News August 9, 2025

TN அரசு செய்துள்ளது NEP-யின் Copy கொள்கை: நயினார்

image

TN அரசு வெளியிட்டுள்ளது மாநில கல்விக் கொள்கை அல்ல தேசிய கல்விக் கொள்கையின் காப்பி(Copy) கொள்கை என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில்(NEP) மும்மொழி கொள்கை மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். இதே கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களான தமிழிசை, <<17341526>>அண்ணாமலை<<>> உள்ளிட்டோரும் கூறியுள்ளனர்.

News August 9, 2025

ஒரு ரூபாய் செலவில்லை… இலவச மருத்துவ ஆலோசனை

image

மத்திய அரசின் தொலைதூர மருத்துவ சேவை தான் இ-சஞ்சீவனி (esanjeevani.in) திட்டம். இதன்மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தொலைபேசி / வீடியோ கால் அழைப்பு மூலம் உங்கள் நோய்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். ஆலோசனையுடன் டாக்டர் இ-பிரிஸ்கிரிப்ஷனும் கொடுப்பார். இதை பார்மஸியில் காட்டி மருந்துகளும் வாங்கலாம். ஆயுர்வேத டாக்டர்களிடமும் ஆலோசனை பெறலாம்.

News August 9, 2025

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சி

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ₹87.71 ஆக உள்ளது. உள்நாட்டு பங்குச்சந்தைகளின் சரிவால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருகிறது. குறிப்பாக இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மையால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

News August 9, 2025

SPORTS ROUND-UP: கைவிடப்படும் ISL?

image

★சின்சினாட்டி ஓபன்: முதல் சுற்றில் 4- 6, 4- 6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஜெசிகாவிடம் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி.
★ZIM-க்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2-வது நாளில் NZ 601/ 3 குவிப்பு. நிக்கோல்ஸ் 150*, ரச்சின் 165* ரன்கள் குவிப்பு.
★பணப்பிரச்னையால் முடங்கிய ISL: இந்த ஆண்டு நடக்காது எனவும் தகவல்.
★சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றில் அர்ஜூன் எரிகைசி நெதர்லாந்தின் ஜோர்டென் வானுடன் டிரா செய்தார்.

News August 9, 2025

‘கூலி’ இண்டர்வெல் செம ஷாக்கிங்கா இருக்குமாம்!

image

‘கூலி’ இண்டர்வெல் பிளாக் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளை காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை எனவும், அதை தான் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. வரும் 14-ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.

News August 9, 2025

புதிய வரிவிதிப்புகளால் கோடி கோடியாக பணம்: டிரம்ப்

image

புதிய வரிவிதிப்புகளால் அமெரிக்கா பயனடைந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் பங்குச்சந்தைகள் உச்சத்தை அடைந்து, கோடிக்கணக்கான பணம் நாட்டிற்கு வருவதாகவும், புதிய வரிவிதிப்புகளுக்கு கோர்ட் தடை போட்டால், அது 1929 Great depression நிலைக்கு நாடு சென்றுவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமது நாட்டிற்கு வெற்றியும், மகத்துவத்துமும் தான் தேவை, தோல்வி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

அதிகாலை தியானத்தின் அபார பலன்கள்!

image

அமைதியான அதிகாலை வேளையில், தியானம் செய்வது பல நல்ல நன்மைகளை அளிக்கும்
◆தினமும் தியானம் செய்வது ஒழுக்கத்தையும், தினசரி பழக்க வழக்கத்தையும் மேம்படுத்துகிறது.
◆எண்ணங்களும், உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
◆மன அழுத்தம் குறைகிறது.
◆செய்யும் வேலையில் கவனம் கூடுகிறது.
◆செரடோனின் & டோபமைன் போன்ற உணர்வுமிகுந்த ஹார்மோன்கள் வெளியேற உதவுகிறது. SHARE IT.

News August 9, 2025

திமுக உறுப்பினர் சேர்க்கை நீட்டிப்பு? 13ல் ஸ்டாலின் முடிவு

image

ஆக.13-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். இதில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது OTP பெறக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 13-ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை நீட்டிக்கலாமா என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.

News August 9, 2025

கழிவறையில் செல்போன் யூஸ் செய்வதால் மூலநோய் வரலாம்!

image

டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக கழிவறையில் நீண்டநேரம் அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள் ஏற்படுமாம். அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால், ஆசனவாய் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதோடு ரத்த நாளங்கள் வீங்கி மூலநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். ஜாக்கிரதை..! SHARE IT.

News August 9, 2025

டிப்ளமோ தேர்வுகளில் புது மாற்றம்

image

டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டீன்ஸ் (MCQ) முறையில் நடத்த, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. வரும் அக்டோபரில் நடக்க உள்ள தேர்வுகளில், ஒரு கேள்விக்கு பல பதில்கள் வழங்கப்பட்டு, சரியான பதிலை தேர்வு செய்யும் கேள்வித்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகள், குறுகிய பதில்கள் அளிக்கும்படி சில கேள்விகள் இடம்பெறும்.

error: Content is protected !!