கொமதேக தலைவர் ஈஸ்வரன் திடீரென ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

News October 29, 2025

குல்தீப் or அர்ஷ்தீப் சிங்.. இன்று விளையாட போவது யார்?

image

ஆஸி., அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணியில் பவுலர்களாக யார் யார் இடம்பெறுவார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது. பும்ரா, வருண் ஆகியோருடன் ODI-யில் சிறப்பாக செயல்பட்ட ராணாவும் இருப்பார் என்றே நம்பப்படுகிறது. ஆல்ரவுண்டர்களாக துபே & அக்சர் இடம்பெறும் நிலையில், அணியில் ஒரு இடம் மட்டுமே பாக்கி இருக்கும். அதற்கு, குல்தீப் & அர்ஷ்தீப் இடையே போட்டி நிலவும். இருவரில் யார் அணியில் இடம்பெறலாம்?

News October 29, 2025

விலை ₹4,000 வரை உயருகிறது

image

மெமரி ‘சிப்’ தட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5%-10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. டிரெண்ட் போர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் எல்பிடி, டிஆர்4 X, என்ஏஎன்டி பிளாஷ் மெமரி சிப்களின் விநியோகம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவுகள் அதிகமாவதால் அதனை ஈடுசெய்ய விலையை உயர்த்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

News October 29, 2025

₹44,900 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

புலனாய்வு துறையில் உள்ள 258 கிரேடு 2 தொழில்நுட்ப பிரிவு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.16. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

News October 29, 2025

களத்திற்கு செல்லாத ராகுல்.. அச்சம் என விளாசும் NDA!

image

பிஹாரில் அடுத்த வாரம் தேர்தலை வைத்து கொண்டு ராகுல், பிரசார களத்திற்கு செல்லாதது காங்கிரஸ் கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாஜக, ஜேடியூ தலைவர்கள், ராகுல் காந்தி அச்சத்தில் ஓடி ஒளிந்து கொண்டதாக சாடி வருகின்றனர். ஏற்கெனவே கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் RJD, காங்கிரஸ் 10 தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவதால் கூட்டணியின் ஒற்றுமையின்மை என பேசுபொருளாகியுள்ளது.

News October 29, 2025

வருண்குமார் IPS கவுன்சிலிங் போக வேண்டும்: சீமான்

image

வருண்குமார் IPS, தனக்கெதிராக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என MHC-ல் சீமான் தெரிவித்துள்ளார். வருண்குமார் மனநல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் எப்படி IPS ஆனார் என்றும், பதில் மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் சிறை சென்றவர் தான் வருண்குமார் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

News October 29, 2025

BREAKING: கூட்டணியில் இணைகின்றனர்.. திடீர் டிவிஸ்ட்

image

தேமுதிக, 8 தொகுதிகள் என்ற உடன்படிக்கையுடன் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு எந்த தேர்தலிலும் வெற்றி பெறாததால் 2026 தேர்தலை தேமுதிக மிக முக்கியமானதாக கருதுகிறது. இதனால், வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியில் சேர நிர்வாகிகள் தலைமைக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 29, 2025

தட்டையான வயிறு பெற இந்த பயிற்சி பண்ணுங்க!

image

தட்டையான வயிற்றை பெற Bicycle Crunches பண்ணுங்க ★தரையில் மல்லாந்து நேராக படுக்கவும். 2 கைகளையும் தலையின் பின்னால் வைத்து, 2 கால்களையும் முட்டிவரை மடக்கி வைக்கவும். இப்போது, இடது காலை மார்பு நோக்கி கொண்டு வரும்போது, வலது முழங்கை அதை தொடும் வகையில் உடலை மடக்கவும். அடுத்து வலது காலை கொண்டு வரும்போது, இடது முழங்கையை தொடவும். இப்படி மாறி மாறி செய்யவும். ஒரு நிமிடத்திற்கு 5–6 முறை செய்யலாம்.

error: Content is protected !!