News November 18, 2024

ரேஷன் கடை வேலைக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

image

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கடந்த 7ஆம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில், தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை <>http://www.drbcbe.in<<>> என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

News November 18, 2024

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமண பத்திரிகை

image

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது அவர்களின் திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

News November 18, 2024

ரூ.1082,00,00,000 பறிமுதல்: EC

image

சட்டப்பேரவைத் தேர்தல், இடைத் தேர்தல் தொகுதிகளில் ரொக்கப் பணம், மதுபானம் உள்பட ரூ.1,082 கோடி மதிப்புடைய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக EC தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.660 கோடி, ஜார்க்கண்டில் ரூ.198 கோடி, இடைத்தேர்தல் தொகுதிகளில் ரூ.223 கோடி பறிமுதலாகி இருப்பதாக EC கூறியுள்ளது. 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 7 மடங்கு அதிகமெனவும் குறிப்பிட்டுள்ளது.

News November 18, 2024

கொரோனா தடுப்பூசி போட்டதால் மாரடைப்பா?

image

தடுப்பூசி போடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே மாரடைப்பு, சர்க்கரை நோய், ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகமுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் உடலில் பல சேதங்களை ஏற்படுத்துவதாகவும், தடுப்பூசி போட்டதால் இதுபோன்று நடப்பதில்லை என்றும் விளக்கமளித்தார். மேலும், அவசியமின்றி ஆன்டிபயாட்டிக் மருந்து பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

News November 18, 2024

‘மூட் சரியில்லை’ என்றால் லீவு எடுத்துக்கலாம்

image

மூட் இருக்கிறதோ இல்லையோ, வேலைக்கு போயாக வேண்டிய நிலையில் தான் பெரும்பாலானோர் இருக்கிறோம். ஆனால், பணியாளரின் ஒர்க்- லைஃப் பேலன்ஸ் பராமரிக்க சீனாவின் பாங் டாங் லாய் என்ற கம்பெனி அளிக்கும் ஆஃபர் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். ஆம், அந்த கம்பெனியில் பணியாளர் ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தாலோ, மகிழ்ச்சியாக இல்லையென்றாலோ, ‘unhappy leave’ எடுத்துக்கலாமாம். அதுவும் 10 நாட்களுக்கு பர்மிஷன் இல்லாமலே எடுத்துக்கலாமாம்.

News November 18, 2024

ரேஷன் அரிசி கடத்தலால் ரூ.69,000 கோடி இழப்பு!

image

நாடு முழுவதும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தலால் ரூ.69,108 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக செலவு கணக்கெடுப்பு(HCES) தரவுபடி ஆக. 2022 – ஜூலை 2023 வரை 20 மில்லியன் டன் ரேஷன் கடத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் ரேஷன் பொருட்களில் 28% ஆகும். ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதால் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 18, 2024

‘கங்குவா’ 12 நிமிட காட்சிகள் நீக்கம்

image

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான ‘கங்குவா’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படத்தில் இரைச்சல் அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், Volume சற்று குறைக்கப்பட்டது. இந்நிலையில், ரசிகர்களின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு தற்போது 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. 2 மணி நேரம் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய புதிய வடிவம் விரைவில் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என தெரிகிறது.

News November 18, 2024

தவெகவுடன் கூட்டணியா? அதிமுக விளக்கம்

image

2026 தேர்தலில் ADMK- TVK கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ADMKவுக்கு 154, TVKவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்ய உள்ளதாகவும் செய்திகள் பரவின. TVK தரப்பு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், TVKவுடன் கூட்டணி வைப்பதாக எப்போது அறிவித்தோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கூட்டணி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

News November 18, 2024

அடுத்த மாதம் இந்தியா வரும் இலங்கை அதிபர்!

image

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசநாயக அடுத்த மாதம் அரசுமுறை பயணமாக இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றது. அண்டை நாடான இலங்கையில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம், இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில் அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News November 18, 2024

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

image

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் TASMACல் டிஜிட்டல் முறையில் மதுவிற்பனை செய்யும் முறை அமலாகியுள்ளது. இதனால், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், பல இடங்களில் ரசீது வழங்கப்பட்டாலும் கூடுதலாகக் கடைக்காரர்கள் ₹10 கட்டாயமாக வசூலிக்கின்றனர். இதனால், மதுப்பிரியர்கள், ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என புலம்பியபடியே மதுவை வாங்கிச் செல்கின்றனர்.