India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய உரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நடப்பு சம்பா பருவத்தில் பயிர் சாகுபடிக்கான யூரியா, டி.ஏ.பி உரங்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்யப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, நாளை முதல் பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ.4 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முழுமனதுடன் வரவேற்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தகுதியுள்ளவர்களுக்கு ஓட்டுரிமை உறுதி செய்யப்படும் என்றும் போலியான வாக்காளர்கள் முற்றிலும் நீக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். SIR நடவடிக்கையானது, நேர்மையான வாக்காளர்களுக்கு நம்பிக்கையையும், புதிதாக சேரும் நபர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கும் என்று SM-ல் பதிவிட்டுள்ளார்.

LPG சிலிண்டர்களை இனி ஈசியாக வாட்ஸ்அப்பிலும் புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து ‘HI’ அல்லது ‘Refill’ என்று மெசேஜ் செய்தாலே போதும். புக் செய்வது, டெலிவரி டிராக் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் 24 மணி நேரமும் வாட்ஸ்அப்பில் பெறலாம். பாரத் – 1800 22 4344, Indane – 75888 88824, HP- 92222 01122 என்ற எண்களில் வாட்ஸ்அப் செய்யலாம். SHARE IT.

நடிகரும் பாடலாசிரியருமான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு(102) நேற்று அதிகாலை காலமானார். தஞ்சை புது காரியாப்பட்டியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், கிராமத்தினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, இன்று சிவசங்குவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்தனர். அதன்பின், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP

IND vs AUS மோதும் முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், Aggressive பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். மிகவும் திறமை வாய்ந்தவர் அபிஷேக் என பாராட்டியுள்ளார். அவர் நிச்சயம் எங்களுக்கு சவாலாக இருப்பார் எனவும், இதுபோன்ற வீரர்களை எதிர்கொண்டுதான், தங்களின் திறனை பரிசோதிக்க முடியும் என்றும் மார்ஷ் கூறியுள்ளார்.

தவெக நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் N.ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், 2026 தேர்தல் வியூகம், கட்சியை வலுப்படுத்துதல், தொண்டர் படை உருவாக்கம் குறித்து
ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. விஜய் அறிவித்த புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது நீங்கள் அவர்களை அடித்திருப்பீர்கள். இது தவறு என தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல் அப்படியே கடந்தும் சென்றிருப்பீர்கள். இதை கவனிக்கும் உங்கள் குழந்தையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்டு பழகுங்கள். இதன்மூலம் மரியாதையையும், மன்னிப்பு கேட்கும் குணத்தையும் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். SHARE.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு வரும் 31-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றி விழாவில், அபிஷன் ஜீவிந்த் தனது காதலியை அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு தயாரா என்று அவரிடம் கேட்டிருந்தார். காதலியும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனிடையே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தயாரிப்பாளர் அபிஷன் ஜீவிந்திற்கு கல்யாண பரிசாக BMW கார் வழங்கியுள்ளார்.

மொன்தா புயல் கரையை கடந்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கை, ராணிப்பேட்டை, வேலூர், கோவை, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!
Sorry, no posts matched your criteria.