News August 9, 2025

கால் பாதவலி நீக்கும் உட்கட்டாசனம்

image

✦மூட்டுக்கள் நன்கு பலப்படுகின்றது.
✦தோள் பட்டைகளில் ஏற்படும் இறுக்கத்தைப் போக்கும்.
கால் பாதவலி நீக்கி கால்களுக்கு வலிமை தரும்.
✦10-15 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம்.
✦இதயம் வலுப்பெறும்.
✦நரம்பு மண்டலம் சீராக இயங்கும்.
✦மூட்டுவாதம், அஜீரணம் வராது.

News August 9, 2025

மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ₹34 கோடி வருவாய்

image

PM மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் ₹34 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. மேலும், கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளை பயன்படுத்தி இந்நிகழ்ச்சி தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 அக்.3-ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

News August 9, 2025

லிங்க வடிவில் காட்சி தரும் அம்மன்!

image

அருவுருவமான லிங்க வடிவிலான அம்மன் கோவை, கொழுமம் மாரியம்மன் கோவிலில் காட்சி தருகிறார். அமராவதி ஆற்றில், ஒருவருக்கு மீண்டும் மீண்டும் லிங்க வடிவிலான கல் ஒன்று சிக்கியுள்ளது. அவரது கனவில் தோன்றிய அம்பாள், ‘லிங்க வடிவில் தரிசனம் தந்தது நானே’ எனக் கூற, அங்கேயே கோவில் கட்டி, மாரியம்மன் என பெயர் சூட்டி, ஊர் மக்கள் வழிபட தொடங்கினர். இங்கு, இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் மாரியம்மன் காட்சி தருகிறாள்.

News August 9, 2025

மினுமினுக்கும் உடையில் ‘அனேகன்’ ஹீரோயின்

image

இன்ஸ்டாவில் படு ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அமைரா தஸ்தூர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மினுமினுக்கும் உடையில் காந்தக் கண்களைக் கொண்டு அவர் பார்க்கும் பார்வைக்கு, ரசிகர்கள் லைக்ஸ் மாரி பொழிந்து வருகின்றனர். ‘அனேகன்’ படத்தின் மூலம் அமைரா தமிழிழ் அறிமுகமானார். அதையடுத்து பிரபுதேவா உடன் ‘பஹீரா’ படத்தில் நடித்தார். தற்போது ஹிந்தியில் கவனம் செலுத்துகிறார்.

News August 9, 2025

வங்கிக் கணக்கு தொடர்பாக RBI புதிய உத்தரவு

image

உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்குகளை செட்டில் செய்வது தொடர்பாக, வங்கிகளுக்கு RBI புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த வாடிக்கையாளரின் டிபாசிட், லாக்கரில் உள்ள பொருள்களை கேட்டு குடும்பத்தினர் (அ) நாமினிகள் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த விண்ணப்பங்களை 15 நாள்களுக்குள் பரிசீலித்து உரியவர்களுக்கு வழங்க வேண்டும். தாமதமாகும் நாள்களுக்கு 4% ஆண்டு வட்டியை கணக்கிட்டு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

News August 9, 2025

5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று 35-45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 9, 2025

பொதுக்குழு விவகாரம்.. ராமதாஸ் மேல்முறையீடு

image

அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்து இருந்தார். உடனே, அவருக்கு முன்பே வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக அன்புமணி அறிவித்த நிலையில், அதற்கு தடைகேட்டு ராமதாஸ் கோர்ட்டுக்கு சென்றார்.

News August 9, 2025

வறுமை இல்லாத மாநிலம் தமிழகம்: CM ஸ்டாலின்

image

வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு விழாவில் பேசிய அவர், அயோத்தியின் பெருமையை சொல்லும் போது கூட, காவிரி நாட்டுடன் கம்பர் ஒப்பிட்டதாகவும், கம்பர் கண்ட கனவு படி தமிழகம் பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும் அவருக்கு ஆற்றும் தொண்டு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

ஆடி மாத சனிக்கிழமையில் யாரை வழிபடலாம்?

image

எவருக்குமே பயப்படாதவர்களும் கூட, சனீஸ்வரருக்குப் பயப்படுவார்கள். அதனால்தான் சனிபகவானை ஈஸ்வரப் பட்டம் சேர்த்து சனீஸ்வரர் என அழைக்கிறோம். ஆடி மாத சனிக்கிழமையில் சனீஸ்வரரை வணங்கி காகத்துக்கு உணவளித்தால், சனி கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. நம் முன்னோர்களின் வடிவமாகத் திகழும் காகத்துக்கு உணவிடுவதால் அவர்களும் நம்மை ஆசீர்வதிப்பார்கள்.

News August 9, 2025

போலி வாக்காளர்களால் திமுக வெற்றி: இபிஎஸ் சாடல்

image

போலி வாக்காளர்களால் தான் சென்னை மாநகராட்சியில் திமுக வெற்றி பெறுவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்து கொடுத்ததாகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுகதான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக இருப்பதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!