News October 29, 2025

சற்றுமுன்: வெள்ளி விலை மீண்டும் ₹1,000 உயர்ந்தது

image

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(அக்.29) மீண்டும் ₹1,000 உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹166-க்கும், பார் வெள்ளி ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் சரிந்து வந்த வெள்ளியின் விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளதே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். வெள்ளி விலை உயர்வால் அதில், முதலீடு செய்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து?

News October 29, 2025

Gmail யூஸர்களே.. இத உடனே மாத்துங்க!

image

183 மில்லியனுக்கும் அதிகமான G-mail, Yahoo, Outlook அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது. இதனை ஆஸ்திரேலியாவை சேர்ந்த CyberSecurity வல்லுநர் ட்ராய் ஹன்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயனர்கள் தங்களின் G-mail, Yahoo, Outlook அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் உடனே பகிருங்கள்.

News October 29, 2025

BREAKING: அமைச்சர் நேரு கைதாகிறாரா?

image

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கப்பட்டுள்ளதாக ED கூறியுள்ளது. அமைச்சர் நேரு, அவரது சகோதரர் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ED கடிதம் எழுதியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி சிறை சென்றார். அதே பாணியில் நேரு கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News October 29, 2025

‘DUDE’ படம் அருவருப்பா இருக்குது: மோகன் ஜி

image

இன்னொருத்தருக்கு பிறந்த குழந்தைக்கு, ஹீரோ தன்னோட இனிஷியல் போட்டுக்க, அவங்க வீட்ல பர்மிஷன் கொடுக்கிறத பார்க்கும்போது அருவருப்பா இருக்கு என ‘Dude’ படம் குறித்து மோகன் ஜி தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்த தலைமுறைக்கு தவறான உதாரணம் என குறிப்பிட்ட அவர், மிகவும் முற்போக்காக செல்கிறோம் என்ற நினைப்பில் இப்படி ஒரு படத்தை எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். உங்க கருத்து என்ன?

News October 29, 2025

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இதுதான் வித்தியாசம் : அப்பாவு

image

ஒரு பிரச்னை என்றதும், சம்பவ இடத்துக்கு இரவோடு இரவாக செல்லும் பழக்கம் கொண்டவர் CM ஸ்டாலின் என அப்பாவு தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்யோ இந்த நேரம் தூங்கி இந்த நேரம் எழ வேண்டும், இவ்வளவு தூரம்தான் பயணிக்கணும் என ஷெட்யூல் வைத்து அரசியல் செய்பவர் என பேசியுள்ளார். கரூர் துயரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியது அரசியலில் ஒரு கரும்புள்ளி எனவும் கடுமையாக சாடினார்.

News October 29, 2025

BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

கடந்த சில நாள்களாக மளமளவென சரிந்து வந்த தங்கம் விலை இன்று(அக்.29) திடீரென உயர்வை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹135 உயர்ந்து ₹11,210-க்கும், சவரன் ₹1,080 உயர்ந்து ₹89,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் குறைந்து வரும் நிலையிலும், நம்மூர் சந்தையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 29, 2025

திரைப்படங்களான பிரபல நாவல்களின் பட்டியல்!

image

புத்தகங்களை மையமாக கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரணம் விஷயமல்ல. காரணம் புத்தகம் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல அந்த கதைக்கு வடிவம் கொடுத்திருப்பர். அந்த கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து, மையக்கருவையும் மாற்றாமல் படமாக எடுத்து ஜெயிப்பது கடினமான விஷயம். அப்படி தமிழ் நாவல்களை மையமாக வைத்து, நமது தமிழ் இயக்குநர்கள் எடுத்த சில படங்களை பற்றி அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க.

News October 29, 2025

நடிகர் பிரபு வீட்டில் பதற்றம்.. போலீசார் குவிப்பு!

image

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. அதேபோல் அமெரிக்க துணை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக CM ஸ்டாலின் தொடங்கி, EPS, ரஜினி, விஜய் என பல பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது.

News October 29, 2025

ChatGPT-யில் அதிகரிக்கும் தற்கொலை உரையாடல்கள்

image

மனிதர்களுடன் நாம் செலவழிக்கும் நேரம் குறைத்து செல்போன், கணினி உள்ளிட்டவற்றுடன் கடத்தும் நேரம் அதிகரித்துள்ளது. மனித உரையாடல்கள் குறையும் போது வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழக்கும் இளம் தலைமுறைக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. இதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு வாரமும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை தொடர்பான உரையாடல்களை, ChatGPT-யிடம் நடத்துவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.

News October 29, 2025

மறைந்தும்.. மறையாத ‘கவிஞர் வாலி’

image

கருத்தாழமிக்க எளிய தமிழ் சொற்களை பாடல்களில் அமைத்து, அழியா புகழ் பெற்ற கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள். சினிமா பாடல்களில் அவரின் முத்திரை இல்லாத இடமே இல்லை எனலாம். ‘மின்வெட்டு நாளில் இங்கு, மின்சாரம் போல வந்தாயே’ என்ற வரிகளை எழுதிய போது வாலிக்கு வயது 81. அவருக்குள் காதலும், எழுத்தும் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு இந்த வரிகள் சிறந்த எடுத்துகாட்டு. வாலியின் வரிகளில் உங்களை கவர்ந்தது எது?

error: Content is protected !!